சி. எஸ். வெங்கடேசுவரன்

இந்திய திரைப்பட விமர்சகர் மற்றும் பேராசிரியர்

வெங்கடேசுவரன் சித்தூர் சுப்பிரமணியன் (Venkiteswaran Chittur Subramanian) (பிறப்பு 1956 மே 23) இவர் ஓர் இந்திய திரைப்பட விமர்சகரும், பேராசிரியரும், ஆவணப்படத் தயாரிப்பாளரும், இந்தியாவின் கேரளாவின் சாலக்குடியில் இருந்து வந்த எழுத்தாளரும் ஆவார். இவர் முக்கியமாக ஆங்கிலத்திலும் மலையாள மொழியிலும் எழுதுகிறார். 2009 ஆம் ஆண்டில் சிறந்தத் திரைப்பட விமர்சகருக்கான தேசியத் திரைப்பட விருதை வென்றார். [5]

முனைவர்.[1]
சித்தூர் வெங்கடேசுவரன் சுப்பிரமணியன்
சி. வெ. சுப்ரமணியன்
பிறப்பு23 மே 1959 (1959-05-23) (அகவை 65)[சான்று தேவை]
சாலக்குடி, திருச்சூர் கேரளம், இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்வெங்கிடி, பாபு
குடியுரிமைஇந்தியன்
கல்விவர்த்தகத்திலும் நிர்வாகத்திலும் முனைவர் பட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்கோழிக்கோடு பல்கலைக்கழகம்
பணிஆவணத் திரைப்பட இயக்குநர், திரைப்பட விமரசகர், தயாரிப்பாளர்[2]
செயற்பாட்டுக்
காலம்
1970 முதல் தற்போது வரை[3][4]
அறியப்படுவதுதிரைப்பட விமர்சனம், திரைப்படம் எழுதுதல், ஆவணப்படம் தயாரித்தல், புத்தக விமர்சனம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  1. :உடலின்றெ தரசஞ்சரங்கள்
  2. :மலையாள சினிமா படனங்கள்.
  3. :சினிமா டாக்கீஸ்.
  4. எ டோர் டு அடூர்
  5. :சமந்தரா யாத்ரகள் – கே. ஆர். மோகனன்றெ சினிமா.
சொந்த ஊர்சாலக்குடி
பெற்றோர்சி. கே. சுப்பிரமணியம், டி. வி. தைலாம்பாள்
வாழ்க்கைத்
துணை
முத்துலட்சுமி
பிள்ளைகள்மேதா, கௌதமன்
உறவினர்கள்பாலகிருட்டிணன் சி. எஸ்., சங்கமேசுவரன் சி. எஸ்., மீனாட்சி சி.எ ஸ்., நாராயணி சி. எஸ்., அனந்தலட்சுமி சி. எஸ்., ராகவன் திருமுள்பாடு

தொழில்

தொகு

திரைப்படத்தின் சமூக அம்சங்களுக்கும், அவற்றின் கலை நிறைவு பற்றிய நுண்ணறிவு பகுப்பாய்வுக்காகவும் இவர் அறியப்படுகிறார். திரைப்படத்தையும், ஊடகங்களையும் சார்ந்த இவரது எழுத்துக்களும் மதிப்புரைகளும், ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் டீப் போகஸ், பிலிம் இன்டர்நேசனல், சினிமா இன் இந்தியா, பாசாபோசினி, பச்சக்குதிரா, இந்தியன் எக்சுபிரசு, தி இந்து, மாத்ருபூமி, மாத்தியமம் போன்ற பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.. [6] [7] இந்தியன் எக்ஸ்பிரசில் இவரது "ரம்பிள்ஸ்ட்ரிப்" (1999-2008) என்ற கட்டுரையில் கேரளாவில் திரைப்படங்கள், ஊடக காட்சி பற்றி பேசப்பட்டது. [8]

லலித் மோகன் ஜோஷியுடன் இணைந்து திரைப்படத் தயாரிப்பாளர் கே.ஆர்.மோகனன் பற்றிய சமந்தரா யாத்ரகள் கே.ஆர்.மோகனன்றெ சினிமா என்ற புத்தகத்தையும், திரைப்பட தயாரிப்பாளர் அடூர் கோபாலகிருட்டிணன்பற்றிய எ டோர் டு அடூர் என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். [9] மலையாளத் திரைப்படத்தில் முக்கிய போக்குகளையும், மைல்கற்களையும் பற்றி விமர்சன ரீதியாகப் பார்க்கும் வெங்கடேசுவரனின் கட்டுரைகளின் தொகுப்பைக் கொண்ட மூன்று புத்தகங்கள், டி.சி புத்தக நிறுவனம், 2011 இல் நடைபெற்ற டி.சி. சர்வதேச புத்தக கண்காட்சி மற்றும் கலாச்சார விழாவில் வெளியிட்டது. [10] மலையாள சினிமா பதனங்கல் என்ற புத்தகம் 2011 ஆம் ஆண்டிற்கான மாநில திரைப்பட விருதுகளில் சிறப்பு நடுவர் குறிப்பை வென்றது. அடூர் கோபாலகிருட்டிணன், டி.வி.சந்திரன், வெர்னர் ஹெர்சாக் உள்ளிட்ட திரைப்பட பிரமுகர்களை இவர் பேட்டி கண்டுள்ளார். [11] [12]

ஒரு ஆவணப்படத் தயாரிப்பாளரான இவர், 1995 ஆம் ஆண்டில் பக்கர்நாட்டம் - அம்மனூர், தி ஆக்டர், பண்டைய பாரம்பரிய சமஸ்கிருத நாடகத்தின் நிபுணரான கூடியாட்டக் கலைஞரான அம்மனூர் மாதவ சாக்கியாரின் வாழ்க்கையின் பாடல் வரிகள் போன்ற கலைப்படைப்புகளுக்காக சிறந்த கலை / கலாச்சாரத் திரைப்படத்திற்கான தேசிய விருதை எம். ஆர். இராஜனுடன் சேர்ந்து வென்றார். இந்தப் படம் அதே ஆண்டில் சிறந்த ஆவணப்படத்திற்கான கேரள மாநில விருதையும் வென்றது. [13] இவரது கட்டுரையான "மலையாள சினிமாவில் தேநீர் கடைகள்" 2011 இல் புதுப்பிக்கப்பட்ட கேரள அரசின் பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. [14] [15]

குறும்படங்களுக்கும், ஆவணப்படங்களுக்குமான திரைப்பட விழாவின் கலை இயக்குநராக உள்ளார். [16] மேலும், 60 வது தேசிய திரைப்பட விருதுகளில் சினிமாவில் சிறந்த எழுத்துக்கான நடுவர் உறுப்பினராக இருந்தார். [17] கேரள மாநில சலாச்சித்ர அகாதமியில் இருந்தபோது, 2018 சூலையில், கேரள நடிகர் மோகன்லாலை முதன்மை விருந்தினராக அழைக்க மாநில அரசு எடுத்த முடிவுக்கு எதிராகவும், அமைப்பு சங்கம் எடுத்த பெண்கள் விரோத நிலைப்பாட்டிற்கும் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினார். [18] [19]

குறிப்புகள்

தொகு
  1. "Critical acclaim"
  2. "Profile - Faculty, GIFT" பரணிடப்பட்டது 21 ஏப்பிரல் 2016 at Archive.today
  3. """Is Another Cinema Possible?" - Talk by Dr. C.S Venkiteswaran"". Archived from the original on 2015-11-17. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
  4. "Faculty - Gulati Institute of Finance and Taxation" பரணிடப்பட்டது 21 ஏப்பிரல் 2016 at Archive.today
  5. "The Hindu: National award for film critic – 2009". Chennai, India. 17 September 2010 இம் மூலத்தில் இருந்து 19 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101119040614/http://www.hindu.com/2010/09/17/stories/2010091752990200.htm. 
  6. ""Adoor: the man and the auteur"". Archived from the original on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
  7. "Quest for ‘the pest'"
  8. "Critical acclaim"
  9. ""A Door to Adoor"". Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
  10. "After laurels, the works of a critic"
  11. "interview: adoor gopalakrishnan" பரணிடப்பட்டது 5 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம்
  12. ""Encounters with the living dead"". Archived from the original on 2011-06-16. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  13. "STATE FILM AWARDS-1995" பரணிடப்பட்டது 13 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
  14. . http://expressbuzz.com/cities/thiruvananthapuram/comprehensive-revamp-of-class-x-textbooks/273417.html. [தொடர்பிழந்த இணைப்பு]
  15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2011-06-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110626233948/http://www.scert.kerala.gov.in/2011pdf/07_english_part_1.pdf. 
  16. "Signs Festival-Contact"
  17. ""Official Catalogue of 60th National Film Awards"" (PDF). Archived from the original (PDF) on 2014-03-16. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
  18. "C S Venkiteswaran resigns from Chalachitra Academy"
  19. "മോഹൻലാലിന് എതിരല്ല; പുരസ്കാരദാനം താരനിശയാക്കരുത് -സി.എസ്. വെങ്കിടേശ്വരൻ."
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._எஸ்._வெங்கடேசுவரன்&oldid=3792838" இலிருந்து மீள்விக்கப்பட்டது