சீமையகத்தி

சீமை அகத்தி
புதைப்படிவ காலம்:520 Ma
தாவரவியல் வரைவேடு.1880-1883?

Apparently Secure  (NatureServe)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
பூக்கும்தாவரங்கள்[1]
வகுப்பு:
Magnoliopsida
துணைவகுப்பு:
Rosidae
தரப்படுத்தப்படாத:
Eurosids I
வரிசை:
Fabales
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Caesalpinioideae
சிற்றினம்:
Cassieae
துணை சிற்றினம்:
Cassiinae
பேரினம்:
இனம்:
S. alata
இருசொற் பெயரீடு
Senna alata
L & Roxb.
வேறு பெயர்கள்

இலத்தீனிய மாற்றுப்பெயர்கள்[2]

  • Cassia alata L.
  • Cassia alata L. var. perennis Pamp.
  • Cassia alata L. var. rumphiana DC.
  • Cassia bracteata L.f.
  • Cassia herpetica Jacq.
  • Cassia rumphiana (DC.) Bojer
  • Herpetica alata (L.) Raf.

சீமையகத்தி அல்லது வண்டுகொல்லி (Candle Bush, Cassia alata) வெப்ப மண்டலங்களில் வளரும் ஒரு நிலைத்திணை (தாவரம்) ஆகும். இதன் உயிரியல் வகைப்பாட்டு இலத்தீன் பெயர் சென்னா அலாட்டா (Senna alata). இதன் பழையப் பெயர்,கேசியா அலாட்டா (Cassia alata) என்பதாகும். இத்தாவரம் வாபேசியே (Fabaceae) குடும்பத்தில், சீசல்பின்னியாய்டியே (Caesalpinioideae) துணைக்குடும்பத்தைச் சேர்ந்தது. முன்பு இதனுடையப் பேரினப் பெயர், 'கேசியா' (Cassia)[3] என்பதாகும். தற்போது இதன் பேரினம், 'சென்னா' (senna) என்பதே ஆகும்.

இத்தாவரம் அலங்காரச் செடியாகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும் அறியப்படுகின்றது. சீமையகத்தி (சீமை=வெளிநாடு + அகம்=உள்ளே + தீ=தீமை)[மேற்கோள் தேவை] என்றால், 'உடலிலிருக்கும் தீங்கை நீக்கவல்ல வெளிநாட்டுத் தாவரம்' என்பது பொருளாகும்[மேற்கோள் தேவை].

இத்தாவரத்திற்கு அஞ்சலி, சீமை அகத்தி, பேயகத்தி, அலடா, காலவகத்தி, சீமைஅவுத்தி, சிண்டுகை, சிரிகை, பைரவம், பொன்னகத்தி, புளியச்சிகா செடி, புழுக்கொல்லி, வண்டு கொல்லி போன்ற வேறுபெயர்களும் உண்டு.[4]

இத்தாவரத்தினை, ஆங்கிலத்தில் 'மெழுகுவத்திப் புதர்' என்றும், மற்றும் சில பெயர்களாலும் [5] அழைக்கின்றனர். மேலும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் பல்வேறு பெயர்களால் .[6] அழைக்கப்படுகிறது.

வாழிடம்

தொகு

இதன் தாயகம் மெக்சிகோ நாடாகும். எனினும், இது பெரு வெப்ப மண்டலத் தாவரமாக இருக்கிறது. அதாவது, ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான கண்டங்களிலுள்ள , நாடுகளில் இத்தாவரம் காணப்படுகிறது.

வளரியல்பு

தொகு

இத்தாவரம், தான் வாழும் இடத்தின் தாவரங்களை விட வேகமாக வளரும் இயல்பைப் பெற்றிருக்கிறது.[7] எனவே, இவை நாட்டிற்கு நாடு உருவத்தால் வேறுபாட்டு, அவ்வேறுபாடு மரபுவழியாகத் தொடர்கிறது.[8][9] இது 3 முதல் 4 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகள் 50முதல்80செ.மீ நீளமுடையது. இதன் இலைகள் இரவில் மூடிக்கொள்ளும் குணமுடையது. இதன் 'இருபுறவெடிக்கனி' வகையினைச் சாரந்த விதைகள், நீர் அல்லது விலங்குகள் மூலம் பரவும் இயல்புடையதாகும்.

தென் தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்படுகிறது. மண் வளமும் ஈரப்பதம்மும் உள்ள ஆற்றுப்படுகைகளில் மிக நன்றாக வளரும் இயல்புடையது. இதனை வெட்டவெட்ட, நன்குத் தழைத்து வளரும் தன்மையுடையதாக இருக்கிறது.

மருத்துவ குணங்கள்

தொகு
  • இதன் இலைகள் அதிகமாக, முறைப்படி மருத்துவத்திற்குப் பயன்படுத்தப் படுகிறது.[10]

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. [[[:en:Flowering plant]] "பூக்கும்தாவரங்கள்-Magnoliophyta"]. பார்க்கப்பட்ட நாள் 2009-08-12. {{cite web}}: Check |url= value (help)
  2. International Legume Database & Information Service
  3. இதில் Formerly placed here என்ற உட்பிரிவைப் பார்க்கவும்
  4. "தமிழுள்ள வேறு பெயர்கள்-Encyclopedia of Indian medicinal plants". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2009-08-13.
  5. (candle bush,Christmas-candle, candlestick senna, ringworm senna, ringworm bush, ringworm shrub, seven-golden-candlesticks)
  6. "சீமையகத்தியின் பலமொழிகளுக்குரியப் பெயர் பட்டியல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2009-08-13.
  7. Kolar, C.S.; D.M. Lodge (2001). "Progress in invasion biology: predicting invaders". Trends in Ecology & Evolution 16 (4): 199–204. doi:10.1016/S0169-5347(01)02101-2. https://archive.org/details/sim_trends-in-ecology-evolution_2001-04_16_4/page/199. 
  8. Churchill F.B. 1974. William Johannsen and the genotype concept. J History of Biology 7, 5-30. Wilhelm Johannsen in 1911.
  9. Johannsen W. 1911. The genotype conception of heredity. American Naturalist 45, 129-159
  10. Science direct[தொடர்பிழந்த இணைப்பு]

ஆதாரங்கள்

தொகு
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Senna alata
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. PIER இணையத்தளம்
  2. Cassia alata – International Legume Database & Information Service
  3. Biodiversitylibrary, Cassia alata
  4. Wiki species- Taxonavigation
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமையகத்தி&oldid=3871066" இலிருந்து மீள்விக்கப்பட்டது