சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில்
திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 81ஆவது சிவத்தலமாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இது அயோகந்தி என்றும் கூறப்படுகிறது. [1]
தேவாரம் பாடல் பெற்ற திருச்சாத்தமங்கை அயவந்தீசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருச்சாத்த மங்கை |
பெயர்: | திருச்சாத்தமங்கை அயவந்தீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கோயில் சீயாத்தமங்கை |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அயவந்தீசுவரர், பிரமபுரீசுவரர் |
தாயார்: | இருமலர்க் கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி |
தல விருட்சம்: | கொன்றை |
தீர்த்தம்: | தீர்த்த குளம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
அமைவிடம்
தொகுசம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் வட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் சீயாத்தமங்கை ஊரில் முடிகொண்டான் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.[2] இந்த ஊர் திருநீலநக்க நாயனாரும் அவரது மனைவி மங்கையற்கரசியும் பிறந்த ஊர் எனப்படுகிறது.
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலானது மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்காறார். இங்கு சிவபெருமானுக்கு ஐந்து நிலை கோபுரமும், அம்மைக்கு இரண்டு அடுக்கு கோபுரமும் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் கிழக்கே சூரிய தீர்த்தமும், மேற்கே சந்திர தீர்த்தமும் உள்ளன. கோயிலுக்குள் நுழைந்ததும் திருநீலநக்க நாயனார், மங்கையற்கரசி ஆகியோரின் சிலைகள் உள்ளன. மறுமுரம் சமயக் குரவர்களின் சிலைகள் காணப்படுகின்றன. மூலவரைக் காணச் செல்லும் முன்பு விநாயகர், தண்டாயுதபாணி ஆகியோரைக் காண இயலும். மேலும் இங்கு அர்த்தநாரீசுவரர், துர்க்கையம்மன், பிட்சாடனர், பிரம்மா, இலிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, நர்தன கணபதி, கவுரி, அகத்தியர், மகாவிஷ்ணு, அனுமன் ஆகியோரின் திருமேனிகளும் உள்ளன.[2]
தனிச் சிற்றாலயத்தில் கொண்டிருக்கும் இருமலர்க்கண்ணி அம்மன் சிற்றாலயத்தில் நுழைந்தால் விநாயகர், முருகன், நந்தி, பைவர், சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.[2]
சிறப்புகள்
தொகு- பிரம்ம தேவர் வழிபட்ட திருத்தலம்
- திருநீலநக்க நாயனார் மற்றும் அவரது மனைவியார் மங்கையர்க்கரசி ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.[3]
வழிபாடு
தொகுஇக்கோயிலில் நான்கு காலபூசை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திர நாளில் திருநீலநக்க நாயனாருக்கு குருபூசை விழா நடத்தப்படுகிறது. ஆவணி மூல நட்சத்திர நாளில் இங்கு திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- ↑ 2.0 2.1 2.2 2.3 (in ta) முற்பிறவி பாவங்களை போக்கும் சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர். 2024-02-15. https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/1199754-seeyathamangai-brahmapureeswarar-temple.html.
- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 227,228
வெளி இணைப்புக்கள்
தொகு- தலவரலாறு, சிறப்புக்கள், அமைவிடம் பரணிடப்பட்டது 2007-10-28 at the வந்தவழி இயந்திரம்
- சம்பந்தர் தேவாரம் பரணிடப்பட்டது 2007-12-01 at the வந்தவழி இயந்திரம்
- கோயில் விபரமும் பதிகமும் பரணிடப்பட்டது 2007-10-18 at the வந்தவழி இயந்திரம்
இவற்றையும் பார்க்க
தொகுபடத்தொகுப்பு
தொகு-
நுழைவாயில், நந்தி மண்டபம்
-
மூலவர் விமானம்
-
கோயில் முன்பாக குளம்
-
கோஷ்ட சிற்பம்