முதன்மை பட்டியைத் திறக்கவும்

சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில்

(சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 81ஆவது சிவத்தலமாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இது அயோகந்தி என்றும் கூறப்படுகிறது. [1]

தேவாரம் பாடல் பெற்ற
திருச்சாத்தமங்கை அயவந்தீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருச்சாத்த மங்கை
பெயர்:திருச்சாத்தமங்கை அயவந்தீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கோயில் சீயாத்தமங்கை
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அயவந்தீசுவரர், பிரமபுரீசுவரர்
தாயார்:இருமலர்க் கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி
தல விருட்சம்:கொன்றை
தீர்த்தம்:தீர்த்த குளம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

அமைவிடம்தொகு

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில்அமைந்துள்ளது. திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலம் எனப்படுகிறது.

சிறப்புகள்தொகு

  • பிரம்ம தேவர் வழிபட்ட திருத்தலம்
  • நீலநக்க நாயனார் மற்றும் அவரது மனைவியார் மங்கையர்க்கரசி ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.[2]

மேற்கோள்கள்தொகு

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 227,228

வெளி இணைப்புக்கள்தொகு

இவற்றையும் பார்க்கதொகு

படத்தொகுப்புதொகு