சுசில் சந்திர முன்சி

சுசில் சந்திர முன்சி (Susil Chandra Munshi) இந்திய நாட்டினைச் சேர்ந்த ஓர் இதய சிகிச்சை நிபுணர் ஆவார். மும்பை மாநகராட்சியில் சசுலோக் மருத்துவமனையில் இருதய ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் இயக்குநராகவும் உள்ளார். [1] [2] அமெரிக்கன் இதய சிகிச்சை கல்லூரி, இந்திய இதய சிகிச்சைகல்லூரி, எடின்பரோவின் ராயல் மருத்துவர்கள் கல்லூரி, இந்தியன் மருத்துவர்கள் கல்லூரி, இந்திய இதயவியல் சங்கம் மற்றும் இந்திய மின் இதயவியல் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார். [3] 1989-90 ஆம் ஆண்டுகளில் இந்திய இதயவியல் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். [4] இச்சங்கத்தின் தேசிய ஆலோசகர்கள் மற்றும் தேசிய ஆசிரியர் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். மேலும் 2012 ஆம் ஆண்டில் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற்றார்.[5] இந்திய அரசு இவருக்கு 1991 ஆம் ஆண்டு நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[6]

சுசில் சந்திர முன்சி
பிறப்புஇந்தியா
பணிஇருதய மருத்துவர்
விருதுகள்பத்மசிறீ
இந்திய இதயவியல் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது

மேற்கோள்கள்

தொகு
  1. "DR. MUNSHI S C". Jaslok Hospital. 2015. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.
  2. Heart To Heart (With Heart Specialist). Diamond Pocket Books.
  3. "Sehat profile". Sehat. 2015. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.
  4. "Past presidents". CSI. 2015. Archived from the original on 16 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "CSI Conference" (PDF). Cardiological Society of India. 2014. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசில்_சந்திர_முன்சி&oldid=4109547" இலிருந்து மீள்விக்கப்பட்டது