சுசூல்

இந்தியாவின் லடாக் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம்

சுசூல் (Chushul) இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில், லே மாவட்டத்தின் கிழக்கில் துர்புக் வருவாய் வட்டத்தில், திபெத் தன்னாட்சிப் பகுதியை ஒட்டி அமைந்த சுசூல் சமவெளியில் உள்ள ஒரு எல்லைக் கிராமம் ஆகும்.[2]இதன் தெற்கில் பாங்காங் ஏரியும், மேற்கில் ஸ்பான்க்கர் ஏரியும் உள்ளது. சுசூலுக்கு கிழக்கே 5 கிமீ தொலைவில், சுசூல் சமவெளிகளுக்கு இடையே, இந்தியா-சீனாவை பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு உள்ளது. சுசூல் கிராமம் இந்திய இராணுவத்தின் முக்கிய கேந்திரமாக உள்ளது. 1962 இந்திய-சீனப் போரின் போது 18 நவம்பர் 1962 அன்று சுசூல் கிராமம் சீனப்படைகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

சுசூல்
சிற்றூர்
சுசூல் is located in லடாக்
சுசூல்
சுசூல்
இந்தியாவின் லடாக் பகுதியில் சுசூலில் அமைவிடம்
சுசூல் is located in இந்தியா
சுசூல்
சுசூல்
சுசூல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°33′22″N 78°43′19″E / 33.556°N 78.722°E / 33.556; 78.722
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே
வருவாய் வட்டம்துர்புக்[1]
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்949
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
மக்கள்தொகை கணக்கெடுப்பு குறியீடு908

அமைவிடம்

தொகு
 
சுசூல் வரைபடம், 1954
 
சுசூல் சமவெளி, 1992

சுசூல் ஆற்றின் கரையில் அமைந்த சுசூல் கிராமம், பாங்காங் ஏரிக்கு தெற்கே 10 மைல் தொலைவில் உள்ளது.[3]1962 இந்திய-சீனப் போர் மற்றும் 2020 இந்தியா-சீனா எல்லை மோதல்கள் போது சுசூல் பகுதியில் உள்ள வான் படையின் தளம்[4], இந்திய இராணுவத்திற்கு உதவியாக செயல்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சுசூல் கிராமம் 148 குடியிருப்புகளும், 949 மக்கள்தொகையும் கொண்டிருந்தது. மக்களில் பெரும்பான்மையோர் திபெத்திய பௌத்தர்கள் ஆவர்.[5]

இந்திய-சீனா எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள் சந்திக்குமிடம்

தொகு

இந்திய-சீனா எல்லைப்பாதுகாப்புப் படை அதிகாரிகள், எல்லைப் பிணக்குகளை பேசித் தீர்ப்பதற்கு சுசூலில் ஒரு மையம் உள்ளது.[6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://leh.nic.in/about-district/administrative-setup/village/
  2. "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. Archived from the original (PDF) on 9 September 2016. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
  3. Gazetteer of Kashmir and Ladak, Calcutta: Superintendent of Government Printing, 1890, p. 747
  4. Photos on www.flickr.com
  5. "Leh district census". 2011 Census of India (Directorate of Census Operations). http://www.censusindia.gov.in/datagov/CDB_PCA_Census/PCA_CDB_0103_F_Census.xls. 
  6. "Indian soldiers prevent Chinese troops from constructing road in Arunachal". The Times of India. 28 Oct 2014. https://timesofindia.indiatimes.com/india/Indian-soldiers-prevent-Chinese-troops-from-constructing-road-in-Arunachal/articleshow/44953671.cms. 

உசாத்துணை

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசூல்&oldid=4035872" இலிருந்து மீள்விக்கப்பட்டது