சுண்டெலிப் பறவை

சுண்டெலிப் பறவைகள் என்பவை (குடும்பம் Coliidae, வரிசை Coliiformes) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பறவைகள் ஆகும். இது யூகவிடேவ்ஸ் (Eucavitaves) கிளையின் சகோதரிக் குழு ஆகும். யூகவிடேவ்ஸில் குயில் சுழலி (Leptosomatiformes), திரோகோன்கள் (Trogoniformes), புசேரோடிபார்மஸ், கோரசிபார்மஸ் மற்றும் பிசிபார்மஸ் ஆகியவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.[1] இந்த குழு துணை சஹாரா ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளது. இது அந்தக் கண்டத்தில் மட்டுமே காணப்படும் ஒரே பறவை வரிசையாகும். வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இவை பரவலான அளவில் இருந்தன. பாலியோசின் காலத்தில் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் பரவலாகக் காணப்பட்டன.[2] இவை மரங்களில் வாழக்கூடியவை ஆகும். இலைகளின் ஊடே கொறிணிகளைப் போல் ஓடுவதால் இவை சுண்டெலிப் பறவைகள் எனப் பெயர் பெற்றன.

சுண்டெலிப் பறவைகள்
புதைப்படிவ காலம்:முன் பாலியோசின் முதல் தற்காலம் வரை
நீலப்பிடரி சுண்டெலிப் பறவை (Urocolius macrourus)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
வரிசை:
சுண்டெலிப் பறவை

முரி, 1872
குடும்பம்:
சுண்டெலிப் பறவை

ஸ்வயின்சன், 1837
பேரினங்கள்

Colius
Urocolius

உசாத்துணை தொகு

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Coliiformes
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுண்டெலிப்_பறவை&oldid=3930050" இலிருந்து மீள்விக்கப்பட்டது