சுதா சிங்
சுதா சிங் (Sudha Singh, சூன் 25, 1986) இந்திய தட கள விளையாட்டு மெய்வல்லுநர் ஆவார். இவர் 3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம் நிகழ்வில் இரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.
தனித் தகவல்கள் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப் பெயர் | சுதா சிங் | ||||||||||||||||||||||||||
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||||||||||||
பிறந்த நாள் | 25 சூன் 1986 | ||||||||||||||||||||||||||
பிறந்த இடம் | ரேபரேலி, உத்தரப் பிரதேசம், இந்தியா | ||||||||||||||||||||||||||
உயரம் | 1.58 மீ (5 அடி 2 அங்) | ||||||||||||||||||||||||||
எடை | 45 கிலோ (99 பவு) | ||||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||||||||||||
விளையாட்டு | தட கள விளையாட்டுக்கள் | ||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம் | ||||||||||||||||||||||||||
சங்கம் | தொடருந்து நிறுவனம் | ||||||||||||||||||||||||||
சாதனைகளும் பட்டங்களும் | |||||||||||||||||||||||||||
தன்னுடைய சிறப்பானவை | 9:26:55 (சாங்காய் 2016) | ||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
இற்றைப்படுத்தப்பட்டது 20 மே 2016. |
பணிவாழ்வு
தொகுசுதா சிங் 3000 மீட்டர்கள் பலதடை ஓட்டப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்; இப்போட்டியில் தேசிய சாதனையை இவர் ஏழாண்டுகள் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தார். மே, 2016இல் இதனை மீண்டும் கைப்பற்றி உள்ளார்.
இவரது சிறந்த ஓட்டம் 2016 ஆசிய விளையாட்டுக்களில் சீனாவின் குவாங்சௌவில் வெளிப்படுத்தினார்; இதில் 9 நிமி 55.67 வினாடி நேரத்தில் 3000 மீட்டர்கள் ஓடி தங்கப் பதக்கத்தைப் பெற்றார். தவிரவும் சாங்காய் நகரில் நடந்த தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கத்தின் வைர லீக் போட்டியில் தேசிய சாதனையை பதிவு செய்தார்.
சூன் 2012இல் இலண்டன் ஒலிம்பிக்கிற்கு போட்டியிடத் தகுதிப் போட்டியில் தன்னுடைய தேசியச் சாதனையை தானே முறியடித்தார்; 3000 மீ பலதடைகளை 9 நிமி 47.70 வினாடிகளில் கடந்து இச்சாதனையை நிகழ்த்தினார்.[1] இருப்பினும் 2012 ஒலிம்பிக் போட்டியில், முன்னிலைப் போட்டிகளில் 13வதாக வந்ததால் இறுதி ஓட்டத்திற்கு முன்னேறவில்லை.[2]
பன்னாட்டுப் போட்டிகளில் சாதனைகள்
தொகுஆண்டு | போட்டி | இடம் | நிலை | நிகழ்வு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
இந்தியாவின் சார்பாக | |||||
2009 | 2009 ஆசிய தடகளப் போட்டிகள் | குவாங்சௌ | 2வது | 3000 மீ பலதடை | 10:10.77 |
2010 | பொதுநலவாய விளையாட்டுக்கள் | தில்லி | 5th | 3000 மீ பலதடை | 9:57.63 |
ஆசிய விளையாட்டுக்கள் | குவாங்சௌ | முதலாவது | 3000 மீ பலதடை | 9:55.67 | |
2011 | 2011 ஆசிய தடகளப் போட்டிகள் | கோபே | 2வது | 3000 மீ பலதடை | 10:08.52 |
2012 | ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | இலண்டன் | 21வது (h) | 3000 மீ பலதடை | 9:48.86 |
2013 | ஆசிய தடகளப் போட்டிகள் | புனே | 2வது | 3000 மீ பலதடை | 10:09.80 |
உலக தடகளப் போட்டிகள் | மாஸ்கோ | 23வது (h) | 3000 மீ பலதடை | 9:51.05 | |
2014 | ஆசிய விளையாட்டுக்கள் | இஞ்சியோன் | 4வது | 3000 மீ பலதடை | 9:35.64 |
2015 | உலக தடகளப் போட்டிகள் | பெய்ஜிங், சீனா | 19வது | மாரத்தான் | 2:35:35 |
ரியோ ஒலிம்பிக்சு
தொகு2016 ரியோ ஒலிம்பிக்கில் சுதா 3000 மீட்டர் பல தடை தாண்டும் போட்டியில் பங்கேற்றார். ரியோ ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து நாடு திரும்பிய சுதா சிங்கிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் செய்யப்பட்ட பரிசோதனையில் அவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Sudha Singh". பார்க்கப்பட்ட நாள் 2012-06-08.
- ↑ "London 2012 - Women's 3000m Steeplechase results". Archived from the original on 2012-12-05. பார்க்கப்பட்ட நாள் 2016-08-25.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் சுதா சிங்-இன் குறிப்புப் பக்கம்
- "Sudha Singh". Olympics at Sports-Reference.com. Sports Reference LLC.