சுந்தா சின்ன மரங்கொத்தி

சுந்தா சின்ன மரங்கொத்தி (Sunda pygmy woodpecker)(யுங்கிபிகசு மொலுசென்சிசு), சுந்தா மரங்கொத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது பிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகைப் பறவை ஆகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. சில வகைப்பாட்டியல் அறிஞர்கள் இந்த சிற்றினத்தை டெண்ட்ரோகோபசு அல்லது பைகோடெசு பேரினத்தில் தொடர்ந்து வகைப்படுத்துகின்றனர்.

சுந்தா சின்ன மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பிசிடே
பேரினம்:
இனம்:
Y. moluccensis
இருசொற் பெயரீடு
Yungipicus moluccensis
(ஜெமெலின், 1788)
வேறு பெயர்கள்

பைகோடெசு மொலுசென்சிசு
டெண்ட்ரோகோபசு மொலுசென்சிசு

விளக்கம் தொகு

இது ஒரு சிறிய அளவுடைய மரங்கொத்தி (அளவு வரம்பு: 11.5-12.5 செ.மீ) ஆகும். சாம்பல் கலந்த பழுப்பு நிற தலை; அடர் பழுப்பு நிறத்தை உள்ளடக்கிய காது, கழுத்தை நோக்கி சுருங்கும் இரண்டு பரந்த வெண்மையான சாம்பல் பட்டைகளைக் கொண்டது. மேல் பகுதி சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற இறக்கைகளுடன் வெள்ளை நிறத்துடன் முனையுடையது; இதனால் கோடுகளுடன் உள்ளதுபோல் இறக்கைகள் காணப்படும். வால் குட்டையாகவும், வெள்ளை நிறப் பட்டைகளுடன் கருப்பு நிறத்தில் காணப்படும். கண்களுக்கும் நாசித்துளைக்கும் இடைப்பட்ட பகுதி மற்றும் தொண்டை அழுக்கு படிந்து வெண்மையாகக் காணப்படும். மேல் மார்பகம் கோடுகளுடன் காணப்படும். பாலிலிருத் தன்மை காணப்படும். ஆண் பறவைகளில் சிவப்பு கலந்த ஆரஞ்சு தலைப்பிட்டம் உள்ளது, இது பெண் பறவைகளில் இல்லை.[2]

 
முதிர்ச்சியடைந்த சுந்தா மரங்கொத்தி

பரவல் தொகு

சுந்தா சின்ன மரங்கொத்தியின் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[3]

சூழலியல் தொகு

சிங்கப்பூரில் உள்ள நகர்ப்புறங்கள் மற்றும் காடுகளுக்கு வருகை தரும் பொதுவான பறவையாக உள்ளது. பெரும்பாலும் தனித்தனியாகவோ அல்லது இணையாகவோ மரங்களின் மேல் காணப்படும். தரையிலிருந்து பட்டுப்போன மரக் மரங்களின் மேல் கிளைகள் வரை காணப்படும்.[2]

Singapore, Oct 1994

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2012). "Picoides moluccensis". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22681064/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. 2.0 2.1 http://singaporebirds.net/npassers_01/sunda_pygmy_woodpecker.html
  3. Robson, Craig, and Richard Allen.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தா_சின்ன_மரங்கொத்தி&oldid=3477006" இலிருந்து மீள்விக்கப்பட்டது