சுனில் தட்கரே
சுனில் தத்தாத்ரே தட்கரே (Sunil Tatkare) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தற்போது ராய்காட் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் ஆவார். இவர் முன்பு மகாராட்டிராவின் நீர்வள அமைச்சராக இருந்துள்ளார். இவர் மகாராட்டிர சட்டமன்ற ரீவர்தன் தொகுதியிலிருந்து மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] இவர் முன்பு மகாராட்டிர சட்டமன்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராகவும் பணியாற்றினார். தட்கரே பல வழக்குகளில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊழல் தடுப்பு பணியகம் நில அபகரிப்பு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இவருக்கு எதிராக விசாரணையைத் தொடங்க மாநில அரசாங்கத்தின் உத்தரவைக் கோரியுள்ளது.[2] சொத்துக்கள் வழக்கில் அவருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியது.[3]
சுனில் தத்தாத்ரே தட்கரே | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2024 | |
தொகுதி | ராய்காட் |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 23 மே 2019 – மே 2024 | |
முன்னையவர் | ஆனந்த் கீத்தே |
தேசியவாத காங்கிரசு கட்சி | |
பதவியில் 16 பிப்ரவரி 2015 – 20 ஏப்ரல் 2018 | |
முன்னையவர் | ஆர். ஆர். பட்டீல் |
பின்னவர் | ஜெயந்த் பட்டீல் |
மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | துக்காராம் சுர்வே |
பின்னவர் | அவ்கூத் தட்கரே |
தொகுதி | சிறீவர்தன் |
மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் 1995–2009 | |
முன்னையவர் | அசோக் சப்பேலே |
தொகுதி | மகாராட்டிர சட்டமன்றம் |
அமைச்சர், விலாஸ்ராவ் தேஷ்முக் அமைச்சரவை | |
பதவியில் 19 அக்டோபர் 1999 – 16 சனவரி | |
அமைச்சர் |
|
அமைச்சர், விலாஸ்ராவ் தேஷ்முக் அமைச்சரவை | |
பதவியில் 1 நவம்பர் 2004 – 4 திசம்பர் 2008 | |
அமைச்சர் |
|
முன்னையவர் | சுசில்குமார் சிண்டே |
பின்னவர் | இரமேஷ் சந்திர கோபிகிசான் பாங் |
அமைச்சர், அசோக் சவான் அமைச்சரவை | |
பதவியில் 8 திசம்பர் 2008 – 6 நவம்பர் 2009 | |
அமைச்சர் |
|
முன்னையவர் | திலீப் வால்சி பட்டீல் |
பின்னவர் | அஜித் பவார் |
அசோக் சவான் அமைச்சரவை | |
பதவியில் 07 நவம்பர் 2009 – 10 நவம்பர் 2010 | |
அமைச்சர் |
|
முன்னையவர் | திலீப் வால்சி பட்டீல் |
பின்னவர் | அஜித் பவார் |
பிரித்வி சவான் அமைச்சரவை | |
பதவியில் 11 நவம்பர் 2010 – 26 செப்டம்பர் 2014 | |
அமைச்சர் |
|
முன்னையவர் | |
பின்னவர் |
|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 சூலை 1955 சுதார்வாதி, ஜம்க்கொன், ரோகா தாலுகா,ராய்கட் மாவட்டம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய ஜனநாயகக் கூட்டணி (2023–முதல்) |
துணைவர் | வர்தா தட்கரே |
உறவுகள் | அனில் தட்கரே (சகோதரர்), அவ்த்தூட் தட்கரே |
பிள்ளைகள் | அனிகெட் தட்கரே, அதீதி சுனில் தாக்கரே |
தட்கரே 10 சூலை 1955 அன்று சுதர்வாடி கோலாட்டில் பிறந்தார். புனேயில் உள்ள பெர்குசன் கல்லூரியில் இடைநிலை அறிவியல் வரை கல்வி கற்றுள்ளார். 1984-இல் இந்திய தேசிய காங்கிரசில் சேருவதற்கு முன்பு இவர் அரசு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றினார். 1995-இல் காங்கிரசு கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ஆம் ஆண்டில் இவர் உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2008ஆம் ஆண்டில் எரிசக்தி அமைச்சராகவும், 2009ஆம் ஆண்டில் நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இவரது மகள் அதீதி சுனில் தட்கரே மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.