சுபீதா ரகிம்தூலா

சுபீதா ஹபீப் ரகிம்தூலா (Zubeida Habib Rahimtoola), ஆகஸ்ட் 12, 1917 அன்று பம்பாயில் பிறந்தவர் ஆவார். இளமையில் சுபீதா சுல்தான் சினாய் என அழைக்கப்பட்டார். [1] இவர், ஒரு பாகிஸ்தான் அரசியல் பிரமுகர் மற்றும் சமூக சேவகர் ஆவார் . இங்கிலாந்தில் அகில இந்திய முஸ்லீம் லீக்கின் தலைவராகவும், அனைத்து பாகிஸ்தான் பெண்கள் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். [2] இவரது பெண்கள் நலன் சார்ந்த சேவைகளுக்காக, பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப்கானிடமிருந்து சித்தாரா-இ-கிட்மத் விருதினைப் பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சுபீதா சினாய் 1935 இல் ஹபீப் ரகிம்தூலாவை மணந்தார்.[3]அப்போதிருந்து அவர் பிரிட்டிஷ் இந்தியாவில் முஸ்லீம் பெண்களை ஆதரிப்பதற்காக ஒரு தீவிரமான சமூக நல முன்னணியை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து முக்கியமாக பாகிஸ்தானை உருவாக்கிய பின்னர், பல பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்கள் கல்வியைச் சுற்றி வருகின்றன.

குடும்ப முன்னணியில் சுபீதா ரஹிம்தூலாவின் தந்தை சுல்தான் சினாய் ஒரு தொழிலதிபர் மற்றும் பம்பாய் மேயராக இருந்தார் [1938-39]. ஹபீப் இப்ராஹிம் ரகிம்தூலாவுடான திருமணத்திற்கு பிறகு அவருக்கு, அதாவது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஆரம்பகால வாழ்க்கை & தொழில் தொகு

சுபீதா, தனது ஆரம்பக் கல்வியை பம்பாயிலுள்ள, காம்பென்ட் ஆஃப் ஜீசஸ் மற்றும் மேரி, பள்ளியில் (இன்றைய மும்பை) கல்வி கற்றார். பின்னர் ராணி மேரி பள்ளியில் மெட்ரிகுலேஷன் கல்வி பெற்றார். பின்னர் அவர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் பயின்றார், அங்கு அவர் தனது இளங்கலை பட்டத்தைப் பெற்றார்.

அனைத்து பாகிஸ்தான் பெண்கள் சங்கத்தின் (ஏ.பி.டபிள்யூ.ஏ) ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக சுபீதா ரஹிம்தூலா உள்ளார். அவர் 1947 இல் பிரிவினையில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்ததால் , அவர் பிரிட்டனின் அனைத்து பாகிஸ்தான் பெண்கள் சங்கத்தின் முதல் ஜனாதிபதியானார். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஐக்கிய இராச்சியத்தில் ஜின்னாவின் அகில இந்திய முஸ்லீம் லீக்கின் முதல் ஜனாதிபதியாக இருந்தார்.

1953 இல் பாகிஸ்தானுக்குத் திரும்பிய அவர், அனைத்து பாகிஸ்தான் பெண்கள் சங்கத்துடன் தனது பணியைத் தொடர்ந்தார். ஆப்ரோ-ஆசியா மாநாடுகள் மற்றும் சீனாவுக்கான அமைப்பின் பல்வேறு பிரதிநிதிகளின் தலைவராக இருந்தார். சுபீதா, சிந்து மாகாண அனைத்து பாகிஸ்தான் பெண்கள் சங்கத்தின் தலைவராக 1953-54 இல் இருந்தார். இதைத் தொடர்ந்து 1955 முதல் 1958 வரை, தேசிய துணைத் தலைவராக இருந்தார். அவர் 1956முதல் 1974 வரையிலும் அனைத்து பாகிஸ்தான் பெண்கள் சங்கத்தின் குடிசை தொழில் தலைவராக இருந்தார். இறுதியாக அவர் கராச்சி அனைத்து பாகிஸ்தான் பெண்கள் சங்கத்தின்( 1991முதல் 1997வரை) தலைவராக இருந்தார். மேலும், பாகிஸ்தான் அமெரிக்க கலாச்சார மையத்தின் செயலாளர் பதவியை வகித்தவர் ஆவார். [4]

விருதுகள் தொகு

பாகிஸ்தானில் உள்ள மகளிர் அமைப்புகளுக்கு அவர் செய்த பங்களிப்புகள் மற்றும் மேற்கு பாகிஸ்தான் குடும்பச் சட்டங்கள் குறித்து, குறிப்பாக பெண்கள் உரிமைகள் உட்பட அவரது நற்பணிக்காக, 1960 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப் கானால் சித்தாரா-இ-கிட்மத் விருது, (சித்தாராஎன்பதற்கு "நட்சத்திரம்" என்ற்றும்; கிட்மத் என்பதற்கு "ஆணை சேவை" என்றும் பொருளாகும்) பேகம் ரஹிம்தூலாவுக்கு வழங்கப்பட்டது.

குறிப்புகள் தொகு

  1. "The Queen of Hearts: Zubeida Habib Rahimtoola". The Express Tribune. http://tribune.com.pk/story/920121/the-queen-of-hearts-zubeida-habib-rahimtoola/. பார்த்த நாள்: 16 August 2016. 
  2. "Begum Zubeida Habib Rahimtoola portrait". National Portrait Gallery. Bassano Ltd. பார்க்கப்பட்ட நாள் 16 August 2016.
  3. "From The Herald archives". Herald Scotland. பார்க்கப்பட்ட நாள் 16 August 2016.
  4. "PACC founding members". PACC. Archived from the original on 28 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபீதா_ரகிம்தூலா&oldid=3555076" இலிருந்து மீள்விக்கப்பட்டது