சுப்ரதா பக்சி

இந்திய அரசியல்வாதி

சுப்ரதா பக்சி (Subrata Bakshi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டு சூலை மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தற்போது மேற்கு வங்காளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றுகிறார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் பொதுச் செயலாளராகவும், மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவராகவும் உள்ளார். 2011-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் பபானிபூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். [1] [2]

சுப்ரதா பக்சி
Subrata Bakshi
2023 மார்ச்சு மாதத்தில் சுப்ரதா பக்சி
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2020
முன்னையவர்மணீசு குப்தா
தொகுதிமேற்கு வங்காள மாநிலங்களவை
மேற்கு வங்காளத் தலைவர், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
1 சனவரி 1998
தலைவர்மம்தா பானர்ச்சி
பொதுப்பணித் துறை, மேற்கு வங்காள அரசு
பதவியில்
20 மே 2011 – 10 திசம்பர் 2011
முன்னையவர்கிட்டி கோசுவாமி
பின்னவர்சுதர்சன் கோசு தசுதிதர்
தொகுதிபபானிபூர்
போக்குவரத்து துறை, மேற்கு வங்காள அரசு
பதவியில்
20 மே 2011 – 10 திசம்பர் 2011
முன்னையவர்இரஞ்சித்து குந்து
பின்னவர்மதன் மித்ரா
தொகுதிபபானிபூர்
சட்டமன்ற உறுப்பினர், மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில்
13 மே 2011 – 10 திசம்பர் 2011
முன்னையவர்காலிகட்டு
பின்னவர்மம்தா பானர்ச்சி
தொகுதிபபானிபூர்
பதவியில்
2006–2011
முன்னையவர்சுபத்ரா முகர்ச்சி
பின்னவர்சிகா மித்ரா
தொகுதிசௌராங்கீ தொகுதி
பதவியில்
2001–2006
முன்னையவர்சங்கர் சரண் சர்க்கார்
பின்னவர்இரத்தின் சர்க்கார்
தொகுதிமேற்கு விசுணுப்பூர் தொகுதி
தேசிய பொதுச் செயலாளர், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
பதவியில்
2015–2021
முன்னையவர்முகுல் ராய்
பின்னவர்அபிசேக்கு பானர்ச்சி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
4 திசம்பர் 2011 – 23 மே 2019
முன்னையவர்மம்தா பானர்ச்சி
பின்னவர்மாலா ராய்
தொகுதிகொல்கத்தா தக்சின் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 சூலை 1950 (1950-07-23) (அகவை 74)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், India
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு(1998-முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (1998 ஆம் ஆண்டிற்கு முன்)
துணைவர்சகானா பக்சி (1992)
பிள்ளைகள்1 (மகன்)
வாழிடம்(s)கொல்கத்தா, புது தில்லி
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பல்கலைக்கழகம் - (இளம் அறிவியல்., சட்டம்)
தொழில்
As of 15 மார்ச்சு 2021
மூலம்: [1]

மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக மம்தா பானர்ச்சி பதவி விலகிய பின்னர் இவர் தெற்கு கொல்கத்தா தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று 2,30,999 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2014 ஆம் ஆண்டிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்ரதா_பக்சி&oldid=3840635" இலிருந்து மீள்விக்கப்பட்டது