சுவேதா பச்சன் நந்தா
சுவேதா பச்சன் நந்தா (Shweta Bachchan Nanda, பிறப்பு: 17 மார்ச் 1974) இந்தியக் கட்டுரையாளரும் எழுத்தாளரும் முன்னாள் வடிவழகியும் ஆவார்.[1][2][3] டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் மற்றும் வோக் இந்தியா ஆகிய பத்திரிக்கைகளில் கட்டுரையாளராக இருந்து வரும் இவர் பாரடைஸ் டவர்ஸ் என்ற அதிகம் விற்பனையாகும் புதினத்தின் ஆசிரியர் ஆவார்.[4] தொலைக்காட்சி விளம்பரத்திற்கான பெண்ணாகப் பணிபுரிந்து பின்னர் 2018 ஆம் ஆண்டில் தனது சொந்த விற்பனையக முகவரியான MXS ஐ அறிமுகப்படுத்தியுள்ளார்.[5]
சுவேதா பச்சன் நந்தா | |
---|---|
2018 இல் ஒரு நிகழ்வில் சுவேதா | |
பிறப்பு | சுவேதா பச்சன் 17 மார்ச்சு 1974 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பாஸ்டன் பல்கலைக்கழகம் |
பணி | பத்திரிகையாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–present |
பெற்றோர் | அமிதாப் பச்சன் (தந்தை) ஜெயா பச்சன் (தாய்) |
வாழ்க்கைத் துணை | நிகில் நந்தா (தி. 1997) |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | அபிசேக் பச்சன் (சகோதரர்) ஐஸ்வர்யா ராய் (அண்ணி) |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசுவேதா பச்சன் பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனுக்கு மகளாக 17 மார்ச் 1974 இல் பிறந்தவர் [6][7] சுவேதா, 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி இந்தித் திரைப்பட நடிகர்-தயாரிப்பாளர் ராஜ் கபூரின் மகள் ரிது நந்தா மற்றும் ராஜன் நந்தாவின் மகனும் எஸ்கார்ட்ஸ் குழுமத்தின் தலைவருமான தொழிலதிபர் நிகில் நந்தாவை மணந்துள்ளார் [8][9] இத்தம்பதியருக்கு மகள் நவ்யா நவேலி நந்தா (பிறப்பு டிசம்பர் 1997), மற்றும் மகன் அகஸ்திய நந்தா (பிறப்பு நவம்பர் 2000) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளார்.[10]
தொழில்
தொகுசுவேதா முதன்முறையாக செப்டம்பர் 2006 இல் L'Officiel India என்ற இதழுக்காக விளம்பரப் பெண்ணாக இருந்ததோடு ஜூன் 2009 இல், அதே இதழின் ஏழாவது ஆண்டு இதழில் தனது சகோதரர் அபிஷேக் பச்சனுடன் விளம்பரத்தில் தோன்றியுள்ளார்.
2007 ஆம் ஆண்டில், சுவேதா என்டிடிவி -லாபம் என்ற தொலைக்காட்சியில் - அடுத்த தலைமுறை - என்ற பிரிவில் தலைவரானார். அதன்படி இவரது தொடர் பேட்டிகள் அத்தொலைகாட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டன. 2018 ஆம் ஆண்டிலிருந்து, கல்யாண் நகைக்கடை நிறுவனத்தின் விளம்பரத்தூதராக இருந்து வருகிறார்.
டெய்லி நியூஸ் மற்றும் அனாலிசிஸ் மற்றும் வோக் இந்தியா ஆகிய பத்திரிக்கைகளில் கட்டுரையாளராக பல பத்திகளை எழுதியுள்ளார்.[11][12] ட்ரிப்யூன் அவரது பத்திகளை "வேடிக்கையானவை" மற்றும் "புத்திசாலித்தனமானவை" என்று பாராட்டுயுள்ளது.[13]
மோனிஷா ஜெய்சிங்குடன் இணைந்து 2018 ஆம் ஆண்டு MXS என்ற நவீன ஆடைகளின் விற்பனையகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.[14][15][16][17]
அக்டோபர் 2018 ஆண்டில், சுவேதா தனது முதல் புதினமான பாரடைஸ் டவர்ஸை ஹார்பர்காலின்ஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார். எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் புத்தகம் சிறந்த முறையில் விற்பனையாகியுள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸின் இஷிதா சென்குப்தா இப்புத்தகத்தை "நாவல், அதன் அனைத்து நேர்த்திக்காகவும், இறுதியில், ஒரு கதைக்களத்தைத் தேடி ஒரு சில கதாபாத்திரங்களைக் கொண்டிருப்பதைப் போல வாசிக்கிறது." என்று மதிப்பாய்வு செய்துள்ளார்
சுவேதா, ஐஸ்வர்யா ரசினிகாந்தின் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகமான ஆப்பிள் பெட்டியில் நின்று: நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணின் கதை [18][19] மற்றும் ருக்சானா ஈசாவின் கோல்டன் கோட்: சமூக வெற்றியின் கலையில் தேர்ச்சி பெறுதல் ஆகிய புத்தகங்களுக்கும் முன்னுரை எழுதியுள்ளார்.[20][21]
நூல் பட்டியல்
தொகு- பச்சன்-நந்தா, சுவேதா (6 அக்டோபர் 2018). பாரடைஸ் டவர்ஸ் (in ஆங்கிலம்). ஹார்பர்காலின்ஸ் பப்ளிஷர்ஸ் இந்தியா. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5302-316-4.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Wear it like Shweta". https://www.tribuneindia.com/news/archive/lifestyle/wear-it-like-shweta-608274.
- ↑ "Amitabh And Jaya Bachchan Cheer For Daughter Shweta at Her Book Launch". https://www.ndtv.com/entertainment/amitabh-and-jaya-bachchan-cheer-for-daughter-shweta-at-her-book-launch-1930357.
- ↑ "Shweta Bachchan Nanda: Another power-house from the Bachchan family". https://www.mid-day.com/photos/shweta-bachchan-nanda-another-power-house-from-the-bachchan-family/16395.
- ↑ "Shweta Bachchan-Nanda". பார்க்கப்பட்ட நாள் 5 December 2020.
- ↑ "Shweta Bachchan Nanda teams up with father Amitabh Bachchan on screen for the first time!". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/shweta-bachchan-nanda-teams-up-with-father-amitabh-bachchan-on-screen-for-the-first-time/articleshow/64260516.cms.
- ↑ Bollywood FAQ: All That's Left to Know About the Greatest Film Story Never Told (in ஆங்கிலம்). 2019.
- ↑ "Shweta Bachchan turns 46: Brother Abhishek teases her in his birthday post" (in en). இந்தியா டுடே. 17 March 2020. https://www.indiatoday.in/movies/celebrities/story/shweta-bachchan-turns-46-brother-abhishek-teases-her-in-his-birthday-post-1656560-2020-03-17.
- ↑ "Amitabh Bachchan shares pics with Shweta Bachchan Nanda on Daughters' Day" (in en). India Today. 27 September 2020. https://www.indiatoday.in/movies/celebrities/story/amitabh-bachchan-shares-pic-with-shweta-bachchan-nanda-on-daughters-day-1725860-2020-09-27.
- ↑ "Browsing Through Shweta Bachchan Nanda's Wedding Album". NDTV.com. 12 August 2019. பார்க்கப்பட்ட நாள் 5 December 2020.
- ↑ "I don't have the talent to be a heroine: Shweta Nanda" (in en). Hindustan Times. 3 November 2012. https://www.hindustantimes.com/entertainment/i-don-t-have-the-talent-to-be-a-heroine-shweta-nanda/story-g12xeJU8uPaJFxMSkgzIRM.html.
- ↑ "Shweta Bachchan Nanda" (in en). DNA India. https://www.dnaindia.com/authors/shweta-bachchan-nanda.
- ↑ "Shweta Bachchan Nanda" (in en-IN). Vogue India. https://www.vogue.in/author/Shweta-Bachchan-Nanda.
- ↑ "Wear it like Shweta" (in en). The Tribune. https://www.tribuneindia.com/news/archive/lifestyle/wear-it-like-shweta-608274.
- ↑ "Monisha Jaising and Shweta Bachchan Nanda launch a new fashion label" (in en). Mint. https://www.livemint.com/Leisure/cWC6PY8aHtJopsE0P4wzXJ/Monisha-Jaising-and-Shweta-Bachchan-Nanda-launch-a-new-fashi.html.
- ↑ "Shweta Bachchan-Nanda's first fashion recall: Helping mum Jaya adjust Kanjeevaram saree pleats". The Economic Times. https://economictimes.indiatimes.com/magazines/panache/shweta-bachchan-nandas-first-fashion-recall-helping-mum-jaya-adjust-kanjeevaram-sarees-pleats/articleshow/65768205.cms?from=mdr.
- ↑ "The stylish Bachchan". The Telegraph. https://www.telegraphindia.com/culture/style/the-stylish-bachchan/cid/1689710.
- ↑ Chatterjee, Deepsikha; Vasek, Cheri (3 May 2020). "Bollywood: Cross Pollination between Film Costumes and Fashion". Fashion Practice 12 (2): 219–244. doi:10.1080/17569370.2020.1769357. பன்னாட்டுத் தர தொடர் எண்:1756-9370. https://www.tandfonline.com/doi/abs/10.1080/17569370.2020.1769357.
- ↑ Dhanush, Aishwaryaa Rajinikanth (10 December 2016). Standing on an Apple Box: The Story of a Girl among the Stars (in ஆங்கிலம்). HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5264-176-5.
- ↑ KBR, Upala (17 December 2016). "Shweta Bachchan Nanda pens down the foreword to Rajinikanth's daughter, Aishwaryaa's memoir!" (in en). https://www.dnaindia.com/entertainment/report-shweta-bachchan-nanda-pens-down-the-foreword-to-rajinikanth-s-daughter-aishwaryaa-s-memoir-2283590.
- ↑ Eisa, Rukshana (9 January 2018). The Golden Code (in ஆங்கிலம்). Jaico Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-86867-17-9.
- ↑ "Shweta Bachchan Nanda and Rahul Khanna at Rukhsana Eisa's book launch" (in en). 12 January 2018. https://www.mid-day.com/photos/shweta-bachchan-nanda-and-rahul-khanna-at-rukhsana-eisas-book-launch/15900.