சுவைன்சன் சிட்டுக்குருவி
சுவைன்சன் சிட்டுக்குருவி (Swainson's sparrow)(பசார் சுவைன்சோனி) என்பது சிட்டுக்குருவி குடும்பமான பசாரிடேயில் உள்ள ஒரு பறவைச் சிற்றினம் ஆகும். சில நேரங்களில் சாம்பல்-தலை குருவியின் துணையினமாகக் கருதப்படுகிறது. இது வடகிழக்கு ஆப்பிரிக்காவில், பெரும்பாலும் எத்தியோப்பிய மேட்டுநிலங்களில் காணப்படுகிறது. இந்த குருவிக்கு இங்கிலாந்து இயற்கை ஆர்வலர் மற்றும் ஓவியர் வில்லியம் ஜான் சுவைன்சன் பெயரிடப்பட்டது.[2]
சுவைன்சன் சிட்டுக்குருவி | |
---|---|
எத்தியோப்பாவில் தெப்ரே லிபனோசு அருகில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. swainsonii
|
இருசொற் பெயரீடு | |
Passer swainsonii (உரூப்பெல், 1840) |
விளக்கம்
தொகுசுவைன்சன் சிட்டுக்குருவி 16 சென்டிமீட்டர்கள் (6.3 அங்) நீளம் வரை வளரக்கூடியது. வெளிப்படையான பாலியல் வேறுபாடு காணப்படுவதில்லை.[3]
இது பெரும்பாலும் சாம்பல்-தலை குருவியின் இனமாகக் கருதப்படுகிறது, ஆனால் இதன் தலை மற்றும் தோள் கருமையாக இருக்கும். தோளில் ஒரு வெள்ளை பட்டை உள்ளது. ஆனால் இது எப்போதும் தெரிவதில்லை. இதேபோல், வெளிறிய செம்பழுப்பு நிற வால் மற்றும் பிட்டம் எப்போதும் தெரியவில்லை.[4]
பரவலும் வாழிடமும்
தொகுஇது எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவின் மலைப்பகுதிகளிலும், சூடான், தெற்கு சூடான், எரித்திரியா, சீபூத்தி மற்றும் கென்யாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.[1] இதன் எல்லை முழுவதும் பொதுவானது. சில பறவைகள் பருவகால வலசைப்போதலை மேற்கொள்கின்றன.[3]
மலைப் பகுதிகள், சதுப்புநிலங்கள், திறந்தவெளி வனப் பகுதிகள், சவன்னாக்கள் மற்றும் புதர்கள் நிறைந்த புல்வெளிகள் ஆகியவை சுவைன்சன் சிட்டுக்குருவியின் வாழ்விடங்களாகும். இருப்பினும், பெரும்பாலும் இது மனித குடியிருப்புகளிலும் அவற்றின் சுற்றுப்புறங்களிலும் காணப்படுகிறது. எரித்திரியாவில், இது பெரும்பாலும் கடல் மட்டத்திற்கு மேல் 1,200 மீட்டர்கள் (3,900 அடி) உயரத்தில் திறந்த பீடபூமியில் வாழ்கிறது. இது கடல் மட்டத்திற்கு மேல் 1,200–4,500 மீட்டர்கள் (3,900–14,800 அடி) பரப்பளவில் காணப்படுகிறது.[3]
எத்தியோப்பிய நகரங்களில் இது ஐரேவாசியாவின் பெரும்பாலான சிட்டுக்குருவிகளைப் போலவே பொதுவான சிட்டுக்குருவி ஆகும்.[4]
நடத்தை
தொகுசுவைன்சன் குருவிகள் பெரும்பாலும் புற்கள் மற்றும் தானியங்கள் மற்றும் பூச்சிகளின் விதைகளை உண்ணும்.[3]
கூடு என்பது புல் மற்றும் இறகுகளிலிருந்து கூடிய ஒரு தளர்வான பந்து போன்றது. ஒரு கூடு கிளைகளில் அல்லது பனை மரங்களின் உயரத்தில் அல்லது மரப்பொந்துகளில் கட்டப்படலாம். பறவைகள் கட்டிடங்களில் துவாரங்களைப் பயன்படுத்துகின்றன. மேலும் எத்தியோப்பிய சிட்டு மற்றும் ஆப்பிரிக்க மணல் மார்ட்டினின் பழைய கூடுகளைப் பயன்படுத்துகின்றன. ஒரு முறை மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். இவை பழுப்பு மற்றும் சாம்பல் புள்ளிகளுடன் வெண்மையாகக் காணப்படும். இனப்பெருக்க காலம் எரித்திரியாவில் சனவரி முதல் மார்ச் வரையிலும் பின்னர் மே முதல் நவம்பர் வரையிலும், எத்தியோப்பியாவில் ஏப்ரல் முதல் திசம்பர் வரை ஆகும்.[3]
இனப்பெருக்க காலத்திற்குப் பின் இவை மந்தைகளில் வாழ்கின்றன. சில நேரங்களில் பல நூறு எண்ணிக்கையில் காணப்படும். இந்த அளவுள்ள திரள்கள் விவசாயப் பகுதிகளிலும் தோட்டங்களுக்கும் செல்லும் போது சேதங்களை ஏற்படுத்தும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2018). "Passer swainsonii". IUCN Red List of Threatened Species 2018: e.T22718237A131883133. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22718237A131883133.en. https://www.iucnredlist.org/species/22718237/131883133. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Boelens, Bo; Watkins, Michael (2003). Whose Bird?: Common Bird Names and the People They Commemorate. Yale University Press. pp. 330–331. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-10359-X.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Fry & Keith 2004
- ↑ 4.0 4.1 Sinclair, Ian; Ryan, Peter (2003). Birds of Africa south of the Sahara. Cape Town: Struik.
வெளி இணைப்புகள்
தொகு- இணைய பறவை சேகரிப்பில் ஸ்வைன்சனின் குருவி