சூரஜ்பூர்
சூரஜ்பூர் (Surajpur) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் சூரஜ்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். மாநிலத் தலைநகரம் இராய்ப்பூருக்கு வடக்கே 256 கிமீ தொலைவில் சூரஜ்பூர் நகரம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 43 இந்நகரத்தின் வழியாகச் செல்கிறது.
சூரஜ்பூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 23°13′N 82°51′E / 23.22°N 82.85°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சத்தீஸ்கர் |
மாவட்டம் | சூரஜ்பூர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
ஏற்றம் | 528 m (1,732 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 20,189 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 497229 |
தொலைபேசி குறியீடு | 07775 |
வாகனப் பதிவு | CG 29 |
இணையதளம் | surajpur |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 15 வார்டுகளும், 4,397 வீடுகளும் கொண்ட நகரத்தின் மொத்த மக்கள்தொகை 20,189 ஆகும். அதில் ஆண்கள் 10,430 மற்றும் பெண்கள் 9,759 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2649 (13.12%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 867 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.89% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 82.40%, முஸ்லீம்கள் 13.73%, சமணர்கள் 1.69%, கிறித்தவர்கள் 1.49% மற்றும் பிறர் 0.69 ஆகவுள்ளனர்.[1][2]
போக்குவரத்து
தொகுசாலைகள்
தொகுகட்னி-பிலாஸ்பூர்-ராய்ப்பூர், பிலாய் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 43 சூரஜ்பூர் நகரத்தின் வழியாகச் செல்கிறது.
வானூர்தி நிலையம்
தொகுஅருகமைந்த வானூர்தி நிலையம் இராய்ப்பூரில் உள்ளது.
தொடருந்து நிலையம்
தொகுசுரஜ்பூர் நகத்திற்கு வடக்கே 6 கிமீ தொலைவில் சூரஜ்பூர் ரோடு தொடருந்து நிலையம் உள்ளது. சூரஜ்பூர் ரோடு தொடருந்து நிலையத்திலிருந்து துர்க், ஷடோல், அம்பிகாபூர் நகரங்களுக்கு பயணியர் வண்டிகள் உள்ளது.[3]