சூர்யா கோபி

இந்தியப் பெண் எழுத்தாளர்

சூர்யா கோபி (Soorya Gopi) ஓர் இந்திய எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் சமூகவியலாளர் ஆவார் . 1987 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 26 ஆம் தேதி இவர் பிறந்தார். இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் நகரில் கவிஞர் பி.கே. கோபி, கோமளம் தம்பதியருக்கு மகளாக சூர்யா கோபி பிறந்தார்.

முனைவர்

சூர்யா கோபி
Soorya Gopi
இயற்பெயர்
സൂര്യ ഗോപി
பிறப்புஆகத்து 26, 1987 (1987-08-26) (அகவை 36)
கொல்லம்
தொழில்இலக்கியவாதி, சிறுகதை எழுத்தாளர், சமூகவியலாளர்
கல்விமுனைவர் சமூகவியல்
கல்வி நிலையம்சாமோரின் குருவாயூரப்பன் கல்லூரி
குறிப்பிடத்தக்க விருதுகள்கேந்திர சாகித்திய அகாதமி விருது
துணைவர்
பி.கே. சுசித்து (தி. 2012)
பிள்ளைகள்1

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

கோழிக்கோட்டில் இருக்கும் பிரசன்டேசன் உயர்நிலைப் பள்ளியில் சூர்யா கோபி கல்வி கற்றார். பாசல் இவாஞ்சலிக்கல் மிசன் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடித்தார். சமூகவியல் மற்றும் மலையாளத்தில் இளங்கலை பட்டமும், சமோரின் குருவாயூரப்பன் கல்லூரியில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இளங்கலை மற்றும் முதுகலை நிலைகள் இரண்டிலும் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் முதல் இடத்தைப் பெற்றார். கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார். [1]

தொழில் தொகு

தற்போது சூரிய கோபி, தேவாரத்திலுள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் சமூகவியல் துறையில் விரிவுரையாளராக உள்ளார் [2] கொச்சி . சிறகுள்ள சங்களங்கள் என்ற "சிறகுகள் கொண்ட சங்கிலிகள்" கதையால் சூர்யா கோபி நன்கு அறியப்படுகிறார். இந்த கதையின் உள்ளடக்கம் விற்கப்பட்ட ஒரு பெண்ணின் தனிமையில் உள்ள எண்ணங்களாகும். எளிய மற்றும் சிரமமில்லா பாணியில் ஆசிரியர் அந்த எண்ணங்களை முன்வைக்கிறார். தனது சொந்த பெற்றோர்களால் ஒரு வீட்டு வேலைக்காரியாக விற்கப்பட்ட ஒரு பெண் எப்படி தனிமைச் சிறையில் அமர்ந்திருக்கிறாள் மற்றும் கடுமையான வலியிலும் துயரத்திலும் காயமடைந்த இதயத்துடன் எப்படி வெளி உலகத்தைப் பார்க்கிறாள் என்பதை கதை சொல்கிறது. பெண் தன்னை வாங்கியவனிடமிருந்து தப்பித்து நெரிசலான நகரத்தில் காணாமல் போகும் இடத்தில் கதை முடிகிறது. கதையில் பயன்படுத்தப்பட்டுள்ள குறியீடுகளும் உருவகங்களும் குறிப்பிடத்தக்கவை. [3]

நூல் விளக்கம் தொகு

  • பூக்களே சினேகிச்ச பெண்குட்டி (2006)
  • உப்புமழையிலே பச்சிலகால் (2012)
  • பிராணாயாமத்ரியம் (2016) [4]
  • கமுகிக்கடுவா (2020)*

விருதுகள் தொகு

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சூர்யா 2012 ஆம் ஆண்டில் பி.கே. சுசித்தை மணந்தார். இவர்களுக்கு சிலங்கா என்ற மகள் உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. അക്ഷരങ്ങളുണരുന്ന നന്മവീട്| Interview| PK Gopi| Arya Gopi| Soorya Gopi (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-12-29
  2. കാവ്‌, സ്വീറ്റി. "'കഥയോ കവിതയോ എഴുതിയാൽ അത് അച്ഛൻ എഴുതിത്തന്നതാണോയെന്നായിരുന്നു അന്നൊക്കെ ചോദ്യം'". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2019-12-29. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  3. "Women Writers of Kerala, Women Authors of Kerala, Women Writers of India, All Kerala Writers". womenwritersofkerala.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  4. "കാവ്യപൂമരത്തിലെ രണ്ടു പെൺപുഷ്പങ്ങൾ". ManoramaOnline. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  5. "കേന്ദ്ര സാഹിത്യ അക്കാദമിയുടെ യുവ സാഹിത്യപുരസ്കാരം സൂര്യാ ഗോപിക്ക്". asianetnews.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
  6. "പൂര്‍ണം ഈ അപൂര്‍ണത". deshabhimani.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 "About Soorya Gopi". Soorya Gopi (in ஆங்கிலம்). 2014-06-06. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யா_கோபி&oldid=3935034" இலிருந்து மீள்விக்கப்பட்டது