செட்டியள்ளி

கருநாடக சிற்றூர்

செட்டியள்ளி (Shettihalli) என்பது இந்தியாவின், கருநாடகத்தின், பெங்களூர் நகர மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். பெங்களூர் பெருநகர மாநகராட்சியின் 200 வார்டுகளில் இது 12வது வார்டாகும். இது தாசரள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. எஸ். முனிராஜு (பா.ஜ.க.விலிருந்து) (2008-2017) ச.ம.உ.வாக இருந்தார். மஞ்சுநாத் (2017- முதல்) (ம.ஜ-விலிருந்து) ச.ம.உவாக இருந்தார். செட்டியள்ளி வார்டான 12 வது வார்டுக்கு உட்பட்ட மற்ற கிராமங்களாக மேடரள்ளி, மல்லசந்திரம், தாசரள்ளி, கம்மகொண்டனள்ளி, அப்பிகெரே ஆகியவை உள்ளன. வளர்ந்துவரும் பகுதிகளில் ஒன்றாக செட்டியள்ளி உள்ளது. செட்டியள்ளியிலிருந்து ஜலஹள்ளி மெட்ரோ நிலையத்திற்கு ஐந்து நிமிடங்களும், யஷ்வந்த்பூர் தொடருந்து நிலையத்திற்கு 15 நிமிடங்களும், பெங்களூர் பன்னாட்டு வானூர் நிலையத்திற்கு 35 நிமிடங்களும், தும்கூர் நெடுஞ்சாலைக்கு ஐந்து நிமிடங்களும், ஓரியன் மாலுக்கு 15 நிமிடங்களும் பயண நேரம் ஆகும். செட்டியள்ளியில் ஏ.ஜே. மார்ட், மெட்ரோ மினி பசார், கிருஷ்ணா பேக்கரி, குவாளிட்டி ஸ்டேஷனரி ஸ்டோர், ஜாமிஸ் கேக் & பேக்ஸ். டி நீட்ஸ் போன்ற பல மளிகை மற்றும் பல்பொருள் அங்காடிகள் உள்ளன. எஸ்.கே மருத்துவமனை மற்றும் பிரின்ஸ் ராயல் ஆகியவை செட்டியள்ளியின் பெருமைமிக்க அடையாளங்களாகும்.[சான்று தேவை]

செட்டியள்ளி
ஜலள்ளி மேற்கு
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூர் மாவட்டம்
அரசு
 • வகைஊராட்சி
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
560015
தொலைபேசி குறியீடு2837
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA
அருகில் உள்ள நகரம்தும்கூர்
இணையதளம்karnataka.gov.in

செட்டியள்ளிக்கு அருகில் காட்டுயிர் சரணாலயம் உள்ளது. [1]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Shettihalli wildlife Sanctuary", WildTrails Recent Sightings, பார்க்கப்பட்ட நாள் 2018-03-19
"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டியள்ளி&oldid=3749832" இலிருந்து மீள்விக்கப்பட்டது