செண்டராட்டா வானூர்தி நிலையம்
செண்டராட்டா வானூர்தி நிலையம் (ஐசிஏஓ: WMAJ); (ஆங்கிலம்: Jendarata Airport மலாய்: Lapangan Terbang Jendarata) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் பாகன் டத்தோ மாவட்டத்தில் (Bagan Datuk District), ஊத்தான் மெலிந்தாங் (Hutan Melintang) நகருக்கு அருகில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.[2]
வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | தனியார் | ||||||||||
இயக்குனர் | யுனைடெட் பிளான்டேசன் (United Plantations) | ||||||||||
சேவை புரிவது | தெலுக் இந்தான் | ||||||||||
அமைவிடம் | பாகன் டத்தோ மாவட்டம் பேராக், மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00) | ||||||||||
உயரம் AMSL | 56 ft / 17 m | ||||||||||
ஆள்கூறுகள் | 03°53′59″N 100°56′55″E / 3.89972°N 100.94861°E | ||||||||||
இணையத்தளம் | https://web.archive.org/web/20120405204337/ http://www.bernamriver.com/ | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
Source: Aeronautical Information Publication Malaysia[1] |
யுனைடெட் பிளான்டேசன் (United Plantations) தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமான நிலையம்; அந்தத் தோட்ட நிறுவனத்தினாலேயே இயக்கப் படுகிறது. இந்த நிறுவனம் 1906-ஆம் ஆண்டில் தெலுக் இந்தான், ஊத்தான் மெலிந்தாங், பாகன் டத்தோ பகுதிகளில் ரப்பர் தோட்டங்களை வாங்கத் தொடங்கியது.
பொது தொகு
செண்டராட்டா வானூர்தி நிலையத்தில் சிறு விமானங்கள் மட்டுமே தரையிறங்க முடியும். நில வழியாகப் பயணம் செய்வதை விட, சிறு விமானங்கள் மூலமாகப் பயணம் செய்வது பிரித்தானிய தோட்ட நிர்வாகிகளுக்கு மிகவும் வசதியாக அமையும் என்பதால் இந்த விமான நிலையம் உருவாக்கப்பட்டது.[3]
இந்த விமான நிலையத்திற்குள் திட்டமிடப்பட்ட விமானப் பயணங்கள் எதுவும் இல்லை; தனியார் விமானங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றன. அனைத்து விமானப் பயண நடவடிக்கைகளுக்கும் யுனைடெட் பிளான்டேசன் நிறுவனத்தின் முன் அனுமதி தேவை.
செண்டராட்டா தோட்டம் தொகு
செண்டராட்டாவில் யூனிடாட்டா (Unitata) மற்றும் யுனைடெட் பிளான்டேசன் (United Plantation Sdn Bhd) நிறுவனங்களுக்குச் சொந்தமான செம்பனை தொழிற்சாலைகள் உள்ளன.
செண்டராட்டா தோட்டம் ஒரு பெரிய செம்பனை தோட்டம் ஆகும். இந்தத் தோட்டம் ஊத்தான் மெலிந்தாங்கிற்கு அருகில் உள்ளது. 1906-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது.[4]
சான்றுகள் தொகு
- ↑ AIP Malaysia: Index to Aerodromes at Department of Civil Aviation Malaysia
- ↑ United Plantations : History பரணிடப்பட்டது 2020-08-08 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 109 years Jendarata estate United Plantations & Palm Oil.
- ↑ Unitata Berhad Jendarata Estate.