செங்கழுத்து வல்லூறு

பறவை இனம்
(செந்தலை வல்லூறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செந்தலை வல்லூறு
Falco chicquera chicquera (India)
Falco chicquera ruficollis (Etosha, Namibia)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
F. chicquera
இருசொற் பெயரீடு
Falco chicquera
Daudin, 1800
துணையினம்

1-3, see text.

செங்கழுத்து வல்லூறு (red-necked falcon அல்லது red-headed merlin (Falco chicquera) என்பது பால்கன் குடும்பத்தைச் சேர்ந்த கொன்றுண்ணிப் பறவை ஆகும். காண்பதற்கு அழகான சிறிய வல்லூறு ஆகும். இப்பறவை இந்தியாவிலும், சகாராவுக்கு தெற்கில் உள்ள ஆபிரிக்கா கண்டப்பகுதிகளிலும் காணப்படுறது. நடுத்தர அளவிலான இப்பறவைக்கு நீலம் கலந்த சாம்பல் நிற இறக்கைகள் உள்ளன. தலை பிடரி, கழுத்து, கழுத்தின் பக்கம் ஆகியன செம்பழுப்பாக இருக்கும். இறக்கையின் முதன்மை இறகுகள் கருப்பாகவும், வால் நுனியில் ஒரு கருப்பு பட்டை தனித்துவமாக இருக்கும். இந்திய துணை இனமான Falco chicquera chicquera செந்தலை வல்லூறு என்று அறியப்படுகிறது. இது முக்கியமாக இந்திய துணைக்கண்டத்தின் சமவெளிகளில் காணப்படுகிறது. சகாராவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்காவில் காணப்படும் Falco chicquera ruficollis என்ற கிளையினங்கள் சில நேரங்களில் அதன் நன்கு பிரிந்துள்ள புவியியல் எல்லை மற்றும் தனித்துவமான வடிவத்தின் அடிப்படையில் செம்பழுப்பு கழுத்து வல்லூறு (Falco ruficollis), ஒரு முழு இனமாக கருதப்படுகின்றன. இது இந்தியாவில் காணப்படும் பறவையின் வடிவத்துடன் மிகவும் ஒத்ததாகத் தோன்றுகிறது. ஆனால் சிற்றில வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலான வல்லூறுகளைப் போலவே, பெண் பறவைகள் ஆண் பறவைகளை விட அளவில் பெரியவை. இவை பெரும்பாலும் விடியற்காலையிலும், அந்தி நேரத்தில் ஜோடியாக வேட்டையாடி, சிறிய பறவைகள், வெளவால்கள், அணில்கள் போன்றவற்றைப் பிடிக்கிறன.

விளக்கம்

தொகு
 
ஒரு இளம் செந்தலை வல்லூறு முதுகு மற்றும் தோள்களில் செம்பழுப்பு நிறம்

செங்கழுத்து வல்லூறு ஒரு நடுத்தர அளவிலான, நீண்ட சிறகுகள் கொண்ட பறவை இனம் ஆகும். இதன் உச்சந்தலையும் கழுத்தும் செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இது சராசரியாக 30-36 செ.மீ நீளம் கொண்டது, இறக்கைகளோடு 85 செ.மீ. அகலம் கொண்டது. இறக்கைகளும் உடலின் மேல் பகுதிகளும் நீலம் தோய்ந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். வால் கருஞ்சாம்பல் நிறம் கொண்டு நுனிக்கு சற்று மேலே அகன்ற பெரிய கரும்பட்டைகளோடு இருக்கும். ஓய்வு எடுக்கும் நிலையில் இறக்கை முனை வால் நுனிவரை எட்டாது. கால்களும் விரல்களும் ஆரஞ்சு மஞ்சள் நிறத்திலும், நகங்கள் கருப்பாகவும் இருக்கும். கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அலகின் முனை கருப்பு நிறமாகவும், அடிப்பகுதி பச்சை கலந்த மஞ்சள் நிறமாகவும் இருக்கும். இந்த இனத்தின் குரல் கி-கி-கி-கி என்று இருக்கும். இவற்றில் ஆண் பெண் பறவைகளுக்கு இடையில் பாலின இல்லை. ஆனால் பிற வல்லூறுகளைப் போல ஆண் பறவை பெண் பறவையை விட அளவில் சிறியது.[3]

நடத்தை

தொகு

இந்த வல்லூறுகள் பொதுவாக ஆணும் பெண்ணும் சேர்ந்தே வேட்டையாடக்கூடியன. பெரும்பாலும் விடியற் காலையிலும், அந்தி வேளையிலும் வேட்டையாடும். சிலசமயங்களில் ஒரு நுட்பத்தை பயன்படுத்துகின்றன. ஒன்று ஒரே அம்புபோல் பாய்ந்து இரையைத் துரத்த மற்றோரு பறவை இரையை மேலிருந்து பாய்ந்து மடக்கிப் பிடிக்கும். இவை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் பறந்து வேடையாடுகின்றன.[4][5][6] மரங்களில் இலை மறைவில் அமர்ந்திருக்கும் சிறு பறவைகளைக் கூடத் துரத்திப் பிடிக்கும். சிட்டுக்குருவி, வாலாட்டி, வானம்பாடி, உள்ளான் ஆகிய பறவைகளை வேட்டையாடுவதுடன் எலி, வௌவால் பல்லி போன்ற விலங்குகளையும் வேட்டையாடி உண்ணும்.

செங்கழுத்து வல்லூறு மதிய நேரங்களில் தண்ணீர் கிடைக்கும் இடங்களில் குடிக்கும். இது இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பொதுவான நடைமுறை. சில சமயங்களில் நீர்நிலைகளுக்குச் செல்கிறது.[7]

இந்தியாவில் இதன் இனப்பெருக்க காலம் சனவரி முதல் மார்ச் வரை ஆகும். சாம்பியாவில், இனப்பெருக்க காலம் ஆகத்து மாதத்தில் தொடங்குகிறது. இந்த ஜோடிகள் காதலுடன் உணவு ஊட்டும், இதில் பெண் ஆணுக்கு உணவு ஊட்டும். இந்த அசாதாரண நடத்தை பிடித்து வளர்க்கும்போதும் காணப்படுகிறது.[6][8] இந்த வல்லூறுகள் பொதுவாக காகம், பருந்து போன்ற பிற பறவைகளின் பழைய கூடுகளை பயன்படுத்துகின்றன. அல்லது உயரமான மரத்தின் கிளை இடுக்கு அல்லது பனை மரத்தின் உச்சியில் கட்டும் கூட்டில் 3-5 முட்டைகளை இடுகிறது. ஆப்பிரிக்காவில், இவை பனை மரத்தில் சொந்தமாக கூடு கட்டுவது அல்லாமல், அகாசியாவில் காகங்கள் (கோர்வஸ் ஆல்பஸ்), ஆப்பிரிக்க மீன் கழுகுகள் (ஹாலியேட்டஸ் வோசிஃபர்) ஆகியவற்றின் கூடுகளை மீண்டும் பயன்படுத்துவதாக அறியப்படுகிறது. இந்தியாவில் இவற்றின் கூடு பெரும்பாலும் பெரிய மா, வேம்பு போன்ற பசுமையாக மரங்களில் மறைவாக இருக்கும். கூடு உள்ள பகுதி நன்கு பாதுகாக்கப்பட்டு காகங்கள் மற்றும் பருந்துகள் விரட்டியடிக்கப்படுகின்றன.[3] இந்த பருந்து மனிதர்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் உள்ள மரங்களில் கூடு கட்டியதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[7] பெண் பறவை மட்டுமே அடைகாக்கும். முட்டைகள் சுமார் 32 முதல் 34 நாட்களுக்குப் பிறகு குஞ்சு பொரிக்கின்றன. புதிதாக பிறந்த குஞ்சுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு வாரத்திற்கு பெண் பறவையின் அரவணைப்பில் இருக்கும். சோர்ந்திருக்கும் பெண் பறவைக்கும் குஞ்சுகளுக்கும் ஆண் பறவை உணவை கொண்டு வருகிறது. ஆப்பிரிக்காவில் சுமார் 35 முதல் 37 நாட்களிலும், இந்தியாவில் 48 நாட்களிலும் குஞ்சுகள் பறக்கத் துவங்குகின்றன.[7][9][10]

மேற்கோள்கள்

தொகு
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Falco chicquera". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Mendelsohn, J. M.; A. C. Kemp; H. C. Biggs; R. Biggs; C. J. Brown (1989). "Wing areas, wing loading and wing spans of 66 species of African raptors". Ostrich: Journal of African Ornithology 60 (1): 35–42. doi:10.1080/00306525.1989.9634503. 
  3. 3.0 3.1 Baker, E.C. Stuart (1928). The Fauna of British India including Ceylon and Burma. Birds. Volume 5 (2nd ed.). London: Taylor and Francis. pp. 47–49.
  4. Ali, Salim, Ripley S.D (1978). Handbook of the Birds of India and Pakistan. Volume 1. New Delhi: Oxford University Press. pp. 359–360.
  5. Radcliffe, E. Delme (1871). Notes on falconidae used in falconry. Southsea: Mills and Son. pp. 13–14.
  6. 6.0 6.1 Subramanya, S. (1985). "Hunting and feeding habits of the Redheaded Merlin Falco chicquera". Newsletter for Birdwatchers 25 (1&2): 4–8. https://archive.org/stream/NLBW25#page/n5/mode/1up. 
  7. 7.0 7.1 7.2 Naoroji, Rishad (2011). "Breeding of the Red-headed Falcon Falco chicquera in Saurashtra, Gujarat, India". Forktail 27: 1–6. http://orientalbirdclub.org/wp-content/uploads/2014/02/Red-headed-Falcon.pdf. 
  8. Olwagen, C.D.; Olwagen, K. (1984). "Propagation of captive red-necked falcons Falco chicquera". Koedoe 27: 45–59. doi:10.4102/koedoe.v27i1.550. https://koedoe.co.za/index.php/koedoe/article/download/550/579. 
  9. Osborne, Timothy O. (1981). "Ecology of the red-necked falcon Falco chicquera in Zambia". Ibis 123 (3): 289–297. doi:10.1111/j.1474-919X.1981.tb04031.x. 
  10. Subramanya, S (1982). "Nesting of Redheaded Merlin (Falco chicquera Daudin) in Bangalore, Karnataka". J. Bombay Nat. Hist. Soc. 79 (2): 412–413. https://biodiversitylibrary.org/page/48744828. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Falco chicquera
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கழுத்து_வல்லூறு&oldid=3769785" இலிருந்து மீள்விக்கப்பட்டது