செந்தூரப்பூவே (தொலைக்காட்சித் தொடர்)

2020 தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்

செந்தூரப்பூவே என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பத் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இதில் பிரபல தமிழ் நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக தறி என்ற தொடரில் நடித்த ஸ்ரீ நிதி என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்கள்.[3]

செந்தூரப்பூவே
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்து
 • நந்தன் ஸ்ரீதரன்
 • பி.ஏ.ராகவன்
 • குரு சம்பத்
இயக்கம்அப்துல் கபீஸ்
நடிப்பு
முகப்பிசைசெந்தூரப்பூவே
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்340
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்திருகானம்
ஒளிப்பதிவுசரவணன்
தொகுப்புமுத்து
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்கலா கம்யூனிகேஷன்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்27 சூலை 2020 (2020-07-27) –
13 ஏப்ரல் 2022 (2022-04-13)

இத்தொடர் சூலை 27, 2020 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி 4 அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு, பின்னர் 2022 முதல் மீண்டும் ஒளிபரப்பாகி, ஏப்ரல் 13, 2022 அன்று 340 அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது.[1][2]

கதை சுருக்கம்

தொகு

இந்த தொடரில் வயது வித்தியாயத்தில் திருமணம் செய்யும் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு எப்படி சந்தோசமாக வாழ்கின்றார்கள் என்பது தான் கதை.

நடிகர்கள்

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு

துணைக் கதாபாத்திரம்

தொகு
 • நிவாஷினி - கனிமொழி (துரைசிங்கத்தின் மூத்த மகள்)
 • ரியா மனோஜ் (1-24) → திவ்யதர்ஷினி - கயல்விழி துரைசிங்கம் (துரைசிங்கத்தின் இரண்டவாது மகள்)
 • சாந்தி வில்லியம்ஸ் - ராஜலட்சுமி (துரைசிங்கத்தின் தாய்)
 • ஸ்ரீ துர்கா (1-24) → யமுனா சின்னதுரை - பாகம்பிரியாள் (துரைசிங்கத்தின் சகோதரி)
 • தர்ஷா குப்தா[4] - ஐஸ்வர்யா ராஜேந்திரன் (துரைசிங்கத்தின் உறவினர்)
 • பாபு - ராஜேந்திரன் (ஐஸ்வர்யாவின் தந்தை)
 • பெரோஸ் கான் - மாயா அழகு (ஐஸ்வர்யாவின் அண்ணா)
 • பாண்டி ரவி - பாண்டியன் (ரோஜாவின் மாமா)
 • சிமிர்தி - சாந்தி (ரோஜாவின் அத்தை)
 • சுமதி ஸ்ரீ - முத்துலட்சுமி (ரோஜாவின் தாய்)
 • தீபா சங்கர் - மாரியம்மா (அன்புவின் தாய்)
 • திரவியம் - அன்பு (ரோஜாவின் கணவன்)
  • இந்த தொடரில் இறந்துவிட்டார்
 • ஜெமினி மணி - மணி

சிறப்புத் தோற்றம்

தொகு

தயாரிப்பு

தொகு

இந்த தொடர் 16 மார்ச் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்படுவதற்காக திட்டமிடப்பட்டது. கொரோனாவைரசு காரணத்தால் 27 ஜூலை 2020 முதல் ஒளிபரப்பானது.[5]

நடிகர்களின் தேர்வு

தொகு

இந்த தொடரில் பிரபல முன்னால் நடிகரான ரஞ்சித் என்பவர் 'துரைசிங்கம்' என்ற கதாபாத்திரம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக தறி என்ற தொடரில் நடித்த ஸ்ரீ நிதி என்பவர் 'ரோஜா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். 'தர்ஷா குப்தா' என்பவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். துரைசிங்கத்தின் மகள்களாக 'நிவாஷினி' மற்றும் 'திவ்யதர்ஷினி' ஆகியோர் நடிக்கிறார்கள். இவரின் தாய் கதாபாத்திரத்தி பிரபல சின்னத்திரையை நடிகை 'சாந்தி வில்லியம்ஸ்' என்பவர் 'ராஜலட்சுமி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

மதிப்பீடுகள்

தொகு

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2020 4.2% 5.4%
3.1% 4.3%
2021 2.4% 3.5%
1.2% 2.8%

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 "New daily soap Senthoora Poove to premiere today". The Times of India.{{cite web}}: CS1 maint: url-status (link)
 2. 2.0 2.1 "New serial line up in Star Vijay". The Indian Express.{{cite web}}: CS1 maint: url-status (link)
 3. "Senthuoora Poove". www.newsbugz.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 4. "Dharsha Gupta gets back to Chennai for shoot; shares a glimpse of her first flight experience post-lockdown". The Times of India.{{cite web}}: CS1 maint: url-status (link)
 5. "Ranjith makes his TV debut; to star in Senthoora Poovey". The Times of India.{{cite web}}: CS1 maint: url-status (link)

வெளி இணைப்புகள்

தொகு
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி செந்தூரப்பூவே அடுத்த நிகழ்ச்சி
காற்றுக்கென்ன வேலி நாம் இருவர் நமக்கு இருவர்
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி 7:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி செந்தூரப்பூவே
அடுத்த நிகழ்ச்சி
பாண்டியன் ஸ்டோர்ஸ்
(21 செப்டம்பர் 2020 - 3 அக்டோபர் 2020)
தமிழும் சரஸ்வதியும்
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி 9:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி செந்தூரப்பூவே
(27 சூலை 2020 - 3 அக்டோபர் 2020)
அடுத்த நிகழ்ச்சி
அரண்மனை கிளி
(11 நவம்பர் 2019 - 27 மார்ச் 2020)
பிக் பாஸ் தமிழ் 4