சென்னானூர்
சென்னானூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தின் கெங்கபிரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.[1]
சென்னானூர் | |
---|---|
சென்னானூர், கிருஷ்ணகிரி, தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 12°17′38″N 78°32′29″E / 12.2938°N 78.5415°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
ஏற்றம் | 366.53 m (1,202.53 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ், கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635307 |
தொலைபேசிக் குறியீடு | +914341****** |
வாகனப் பதிவு | TN - 24 ** xxxx |
புறநகர்ப் பகுதிகள் | ஊத்தங்கரை, உப்பாரபட்டி, கெங்கபிரம்பட்டி, கொல்லநாய்க்கனூர், அப்பிநாயக்கன்பட்டி |
மக்களவைத் தொகுதி | கிருஷ்ணகிரி |
சட்டமன்றத் தொகுதி | ஊத்தங்கரை |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 366.53 மீ. உயரத்தில், (12°17′38″N 78°32′29″E / 12.2938°N 78.5415°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இக்கிராமம் ஊத்தங்கரை வட்டத்தில் அமைந்துள்ளது.[2]
தொல்லியல் முக்கியத்துவம்
தொகுதமிழ்நாட்டின் கற்கால பண்பாட்டுச் சுவடுகளால், சிறப்பான தொல்லியல் களமாக சென்னானூர் திகழ்கிறது.[3]
சென்னானூர் பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[4] சங்க காலத்திய பொருட்களாகக் கூறப்படும் சங்கு வளையல் துண்டுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சுடுமண் முத்திரை, தக்களி, வட்டச் சில்லுகள், சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வெட்டுக் கருவி, இடைக்கால வரலாற்றைச் சார்ந்தாகக் கருதப்படும் இரும்பினால் தயாரிக்கப்பட்ட ஏர்க்கலப்பையினுடைய கொழுமுனை மற்றும் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், மூடியுடன் கூடிய பானை, தொட்டி, பாசிமணிகள், உறை கிணறு, சுடுமண் கிண்ணங்கள், வெள்ளியினாலான முத்திரைக் காசு, செம்பினாலான அஞ்சனக் கோல், சிவப்பு வண்ணக் கொள்கலன், தந்தத்தாலான பகடைக்காய், பாறை ஓவியங்கள், கற்காலக் கோடரி மற்றும் சுடுமண் சிற்பம் ஆகியவை இவ்வூரின் தொல்லியல் துறையின் அகழாய்வுகளின் போது கிடைக்கப்பெற்ற பொருட்களில் முக்கியமானவையாகும்.[5][6][7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "கிருஷ்ணகிரி - சென்னானூர் அகழாய்வில் 327 தொல்பொருட்கள் கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்". Kamadenu (in ஆங்கிலம்). 2024-11-16. பார்க்கப்பட்ட நாள் 2024-11-17.
- ↑ "ஊத்தங்கரை சென்னானூர் அகழாய்வு தமிழ் நாகரிகத்தின் மணிமகுடம்: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்". Hindu Tamil Thisai. 2024-11-17. பார்க்கப்பட்ட நாள் 2024-11-16.
- ↑ DIN (2024-11-16). "சென்னானூர் தமிழ் நாகரிகத்தின் மற்றொரு மணிமகுடம்: அமைச்சர் தங்கம் தென்னரசு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-11-16.
- ↑ Porselvi (2024-11-16). "327 தொல்பொருட்கள் கண்டெடுப்பு : தொல்லியல் தளமாக சென்னானூர் திகழ்வது தமிழ் நாகரிகத்தின் மற்றொரு மணிமகுடம் : அமைச்சர் தங்கம் தென்னரசு". Dinakaran (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-16.
- ↑ "சென்னானூர் அகழாய்வு - தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு! - News7 Tamil" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-07-21. பார்க்கப்பட்ட நாள் 2024-11-17.
- ↑ "சென்னானூரில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டெடுப்பு". Hindu Tamil Thisai. 2024-06-25. பார்க்கப்பட்ட நாள் 2024-11-17.
- ↑ "'சென்னானூர் அகழாய்வில் 4,000 ஆண்டு பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டெடுப்பு'". Hindu Tamil Thisai. 2024-06-24. பார்க்கப்பட்ட நாள் 2024-11-17.
- ↑ DIN (2024-06-28). "சென்னானூர் அகழாய்வில் சுடுமண்ணாலான முத்திரை கண்டெடுப்பு!". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-11-17.