சென்னூர் சட்டமன்றத் தொகுதி

சென்னூர் சட்டமன்றத் தொகுதி (Chennur Assembly constituency) இந்தியாவின் தெலங்காணா சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகும். ஆரம்பத்தில் 1962 வரை இரு உறுப்பினர் தொகுதியாக இருந்து, பின்னர் 1962ல் ஒற்றை உறுப்பினர் தொகுதியாக மாற்றப்பட்டது. இது மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றாகும். சென்னூர் மஞ்செரியல் மாவட்டத்தின் தெற்கே அமைந்துள்ளது. இது பெத்தப்பள்ளி மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.

சென்னூர்
Chennur
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி எண் 2
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்மஞ்செரியல்
மக்களவைத் தொகுதிபெத்தபள்ளி
மொத்த வாக்காளர்கள்1,49,679
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த காதம் விவேகானாந் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

மண்டலங்கள்

தொகு

சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்
சென்னூர்
மந்தமர்ரி
கொட்டப்பள்ளி
ஜெய்ப்பூர்
பீமரம்

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு

சென்னூரை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டமன்ற உறுப்பினர்கள்[1]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேச சட்டமன்றம்
1962 கோடாடி ராஜமல்லு இந்திய தேசிய காங்கிரசு
1967
1972
1978 சி. நாராயணா
1983 எஸ். சஞ்சீவ ராவ்
1985 போடா ஜனார்தன் தெலுங்கு தேசம் கட்சி
1989
1994
1999
2004 ஜி. வினோத் இந்திய தேசிய காங்கிரசு
2009 நல்லல ஓடலு பாரத் இராட்டிர சமிதி
2010 (இடைத்தேர்தல்s)
தெலங்காணா சட்டமன்றம்
2014 நல்லல ஓடலு பாரத் இராட்டிர சமிதி
2018 பால்கா சுமன்
2023 கதம் விவேகானந்த் இந்திய தேசிய காங்கிரசு

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "State Elections 2004 - Partywise Comparison for 263-Chennur Constituency of ANDHRA PRADESH". Archived from the original on 1 August 2018. பார்க்கப்பட்ட நாள் 5 October 2018.

வெளி இணைப்புகள்

தொகு