சென்னை ஆலப்புழா அதிவிரைவு தொடருந்து
ஆலப்புழா அதிவிரைவு தொடருந்து என அழைக்கப்படும் இந்த தொடருந்து இந்தியாவில் மிகவும் பழமையான தொடருந்துகளில் ஒன்றாகும். 1977ம் ஆண்டு முதல் முதல் தென்னிந்திய ரயில்வே துறையினரால் தமிழகத்தின் சென்னை மற்றும் கேரளா மாநிலத்தின் ஆலப்புழா நகரங்களுக்கு இடையே இந்த தொடரூந்து இயக்கப்பட்டு வருகிறது. 16041/16042 என்ற எண்களில் இயக்கப்பட்டு வந்த இந்த தொடரும் தான் அது அது 2014 ஆம் ஆண்டு முதல் அதிவிரைவு தொடருந்தாக மாற்றப்பட்டு 22639/22640 என்ற எண்களாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.[1]
சென்னை சென்ட்ரல் ஆலப்புழா அதிவிரைவு தொடருந்து | |||
---|---|---|---|
ஆலப்புழா அதிவிரைவு தொடருந்து | |||
கண்ணோட்டம் | |||
வகை | அதிவிரைவு | ||
நிகழ்நிலை | இயக்கத்தில் உள்ளது | ||
நிகழ்வு இயலிடம் | கேரளா மற்றும் தமிழ்நாடு | ||
முதல் சேவை | 1977 | ||
நடத்துனர்(கள்) | தென்னிந்திய ரயில்வே | ||
வழி | |||
தொடக்கம் | ஆலப்புழா | ||
இடைநிறுத்தங்கள் | 22 | ||
முடிவு | சென்னை சென்ட்ரல் சந்திப்பு | ||
ஓடும் தூரம் | 746 km (464 mi) | ||
சராசரி பயண நேரம் | 13 மணி 35 நிமிடங்கள் | ||
சேவைகளின் காலஅளவு | தினந்தோறும் | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | ஈரடுக்கு மற்றும் மூன்றடுக்கு குளிர்சாசன பெட்டிகள், படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் சாதாரண வகுப்பு பெட்டிகள் | ||
இருக்கை வசதி | வசதி உண்டு | ||
படுக்கை வசதி | வசதி உண்டு | ||
உணவு வசதிகள் | வசதி இல்லை | ||
காணும் வசதிகள் | LHB Coaches | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு | இருவழி | ||
பாதை | அகலப்பாதை தொடருந்து | ||
வேகம் | 65 kilometres per hour (40 mph) | ||
|
வரலாறு
தொகு1977 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இந்த தொடருந்து சென்னை மற்றும் கொச்சி நகர்களுக்கு இடையே 2012ஆம் ஆண்டுவரை இயக்கப்பட்டு வந்தது. 2012ஆம் ஆண்டு கேரள மாநில அரசு இந்த அதிவிரைவு தொடர் வண்டியை அம்மாநில தலைநகரான திருவனந்தபுரம் வரை இயக்க கோரியது. அதன்படி இந்த தொடருந்து ஆலப்புழா வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு தான் இந்த தொடருந்து அதிவிரைவு தொடருந்தாக மாற்றப்பட்டது அதற்கு முன்பு சாதாரண விரைவு வண்டியாக இந்தத் தொடருந்து இயக்கப்பட்டது. அதன்படி முன்னதாக 16041 மற்றும் 14042 என்ற எண்களில் இயங்கிவந்த இந்த வண்டி 22639 மற்றும் 22640 [2] The corresponding Chennai SuperFast Express runs from Alleppey to Chennai (train number 22640).[2] என்ற எண்களுக்கு மாற்றப்பட்டு அதன்படி இயங்கிவருகிறது. மேலும் தமிழ்நாடு மாநிலங்களில் ஒன்றான கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் சந்திப்பில் சந்திப்பில் நிற்காமல் செல்லும் இந்த தொடருந்து 30 ஆண்டுகளுக்கு பின்பு பின்பு 2016 ஆம் ஆண்டு முதல் முதல் கோயம்புத்தூர் சந்திப்பிலும் நின்று செல்லும் படி இயக்கப்படுகிறது.[3]
பயணப் பெட்டிகளின் தன்மை
தொகு- ஈரடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இரண்டு
- மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் நான்கு
- இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் பன்னிரெண்டு
- முன்பதிவு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கான பொதுப் பெட்டிகள் இரண்டு
- சரக்கு பெட்டிகள் இரண்டு என 22 பெட்டிகளைக் கொண்டு இந்த தொடருந்து இயக்கப்படுகிறது.[4]
சேவைகள்
தொகுதினசரி செயல்படும் இந்த விரைவு தொடருந்து காட்பாடி சேலம் ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் பாலக்காடு திருச்சூர் அங்கமாலி எர்ணாகுளம் வழியாக 24 நிறுத்தங்கள் கடந்து ஆலப்புழா சென்றடைகிறது. இந்தத் தொடருந்து 739 கிலோமீட்டர் பயணம் செய்ய மணிக்கு 53 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு பயண நேரம் 13 மணிநேரம் 35 நிமிடங்களிள் கடக்கிறது.
திரிச்சூர் சந்திப்பு நிலையத்திலிருந்து ஆலப்புழா சந்திப்பு நிலையம் வரை இந்த தொடர்வண்டியின் S12 வது பெட்டி முன்பதிவு செய்து காத்திருப்போருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்பதிவு செய்தும் படுக்கை வசதி கொடுக்கப்படாத பயணிகளுக்கு குறிப்பிட்ட கட்டணத்தின் அடிப்படையில் இந்தப் பெட்டியில் இவ்விரு எங்களுக்கு இடையே மட்டும் படுக்கை வசதியுடன் உறுதி செய்து தரப்படும்.[5] இந்த வசதி ஜனவரி 4 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியுள்ளது.
வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்
தொகுஎண் | நிலையத்தின் பெயர் (குறியீடு) | வரும் நேரம் | புறப்படும் நேரம் | நிற்கும் நேரம் | கடந்த தொலைவு | நாள் |
---|---|---|---|---|---|---|
1 | சென்னை சென்ட்ரல் (MAS) | தொடக்கம் | 20:55 | 0 | 0 கி.மீ | 1 |
2 | அரக்கோனம் சந்திப்பு (AJJ) | 21:48 | 21:50 | 2 நிமி | 69 கி.மீ | 1 |
3 | காட்பாடி சந்திப்பு (KPD) | 22:38 | 22:40 | 2 நிமி | 130 கி.மீ | 1 |
4 | ஜோலார்பேட்டை (JTJ) | 00:13 | 00:15 | 2 நிமி | 214 கி.மீ | 1 |
5 | சேலம் சந்தி்ப்பு (SA) | 01:38 | 01:40 | 2 நிமி | 334 கி.மீ | 1 |
6 | ஈரோடு சந்திப்பு(ED) | 02:32 | 02:35 | 3 நிமி | 394 கி.மீ | 1 |
7 | திருப்பூர் சந்திப்பு (TUP) | 03:18 | 03:20 | 2 நிமி | 444 கி.மீ | 1 |
8 | கோயம்புத்தூர் சந்திப்பு (CBE) | 04:13 | 04:15 | 2 நிமி | 495 கி.மீ | 1 |
9 | போத்தனூர் சந்தப்பு (PTJ) | 04:29 | 04:30 | 1 நிமி | 500 கி.மீ | 1 |
10 | பாலக்காடு சந்திப்பு (PGT) | 05:32 | 05:35 | 3 நிமி | 550 கி.மீ | 1 |
11 | ஒட்டப்பலம் (OTP) | 05:59 | 06:00 | 1 நிமி | 582 கி.மீ | 1 |
12 | வடக்கன்சேரி சந்திப்பு (WKI) | 06:24 | 06:25 | 1 நிமி | 609 கி.மீ | 1 |
13 | திருச்சுர் புன்குன்னம் சந்திப்பு (PNO) | 06:49 | 06:50 | 1 நிமி | 623 கி.மீ | 1 |
14 | திருச்சூர் சந்திப்பு (TCR) | 06:52 | 06:55 | 3 நிமி | 626 கி.மீ | 1 |
15 | இருஞ்சக்குடா சந்திப்பு (IJK) | 07:15 | 07:16 | 1 நிமி | 650 கி.மீ | 1 |
16 | சாலக்குடி சந்திப்பு (CKI) | 07:22 | 07:23 | 1 நிமி | 656 கி.மீ | 1 |
17 | டிவைன் நகர் (DINR) | 07:26 | 07:27 | 1 நிமி | 658 கி.மீ | 1 |
18 | அங்கமாலி சந்திப்பு (AFK) | 07:44 | 07:45 | 1 நிமி | 670 கி.மீ | 1 |
19 | ஆலுவா சந்திப்பு (AWY) | 07:53 | 07:56 | 2 நிமி | 680 கி.மீ | 1 |
20 | இடப்பள்ளி சந்திப்பு (IPL) | 08:14 | 08:15 | 1 நிமி | 691 கி.மீ | 1 |
21 | எர்ணாகுளம் நகரம் (ERN) | 08:28 | 08:30 | 2 நிமி | 697 கி.மீ | 1 |
22 | எர்ணாகுளம் சந்திப்பு (ERS) | 08:40 | 08:45 | 5 நிமி | 700 கி.மீ | 1 |
23 | துறவூர் சந்திப்பு (TUVR) | 09:19 | 09:20 | 1 நிமி | 727 கி.மீ | 1 |
24 | சீர்தளா சந்திப்பு (SRTL) | 09:37 | 09:38 | 1 நிமி | 733 கி.மீ | 1 |
24 | ஆலப்புழா சந்திப்பு (ALLP) | 10.40 | முடிவு | 0 | 757 கி.மீ | 1 |
வண்டி எண் 22639
தொகுஇந்த தொடருந்து வண்டியானது தமிழ்நாடு மாநிலம் சென்னை சென்ட்ரல் சந்திப்பு தினந்தோறும் இரவு 8.35 மணிக்கு இயக்கப்பட்டு கேரள மாநிலம் ஆலப்புழா நகரத்திற்கு மறுநாள் காலை 10.40 மணிக்கு வந்தடைகிறது. திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், பாலக்காடு மற்றும் எர்ணாகுளம் போன்ற பல்வேறு நகரங்களின் வழியாக செல்லும் இந்த செல்லும் இந்த தொடருந்து 757 கிலோமீட்டர்களை கடக்க 13 மணிநேரம் 35 நிமிடங்கள் ஆகிறது. 24 வழித்தடங்களை கொண்ட இந்த தொடருந்து 56 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது . 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னக ரெயில்வேயினால் இந்த தொடருந்திற்கும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும். இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.[6]
EN– UR – A1 – A2 - B1 – B2 - B3 - B4 – S1 – S2 – S3 – S4 – S5 – S6 – S7 – S9 – S10 – S11 – S12 – S13 - UR - GS
வண்டி எண் 22640
தொகுஇந்த தொடருந்தானது கேரள மாநிலம் ஆலப்புழா நகரிலிருந்து மாலை 04.05 மணிக்கு இயக்கப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு தமிழ்நாடு மாநிலம் சென்னை சென்ட்ரல் சந்திப்பு ரயில் நிலையம் வந்து அடைகிறது. இது சென்னை அதிவிரைவு தொடருந்து எனவும் அழைக்கப்படுகிறது. மொத்த பயண நேரம் 13 13 மணி 45 நிமிடங்கள் ஆகும்.இதன் வழித்தடத்தினில் 24 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 55 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 757 கிலோ மீட்டர் தொலைவினை கடக்கிறது. 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னக ரெயில்வேயினால் இந்த தொடருந்திற்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.[7]
EN– GS - UR – S13 – S12 – S11 – S10 – S9 – S8 – S7 – S6 – S5 – S4 – S3 – S2 – S1 - B4 – B3 - B2 – B1 - A2 – A1 – UR - GS
மேற்கோள்கள்
தொகு- ↑ Southern Railway changes numbers of 16 trains
- ↑ 2.0 2.1 "Train Schedule". Archived from the original on 29 ஏப்பிரல் 2011.
- ↑ V. S. Palaniappan (23 May 2012). "After 30 years, Alleppey express to halt at Coimbatore". தி இந்து (கோயம்புத்தூர்). http://www.thehindu.com/news/cities/Coimbatore/after-30-years-alleppey-express-to-halt-at-coimbatore/article3447065.ece. பார்த்த நாள்: 26 October 2016.
- ↑ Change in composition of Chennai-Trivandrum and Chennai-Alappuzha Express[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ trains to get de-reserved coaches
- ↑ https://erail.in/train-enquiry/22639.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ https://erail.in/train-enquiry/22640.
{{cite web}}
: Missing or empty|title=
(help)