மெட்ராஸ் கறி

(சென்னை கறி சாஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மெட்ராஸ் கறி அல்லது மெட்ராஸ் சாஸ் மிகவும் சூடான கறி சாஸ் (மீன் கறி சிறிது வேறுபட்டது),[1] சிவப்பு வண்ணம் கொண்டது. மிளகாய் பொடி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சிலநேரங்களில் தயிர், அதிக காரத்தைக் குறைப்பதற்காக சேர்க்கப்படுகிறது.

Madras curry sauce
மாற்றுப் பெயர்கள்மெட்ராஸ் சாஸ், மெட்ராஸ் கறி
வகைகறி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிசென்னை
முக்கிய சேர்பொருட்கள்மிளகாய் பொடி

தோற்றுவாய்கள்

தொகு

இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து உருவான மெட்ராஸ் கறி, 1640 ஆம் ஆண்டில் (இப்போது சென்னை ) ஆங்கிலேய வியாபாரிகள் வந்தபோது, அதன் பெயர் மெட்ராஸ் கறி என அழைக்கப்பட்டது.[2] இருப்பினும், 'மெட்ராஸ் கறி' என்ற பெயர் இந்தியாவில் பயன்படுத்தப்படவில்லை, ஆனால் பிரிட்டன் உணவகங்களில் பயன்படுத்தப்பட்டன.[3] பிரித்தானிய உணவகங்களில் மெட்ராஸ் கறி பரிமாரப்பட்டது , பிரித்தானிய பங்களாதேஷ் ரெஸ்டாரண்டுகளில் 1970 ஆம் ஆண்டுகளில் சில மாறுபாடுகளுடன் பரிமாரப்பட்டது.[4]

வேறுபாடுகள்

தொகு

சென்னை கறி [5][6] பல விதங்களில் வேறுபடுகிறது. இந்த கறி சைவம் அல்லது அசைவம் என தயாரிக்கப்படுகிறது. உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மெட்ராஸ் கறியின் இறுதி வடிவம், சிவப்பு நிறம், புளிப்புச் சுவை, மிளகாய் தூள், இஞ்சி,சோம்பு ,புளி மற்றும் மசாலாக்களால் கிடக்கிறது. சிவப்பு நிறம், சிவப்பு மிளகாய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் கலவையாகும். கூடுதல் புளிப்பிற்கு எலுமிச்சை , தேசிப்பழம் அல்லது வினிகர் சேர்க்கப்படுகிறது.

பூண்டு, வெங்காயம், கொத்தமல்லி, கரம் மசாலா, பெருங்காயம் முதலிய வாசனை திரவியங்கள் சுவையை அதிகப்படுத்தவும், வாசனைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவான பொருட்களுடன் புதிய கறிவேப்பிலைகளையும் , இறுதியில் புதிய கொத்தமல்லி இலைகளும் சேர்க்கப்படுகிறது.

உலர்ந்த மிளகாய், கொத்தமல்லி விதை, சீரகம், சோம்பு மற்றும் இலவங்கப்பட்டை உட்பட பல மசாலாப் பொருட்கள் வறுத்து சேர்க்கப்படுகிறது. இவை 180 °C வெப்பநிலையில் 10 நிமிடங்கள் வறுக்கப்படுகிறது. இந்த வறுத்த பொருட்கள் அரைக்கப்பட்டு மஞ்சளுடன் சேர்த்து உபயோகத்திற்காக சேமித்து வைக்கப்படுகிறது. இது மெட்ராஸ் கறிக்கு அடிப்படை மசாலா கலவை ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "History of Curry". Surrey County Council, England. Archived from the original on அக்டோபர் 9, 2011. பார்க்கப்பட்ட நாள் September 24, 2011.
  2. "The Origins of 'Curry'". Curry, Spice & All Things Nice by Peter and Colleen Grove. Archived from the original on செப்டம்பர் 29, 2011. பார்க்கப்பட்ட நாள் September 24, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Compendium of Food Terms. Madras". Archived from the original on ஏப்ரல் 2, 2012. பார்க்கப்பட்ட நாள் September 24, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  5. "Lamb madras with chapatis". BBC. பார்க்கப்பட்ட நாள் September 24, 2011.
  6. "Madras Lamb Curry - Mutton Madras". பார்க்கப்பட்ட நாள் September 24, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ராஸ்_கறி&oldid=3925590" இலிருந்து மீள்விக்கப்பட்டது