செம்பருத்தி தேநீர்

செம்பருத்தி இதழ்களால் தயாரிக்கப்படும் பானம்

செம்பருத்தி தேநீர் (Hibiscus tea) என்பது ஓர் மூலிகை தேநீர் ஆகும். இது செம்பருத்தி மலரினால் தயாரிக்கப்படுகிறது. இத்தேநீர் கருஞ்சிவப்பு அல்லது ஆழ்ந்த சிவப்பு நிறமுடையது. இதற்கு செம்பருத்தி புறஇதழ் மற்றும் புளிச்சக்கீரையின் பூவில் உள்ள வேதிப்பொருட்கள் நீரில் கலப்பதாலாகும். செம்பருத்தி தேநீரைச் சூடாகவோ அல்லது குளிர்சியாகவோ பருகலாம். இது புளிப்பு, குருதிநெல்லி போன்ற சுவை கொண்டது.

செம்பருத்தி தேநீர்
உலர்ந்த செம்பருத்தி மலர் இதழ்கள்

நுகர்வு

தொகு

ஆப்பிரிக்கா

தொகு

செம்பருத்தி தேநீர் தயாரிக்க பயன்படும் புளிச்சக்கீரை (கைபிசுகசு) ஆப்பிரிக்காவில் வளர்க்கப்படுகின்றன.[1] ஆப்பிரிக்கா சந்தையில் செம்பருத்தி தேநீர் விற்கப்படுகிறது. இதன் உலர்ந்த பூக்களை மேற்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்கா முழுவதும் காணலாம். மேற்கு ஆப்பிரிக்கா, மத்திய ஆபிரிக்காவின் சில பகுதிகளிலும் இந்த பானத்தின் சில மாறுபாடுகளைக் காணலாம். செனகலில், பிசாப் எனப்படும் புளிச்சக்கீரை கூழ் "தேசிய பானம்" என்று அழைக்கப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் செம்பருத்தி தேநீர் பெரும்பாலும் புதினா அல்லது இஞ்சியுடன் கலந்து சுவைக்கப்படுகிறது. கானாவில் இது "சோபோலோ" என்றும் நைஜீரியாவில் "சோபோ" என்றும் அழைக்கப்படுகிறது.

கர்கடே சூடாக அல்லது குளிர்ச்சியாக பனிக்கட்டி சேர்த்து குடிக்கிறார்கள். இது வட ஆபிரிக்காவின் சில பகுதிகளில், குறிப்பாக எகிப்து மற்றும் சூடானில் நுகரப்படுகிறது. எகிப்து மற்றும் சூடானில், திருமண கொண்டாட்டங்களில் பாரம்பரியமாக இந்த தேநீர் வழங்கப்படுகிறது .மத்திய கெய்ரோவில் குறிப்பிட்ட பொதுவான தெரு ஒன்றில், பல விற்பனையாளர்கள் திறந்தவெளி கஃபேக்கள் இந்த பானத்தை விற்கின்றனர்.[2]

அமெரிக்கா

தொகு
 
ஒரு குளிர் அகுஅ டி ப்ளார் டி ஜமைக்கா ஒரு கண்ணாடி க்வர்னவாகா உணவகத்தில்
 
மெக்ஸிகோவிலிருந்து ஃப்ளோர் டி ஜமைக்கா கலீஸின் பொட்டலம்

அகுவா டி ஜமைக்கா மற்றும் ரோசா டி ஜமைக்கா என்றும் அழைக்கப்படும் அகுவா டி ஃப்ளோர் டி ஜமைக்கா, மெக்சிக்கோ, மத்திய அமெரிக்காவிலும் தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் பிரபலமாக உள்ளது. இது பொதுவான அகுவாஸ் ஃப்ரெஸ்காக்களில் ஒன்றாகும். இவை பொதுவாக புதிய சாறுகள் அல்லது சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் மலிவான பானங்களாகும். ஜமைக்கா மற்றும் பிற அகுவாஸ் ஃப்ரெஸ்காக்கள் பொதுவாக டாக்வீரியாக்கள் அல்லது பிற மெக்சிகன் உணவகங்களில் கிடைக்கின்றன. இது வழக்கமான முறையில் பதப்படுத்தி தயார் செய்யப்படுகிறது. இதனை சுடுநீரில் மலர் இதழ், இஞ்சி (ஜமைக்காவில்), கலந்து நீர் கலவையினை வடிகட்டுதல் மூலம் இதழ்களை பிரித்து, அழுத்தி (சாறு பிழி) தயார்செய்கின்றனர். சில நேரங்களில் கிராம்பு, சர்க்கரை சேர்த்து, இலவங்கப்பட்டை மற்றும் வெள்ளை ரம் கொஞ்சமாக கலந்து ( ஜமைக்காவில்) கலக்கி தயாரிக்கின்றனர். இந்த தேநீர் குளிர்ச்சியாக வழங்கப்படுகிறது. ஜமைக்காவில், இந்த பானம் கிறிஸ்துமசு விழாவின் போது பாரம்பரியமாக வழங்கப்படுகிறது. இது பழ அணிச்சல் அல்லது சர்க்கரைவள்ளி கிழங்கு புட்டிங்குடன் பரிமாறப்படுகிறது.[3]

பனாமாவில், மலர்களும் பானமும் சாரில் எனப்படுகிறது (ஆங்கில வார்த்தை sorrel என்பதிலிருந்து பெறப்பட்ட சொல்). நறுக்கிய இஞ்சி, சர்க்கரை, கிராம்பு, இலவங்கப்பட்டை, மற்றும் ஜாதிக்காயுடன் புறஇதழ்களை வேகவைத்து தயாரிக்கப்படுகிறது. இது பாரம்பரியமாக கிறிஸ்துமஸ் மற்றும் சீனப் புத்தாண்டுகளின்போது குடிக்க வழங்கப்படுகிறதுட. மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து விலகி, கரீபியனுடன் ஒத்துப்போகிறது, பனமேனிய கலாச்சாரத்தில் குறிப்பாக பனாமா நகரத்திலும், பனாமாவின் பெரும்பாலான கரீபியன் கடற்கரை பகுதியோரங்களிலும் மேற்கு இந்தியாவின் வலுவான செல்வாக்கு பெற்றுள்ளன.

ஆங்கிலம் பேசும் கரீபியன்கள், இதனை சோரல் எனபர். இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் விருந்தில் ஒரு பகுதியாக உள்ளது. டிரினிடாட் மற்றும் டொபாகோ, கரீபியன் மேம்பாட்டு நிறுவனம், ஒரு சோரல் ஷாண்டியை பீருடன் கலந்து தயாரிக்கின்றது. அமெரிக்க கலாச்சார உணவில், செம்பருத்தி தேநீர் மேற்கு ஆபிரிக்காவுடன் தொடர்புடைய "சிவப்பு பானங்கள்" வகைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக கலாச்சார பாரம்பரிய உணவாக அனைத்து உணவகங்களிலும் ஆப்பிரிக்க-அமெரிக்க சமூக நிகழ்வுகளிலும் இது வழங்கப்படுகிறது.[4]

தென்கிழக்கு ஆசியா

தொகு

தாய்லாந்தில், பொதுவாக, ரோசெல் ஓர் குளிர் பானமாக தயாரிக்கப்படுகிறது. இது அதிக இனிப்பு மற்றும் பனியின் மீது ஊற்றப்படுகிறது. இதன் சுவை பழச்சாறு போல இனிப்பானது. பனி நிரப்பப்பட்ட நெகிழிப் பைகள் மற்றும் இனிப்பு 'கிராஜீப்' பெரும்பாலான பள்ளிகளுக்கு வெளியேயும் உள்ளூர் சந்தைகளிலும் காணப்படுகின்றன. இது பொதுவாக ஒரு மதுவாக தயாரிக்கப்படுகிறது. சில நேரங்களில் சீன தேயிலை இலைகளுடன் இணைத்து, 4:1 என்ற விகிதத்தில் எடை அடிப்படையில் (1/5 சீன தேநீர்) தயாரிக்கப்படுகிறது. மலேசியா, கம்போடியா மற்றும் இந்தோனேசியாவிலும் இந்த பானம் உட்கொள்ளப்படுகிறது.

ஐரோப்பா

தொகு

இத்தாலியில், கார்கேட் அல்லது இத்தாலிய தேநீர் என அழைக்கப்படும் செம்பருத்தி தேநீர், பொதுவாக சூடாக உட்கொள்ளப்படுகிறது. பெரும்பாலும் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தயாரிக்கப்படுகிறது. எரித்திரியாவிலிருந்து முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தேநீர், தேயிலை மாற்றாக பரவலாகப் அபிசீனியா மீதான படையெடுப்பிற்காக வர்த்தக தடையினால் பாதிக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்டது. பிற ஐரோப்பிய நாடுகளில், பெரும்பாலும் கலப்பு மூலிகை தேநீரில் மூலப்பொருள்களில் ஒன்றாக உள்ளது (குறிப்பாக மால்வா பூக்கள் அல்லது ரோசு கிப்வுடன், வண்ணத்தை மேம்படுத்துவதற்காக).

ஆராய்ச்சி

தொகு

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு செம்பருத்தி தேநீரை நுகர்வதால் இரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[5][6][7] பொதுவாக செம்பருத்தி தேநீர் உடலுக்கு எவ்வித தீங்கினையும் விளைவிக்காத போதிலும் அதிக செறிவுடன் உட்கொள்ளும் போது கல்லீரல் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Roselle - plant". Encyclopedia Britannica.
  2. Feeney, John (September–October 2001). "The Red Tea of Egypt". Saudi Aramco World (Saudi Aramco). http://saudiaramcoworld.com/issue/200105/the.red.tea.of.egypt.htm. 
  3. "Sorrel recipe". jamaicatravelandculture.com.
  4. Adrian Miller (23 June 2015). "In Praise of Red Drink: The Origin Story Behind Soul Food's Most Iconic Beverage". First We Feast. பார்க்கப்பட்ட நாள் 8 February 2019.
  5. Hopkins, A. L.; Lamm, M. G.; Funk, J. L.; Ritenbaugh, C. (2013). "Hibiscus sabdariffa L. In the treatment of hypertension and hyperlipidemia: A comprehensive review of animal and human studies". Fitoterapia 85: 84–94. doi:10.1016/j.fitote.2013.01.003. பப்மெட்:23333908. 
  6. Serban, C; Sahebkar, A; Ursoniu, S; Andrica, F; Banach, M (June 2015). "Effect of Sour Tea (Hibiscus Sabdariffa L.) on Arterial Hypertension: A Systematic Review and Meta-Analysis of Randomized Controlled Trials". Journal of Hypertension 33 (6): 1119–27. doi:10.1097/HJH.0000000000000585. பப்மெட்:25875025. 
  7. Boushehri, SN; Karimbeiki, R; Ghasempour, S; Ghalishourani, SS; Pourmasoumi, M; Hadi, A; Mbabazi, M; Pour, ZK et al. (February 2020). "The Efficacy of Sour Tea (Hibiscus Sabdariffa L.) on Selected Cardiovascular Disease Risk Factors: A Systematic Review and Meta-Analysis of Randomized Clinical Trials". Phytotherapy Research 34 (2): 329–39. doi:10.1002/ptr.6541. பப்மெட்:31943427. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பருத்தி_தேநீர்&oldid=3343845" இலிருந்து மீள்விக்கப்பட்டது