செம்மன்விளை

செம்மன்விளை (Chemmanvilai)என்பது இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தின், கல்குளம் தாலுக்காவில் இருக்கும் சடயமங்கலம் பஞ்சாயத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். புனித அந்தோனியார் பேராலயம் இக்கிராமத்தின் நடுவில் நின்று அழகு சேர்க்கிறது.

செம்மன்விளை
Chemmanvilai
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்1,500
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்629175
தொலைபேசிக் குறியீடு91-4651
வாகனப் பதிவுTN-75
அருகில் உள்ள நகரம்திருநெல்வேலி, திருவனந்தபுரம்
கல்வியறிவு85%
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
சட்டப்பேரவைத் தொகுதிபத்மநாபபுரம்
இணையதளம்Official Site

அமைவிடம் மற்றும் போக்குவரத்து வசதி தொகு

நாகர்கோவில்திருவனந்தபுரம் நெடுஞ்சாலைக்கு அருகில் இக்கிராமம் அமைந்துள்ளது. தோராயமாக ஆறு கிலோமீட்டருக்கு அருகில் இரணியல் தொடருந்து நிலையம் மற்றும். இக்கிராமத்திற்கு அருகில் அதாவது 54 கிலோமீட்டர் தொலைவில் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகியன இருக்கின்றன. செம்மன்விளை கிராமத்தை அப்பாட்டுவிளை என்றும் அழைக்கிறார்கள்.

மக்கள் தொகையியல் தொகு

2012 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட பேராலய கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மக்கள் தொகை 1500 ஆகும். இம்மக்கள் தொகையில் 51 சதவீதம் ஆண்களாகவும் 49 சதவீதம் பெண்களாகவும் உள்ளனர். இக்கிராமத்தின் சராசரி படிப்பறிவு சதவீதம் 85% ஆகும். நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும்.

புனித அந்தோனியார் பேராலயம் தொகு

 
புனித அந்தோனியார் பேராலயம், செம்மன்விளை, 25 மே 2012 இல் ஒரு புதிய ஆலயம் திறக்கப்பட்டது.

புனித அந்தோனியார் பேராலயம் கிராமத்தின் நடுவில் நின்று முக்கியமான வழிபடும் தலமாகவும், கிராமமக்களின் வாழ்வில் முக்கியப்பங்கும் வகிக்கிறது. இத்தேவாலயம் மிகப் பழமையான ஒரு ஆலயமாகும். பண்டைய இந்திய வரலாற்று திருவாங்கூர் பேரரசில் இக்கோவில் தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன. செம்மன்விளையில் உள்ள இச்சிறிய ஆலயத்திற்கு, தன்னுடைய வாழ்நாளின் இறுதிநாட்களில் தியாகி தேவசகாயம் பிள்ளை வழிபாடு செய்வதற்காக வந்திருக்கிறார்.[1] குழித்துறை மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இத்தேவலயம் இயங்குகிறது.

புனித அந்தோனியார் திருவிழா தொகு

ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்களுக்கு புனித அந்தோனியார் திருவிழா மிக விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது. பூசை, இசைக் கச்சேரிகள், நாடகம் மற்றும் வானவேடிக்கை என விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. புனித அந்தோனியாரின் பிறந்தநாள் அடிப்படையில், ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இறுதி வாரத்தில் இவ்விழா நடைபெறுகிறது. இதைத்தவிர சூன் 13 இல் புனித அந்தோனியாரின் பிறந்தநாள் விழாவும் தனியாக இங்குக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இவ்வாலயத்திற்கு வருகை தந்து விழாக்களிலும் வழிபாட்டிலும் கலந்து கொள்கின்றார்கள்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மன்விளை&oldid=3584483" இலிருந்து மீள்விக்கப்பட்டது