செம்மொழி விரைவுத் தொடருந்து
செம்மொழி விரைவுத் தொடருந்து, (Chemmozhi Express) இந்திய ரெயில்வே துறையினரால் கோயம்புத்தூர் சந்திப்பு மற்றும் மன்னார்குடி சந்திப்பு ஆகிய இரு தமிழக நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் விரைவுத் தொடருந்தாகும். 2010ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற செம்மொழி தமிழ் மாநாட்டின் நினைவாக நினைவாக இந்த விரைவுத் தொடர்ந்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விரைவுத் தொடருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இரவு 12.30 மணிக்கு கோயம்புத்தூர் சந்திப்பு நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.40 மணிக்கு மன்னார்குடி சென்றடைகிறது. இந்தத் தொடருந்து மன்னார்குடியிலிருந்து இரவு 8.25 மணிக்கு இயக்கப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு கோயம்புத்தூர் சந்திப்பு நிலையத்தை அடைகிறது. மொத்தமாக 335 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கிறது. இந்த வண்டியின் எண் 16616 ஆகும். மறுமார்க்கமாக 16615 என்ற எண்ணில் இயக்கப்படும்.
செம்மொழி விரைவுத் தொடருந்து | |
---|---|
செம்மொழி விரைவு தொடருந்து | |
கண்ணோட்டம் | |
வகை | விரைவு |
நிகழ்நிலை | இயக்கத்தில் உள்ளது |
நிகழ்வு இயலிடம் | தமிழ்நாடு |
முதல் சேவை | சூன் 11, 2011 |
நடத்துனர்(கள்) | தென்னிந்திய ரயில்வே |
வழி | |
தொடக்கம் | மன்னார்குடி |
இடைநிறுத்தங்கள் | 10 |
முடிவு | கோயம்புத்தூர் சந்திப்பு |
ஓடும் தூரம் | 335 km (208 mi) |
சராசரி பயண நேரம் | 8 மணி 25 நிமிடங்கள் |
சேவைகளின் காலஅளவு | தினந்தோறும் |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | முதல் வகுப்பு குளிர்சாசன பெட்டிகள், படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் சாதாரண வகுப்பு பெட்டிகள் |
இருக்கை வசதி | வசதி உண்டு |
படுக்கை வசதி | வசதி உண்டு |
உணவு வசதிகள் | வசதி இல்லை |
காணும் வசதிகள் | LHB Coaches |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | இருவழி |
பாதை | அகலப்பாதை தொடருந்து |
வேகம் | 40 kilometres per hour (25 mph) |
பயணத்திட்டம்
தொகுஇந்தத் தொடருந்தானது தினந்தோறும் இரு வழிகளிலும் இயக்கப்படுகிறது.
வண்டி எண் | நிலைய குறியீடு | புறப்படும் நிலையம் | புறப்படும் நேரம் (இசீநே) | வருகை நிலையம் | வருகை நேரம் (இசீநே) |
---|---|---|---|---|---|
16615 | MQ | மன்னார்குடி | 8:25 PM | கோயம்புத்தூர் சந்திப்பு | 4:45 AM |
16616 | CBE | கோயம்புத்தூர் சந்திப்பு | நள்ளிரவு 12:30 | மன்னார்குடி | 7:40 AM |
நிறுத்தங்கள்
தொகு16615 வண்டிக்கான நிறுத்தங்கள்
நிலைய குறியீடு | நிலையம் | வருகை நேரம் (இசீநே) | தூரம் (கிமீ) | நாள் |
---|---|---|---|---|
MQ | மன்னார்குடி | 8:25 PM (ஆரம்ப நிலையம்) | 0 | Day 1 |
NMJ | நீடாமங்கலம் | 8:55 PM | 14 | Day 1 |
TJ | தஞ்சாவூர் | 9:35 PM | 44 | Day 1 |
BAL | பூதலூர் | 9:53 PM | 61 | Day 1 |
TPJ | திருச்சிராப்பள்ளி | 11:00 PM | 94 | Day 1 |
KRR | கரூர் | 12:10 AM | 170 | Day 2 |
ED | ஈரோடு | 2:25 AM | 235 | Day 2 |
TUP | திருப்பூர் | 3:10 AM | 285 | Day 2 |
CBF | கோயம்புத்தூர் வடக்கு | 4:00 AM | 333 | Day 2 |
CBE | கோயம்புத்தூர் | 4:45 AM (இறுதி நிலையம்) | 335 | Day 2 |
16616 வண்டிக்கான நிறுத்தங்கள்
நிலைய குறியீடு | நிலையம் | வருகை நேரம் (இசீநே) | தூரம் (கிமீ) | நாள் |
---|---|---|---|---|
CBE | கோயம்புத்தூர் | இரவு 12:30 AM (ஆரம்ப நிலையம்) | 0 | நாள் 1 |
TUP | திருப்பூர் | 1:10 AM | 51 | நாள் 1 |
ED | ஈரோடு | 1:55 AM | 101 | நாள் 1 |
KRR | கரூர் | 3:00 AM | 166 | நாள் 1 |
TPJ | திருச்சிராப்பள்ளி | 5:00 AM | 242 | நாள் 1 |
BAL | பூதலூர் | 5:30 AM | 275 | நாள் 1 |
TJ | தஞ்சாவூர் | 6:00 AM | 292 | நாள் 1 |
NMJ | நீடாமங்கலம் | 6:40 AM | 322 | நாள் 1 |
MQ | மன்னார்குடி | 7:40 AM (இறுதி நிலையம்) | 335 | நாள் 1 |
பயணப் பெட்டிகளின் அமைப்பு
தொகுஓரடுக்கு மற்றும் ஈரடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி, மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி, 5 முன்பதிவு மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 6 பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு சரக்கு பெட்டிகள் 2 என மொத்தம் 15 பெட்டிகள் இந்தத் தொடருந்தில் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
Loco | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
GRD | GEN | GEN | GEN | S1 | S2 | S3 | S4 | S5 | B1 | HA1 | GEN | GEN | GEN | GRD |
பெயர்க்காரணம்
தொகு2010 ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி செம்மொழி மாநாடு கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டை நினைவு கூறும் கூறும் கூறும் பொருட்டு 2013ஆம் ஆண்டு முதல் முதல் இயக்கப்பட்டு வரும் இந்த தொடருந்துக்கு செம்மொழி விரைவு தொடருந்து என பெயர் வழங்கப்பட்டது.[1]
தஞ்சாவூர், கரூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஈரோடு என தமிழகத்தின் முக்கிய தொழில் மற்றும் வர்த்தக நகரங்களை இணைக்கும் இந்தத் தொடருந்தானது மொத்த பயண தூரமான 335 கிலோமீட்டரை மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு எட்டு மணி நேரம் 20 நிமிடங்கள் பயணித்து தனது இறுதி நிலையத்தை அடைகிறது.
குறிப்புகள்
தொகுமன்னார்குடி நிலையத்தில் இருந்து தினமும் இரவு, 8:15 மணிக்கு புறப்படும் செம்மொழி விரைவு தொடருந்து தஞ்சை, திருச்சி, ஈரோடு வழியாக மறுநாள் காலை, 4:45க்கு கோவை வந்தடைகிறது. கோயம்புத்தூர் சந்திப்பு நிலையத்திலிருந்து நள்ளிரவு, 12:30க்கு புறப்படும் தொடருந்து காலை, 7:40 மணிக்கு மன்னார்குடி சென்றடைகிறது. காலை, 4:45 மணிக்கு கோவை வந்தடையும் தொடருந்து இரவு, 12:30 மணி வரை மறுபடியும் இயக்கும் வரை நிலையத்திலேயே எவ்வித பயன்பாடுமின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது. மாறாக இந்தத் தொடருந்தை காரைக்குடி அல்லது மதுரை சந்திப்பு நிலையங்கள் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என தொடருந்தில் பயணிப்போர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.