மன்னார்குடி தொடருந்து நிலையம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம்

மன்னார்குடி தொடருந்து சந்திப்பு நிலையம் (Mannargudi railway station, நிலையக் குறியீடு:MQ) ஆனது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.

மன்னார்குடி
தொடருந்து நிலையம்
ஜோத்பூர் தொடர்வண்டி.jpg
மன்னார்குடி தொடருந்து நிலையத்தில் நிற்கும் ஜோத்பூர் விரைவு இரயில்
இடம்மன்னை நகர், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
அமைவு10°40′30″N 79°27′11″E / 10.6751°N 79.4531°E / 10.6751; 79.4531
உயரம்17 மீட்டர்
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்நாகப்பட்டினம் -திருச்சிராப்பள்ளி வழித்தடம்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்5
இணைப்புக்கள்பேருந்து நிலையம், வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையில்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுMQ[1]
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் திருச்சிராப்பள்ளி
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
மன்னார்குடி is located in தமிழ் நாடு
மன்னார்குடி
மன்னார்குடி
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்.
மன்னார்குடி is located in இந்தியா
மன்னார்குடி
மன்னார்குடி
மன்னார்குடி (இந்தியா)

அமைவிடம்தொகு

மன்னார்குடியில் மன்னை நகரில் இந்த தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இதற்கு அருகில் மன்னார்குடி பேருந்து பணிமனை உள்ளது. மன்னார்குடி தொடருந்து நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் உள்ள தொலைவு 86 கி.மீ ஆகும்.

இணைக்கும் தொடருந்து நிலையங்கள்தொகு

சென்னை எழும்பூர், திருப்பதி, ஜோத்பூர் சந்திப்பு, ஜெய்ப்பூர் சந்திப்பு, மானாமதுரை சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, புதுக்கோட்டை சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு போன்றவை ஆகும்.

முக்கிய தொடருந்துகள்தொகு

மன்னார்குடி தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் சில முக்கியமான தொடருந்துகளின் பட்டியல்:

தொடருந்து எண் தொடருந்து பெயர்
16863/16864 பகத் கி கோத்தி (ஜோத்பூர்)-மன்னார்குடி வாராந்திர விரைவு வண்டி
16179 / 16180 மன்னை விரைவுத் தொடருந்து
17407 / 17408 பாமணி விரைவுத் தொடருந்து
16615/16616 செம்மொழி விரைவுத் தொடருந்து

மேற்கோள்கள்தொகு

  1. "Mannargudi Railway Station". Mustseeindia. 27 டிசம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 July 2013 அன்று பார்க்கப்பட்டது.