பாமணி விரைவு தொடருந்து

பாமணி விரைவு தொடருந்து (Pamini Express), இந்திய ரெயில்வே துறையினரால் ஆந்திரா மாநிலம் திருப்பதி மற்றும் தமிழ்நாடு மாநில மன்னார்குடி நிலையம் ஆகிய இரு நிலையங்களுக்கு இடையே 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இயக்கப்படும் விரைவு தொடருந்தாகும். 18 நிறுத்தங்களைக் கொண்ட இந்த தொடருந்து, 17407 மற்றும் 17408 என்ற எண்களின் கீழ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த தொடருந்து இருநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தொடருந்தாகும்.

பாமணி விரைவு தொடருந்து
பாமணி விரைவு தொடருந்து பக்கலா நிறுத்தத்தில்
கண்ணோட்டம்
வகைவிரைவு தொடருந்து
நிகழ்வு இயலிடம்ஆந்திரா, தமிழ்நாடு
முதல் சேவைமார்ச்சு 7, 2012; 12 ஆண்டுகள் முன்னர் (2012-03-07)
நடத்துனர்(கள்)மத்திய தெற்கு ரெயில்வே துறை
வழி
தொடக்கம்திருப்பதி
முடிவுமன்னார்குடி
ஓடும் தூரம்464 km (288 mi)
சராசரி பயண நேரம்10 மணி 30 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுவாரத்திற்க்கு மூன்று முறை
தொடருந்தின் இலக்கம்17407 / 17408
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)உட்காரும் வசதி கொண்ட, குளிர்சாதன மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவு மற்றும் பொதுப் பெட்டிகள்
இருக்கை வசதிவசதி உண்டு
படுக்கை வசதிவசதி இல்லக
உணவு வசதிகள்வசதி இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
வேகம்39 km/h (24 mph) 18 நிறுத்தங்களுடன் சராசரியாக
வழிகாட்டுக் குறிப்புப் படம்

பெயர்க்காரணம்

தொகு

தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டம் மூனாற்றுத் தலைப்பு வெண்ணாற்றில் இருந்து பிரிந்து நீடாமங்கலம், மன்னார்குடி, முத்துப்பேட்டை வழியாக பாய்ந்து சென்று முத்துப்பேட்டை கடலில் கலக்கும் ஆறு பாமணி ஆகும். இதே வழிப்பாதையில் இயக்கப்படுவதால் இந்த தொடருந்து இப்பெயர் பெற்றது. [1]

பயணத்திட்டம்

தொகு

பாமணி விரைவு தொடருந்து கீழ்க்கண்ட வழிமுறையில் இயக்கப்பட்டு வருகிறது.

வண்டி எண் நிலையக் குறீயிடு புறப்படும் நிலையம் புறப்படும் நேரம் புறப்படும் நாட்கள் சேரும் நிலையம் சேரும் நேரம் சேரும் நாட்கள்
17407 TPTY திருப்பதி 10:40 AM செவ்வாய் கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை மன்னார்குடி 9:20 PM அதே நாள் (செவ்வாய் கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை)
17408 MQ மன்னார்குடி 5:45 AM ஞாயிற்றுக்கிழமை, புதன் கிழமை, வெள்ளிக்கிழமை திருப்பதி 4:35 PM அதே நாள் (ஞாயிற்றுக்கிழமை, புதன் கிழமை, வெள்ளிக்கிழமை)

வழித்தடங்கள்

தொகு

பயணப் பெட்டிகளின் வடிவமைப்பு

தொகு

உட்காரும் வசதி படைத்த இரண்டாம் வகுப்பு முன்பதிவு வசதி கொண்ட ஏழு பெட்டிகள்(D என்ற ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது), உட்காரும் வசதி படைத்த முன்பதிவு வசதி கொண்ட குளிர்சாதன பெட்டி ஒன்று(C1 என்ற ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது), முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகள் ஐந்து, இரண்டாம் வகுப்பு சரக்கு பெட்டிகள் மற்றும் இரண்டு சிறப்பு பெட்டிகள் என மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
  GRD GEN GEN GEN D7 D6 D5 D4 D3 D2 D1 C1 GEN GEN GEN GRD

வண்டி எண் 17407

தொகு

இந்த தொடருந்து வண்டியானது திருப்பதி தொடருந்து நிலையத்திலிருந்து செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை என வாரத்திற்கு மூன்று முறை காலை 10.40 மணிக்கு இயக்கப்பட்டு பக்கலா சந்திப்பு, சித்தூர்,காட்பாடி சந்திப்பு, வேலூர் கண்டோன்மெண்ட், ஆரணி சாலை, போளூர், திருவண்ணாமலை , திருக்கோவிலூர், விழுப்புரம் சந்திப்பு , கடலூர் துறைமுகம் சந்திப்பு,சிதம்பரம் சந்திப்பு, சீர்காழி சந்திப்பு, வைத்திஸ்வரன் கோவில், மயிலாடுதுறை சந்திப்பு, பேராளம், திருவாரூர் சந்திப்பு, நீடாமங்கலம் சந்திப்பு என 17 நிறுத்தங்களில் மணிக்கு 44 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 10 மணி 30 நிமிடங்களில் மன்னார்குடி தொடருந்து நிலையத்தை இரவு 9.10 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 463 கிலோ மீட்டர் ஆகும். உட்காரும் வசதி மட்டுமே கொண்ட இந்த இந்த நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்மேற்கு ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[2]

வண்டி எண் 17408

தொகு

இந்த தொடருந்து வண்டியானது மன்னார்குடி தொடருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை, புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை என வாரம் மூன்று முறை காலை 05.45 மணிக்கு இயக்கப்பட்டு 17 நிறுத்தங்களில் மணிக்கு 44 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 10 மணி 35 நிமிடங்களில் திருப்பதி தொடருந்து நிலையத்தை மாலை 16.20 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 463 கிலோ மீட்டர் ஆகும். உட்காரும் வசதி மட்டுமே கொண்ட இந்த நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்மேற்கு ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. பெயரிடல்
  2. https://erail.in/train-enquiry/17407. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. https://erail.in/train-enquiry/17408. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமணி_விரைவு_தொடருந்து&oldid=3621680" இலிருந்து மீள்விக்கப்பட்டது