செயராமன் கெளரிசங்கர்
செயராமன் கெளரிசங்கர் (Jayaraman Gowrishankar) (பிறப்பு 1956) என்பவர் இந்திய மருத்துவ நுண்ணுயிரியலாளர். கெளரிசங்கர் வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றார். மெல்பர்ண் பல்கலைக்கழகத்தில் பாக்டீரியா மரபியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
பிறப்பு | 1956 (அகவை 67–68) சென்னை, இந்தியா |
---|---|
வதிவு | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | உயிரியல் |
நிறுவனம் | உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம்
டி. என். ஏ. கைரேகை மற்றும் ஆய்ந்தறிதழ் மையம் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள், மொகாலி[1] |
Alma mater | சென்னைப் பல்கலைக்கழகம், மெல்பேர்ண் பல்கலைக்கழகம் |
ஐதராபாத்தில் உள்ள உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் விஞ்ஞானி மற்றும் குழுத் தலைவராக இருந்தார். 2000ஆம் ஆண்டில், டி.என்.ஏ கைரேகை மற்றும் ஆய்ந்தறிதழ் மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[2]
1991ஆம் ஆண்டில், உயிரியல் அறிவியல் பிரிவில் இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் விரிதினை பெற்றார்.[3] மேலும் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் பத்மஸ்ரீ 2013இல் இவருக்கு வழங்கப்பட்டது.
இந்திய அரசு விருது
தொகு- பத்மஸ்ரீ 2013 இந்திய அரசு.
ஆராய்ச்சி விருதுகள்
தொகு- இளம் விஞ்ஞானிகளுக்கான இந்தியத் தேசிய அறிவியல் கழக பதக்கம், 1986
- சி.எஸ்.ஐ.ஆர் இளம் விஞ்ஞானி விருது, 1987
- பி.எம் பிர்லா பரிசு. 1991
- 1991ஆம் ஆண்டுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் பரிசு
- ஜே.சி.போஸ் ஆய்வு நிதி, 2007
- 2012 மொசெலியோ ஸ்கேச்ச்டர் சிறப்புச் சேவை விருது - அமெரிக்கன் நுண்ணுயிரியல் சமூகம்
ஆராய்ச்சி சிறப்பம்சங்கள்
தொகு- ஓபரான் கண்டுபிடிப்பு மற்றும் அதன் நேர்த்தியான சவ்வூடுபரவல் கட்டுப்பாடு
- நச்சு ஆர்.என்.ஏ-டி.என்.ஏ கலப்பினங்கள் (ஆர்-சுழல்கள்) ஈ கோலியில் மொழிபெயர்க்கப்படாத புதிய டிரான்ஸ்கிரிப்டுகளிலிருந்து ஏற்பட வாய்ப்புள்ளது என்ற புதிய கருதுகோளின் விளக்கம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gowrishankar is new IISER director, 'Hindustan Times'
- ↑ Currently, he is the director of the [தொடர்பிழந்த இணைப்பு]Indian Institute of Science Education and Research, Mohali. He The American Society for Microbiology honors Jayaraman Gowrishankar
- ↑ "INSA". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 16 June 2012.