செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி

சென்னை பல்லாவரத்தில் உள்ள பள்ளி

செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி (St. Theresa's Girls' Higher Secondary School), சென்னையின் பல்லாவரத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளி ஆகும். இது 1945 ஆம் ஆண்டில், சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த, பான் செகோர்ஸ் சகோதரிகளால் நிறுவப்பட்டது.

வரலாறு தொகு

1945 ஆம் ஆண்டில், பான் செகோர்ஸ் சகோதரிகள் ஐந்து தரங்களைக் கொண்ட ஒரு தொடக்கப் பள்ளியை நிறுவினர். அதைத் தொடர்ந்து 1960 இல், இது உயர் தொடக்கப் பள்ளியாக மேம்படுத்தப்பட்டது. 1963 ஆம் ஆண்டில், பள்ளி உயர்நிலைப் பள்ளியாக நிறுவப்பட்டது. பாதிரியார் மேத்யூ வெட்ரிக்கல் மற்றும் தாய் மேரி கிறிஸ்டி ஆகியோரின் முயற்சி மற்றும் ஒத்துழைப்பின் காரணமாக, 1978 ஆம் ஆண்டில் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாறியது.[1]

கல்வியாளர்கள் தொகு

இப்பள்ளியில், ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான சிறுமிகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. அறிவுறுத்தலின் ஊடகம் ஆங்கில மொழியாக உள்ளது. தமிழ் மொழி, பாடத்திட்டத்தில் இரண்டாவது மொழியாக இணைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகியவற்றுடன் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் (வரலாறு, புவியியல், குடிமையியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய) போன்ற பொதுவான பாடங்கள் உயர்நிலைப் பள்ளி நிலை வரை கற்பிக்கப்படுகின்றன.

உயர்நிலைப் பாடத்திட்டத்தில் கணினி அறிவியல், இயற்கை அறிவியல் மற்றும் வர்த்தகம் தொடர்பான பாடப்பிரிவுகள் உள்ளன.

வாரியத் தேர்வுகள் ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு நடத்தப்படுகின்றன. மேலும், மாணவர்களின் விடைத் தாள்கள், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களால் மதிப்பிடப்படுகின்றன.

உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் தொகு

இப்பள்ளியில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மாணவர்கள் அணுகக்கூடிய நூலகம் உள்ளது.

இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கான தனித்தனி ஆய்வகங்கள் உள்ளன.

புனித பிரான்சிஸ் சேவியர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியுடன், அடைக்கல அன்னை மகளிர் சமுதாயக் கல்லூரி வளாகம் இங்கு உள்ளது.

நடவடிக்கைகள் தொகு

இப்பள்ளியில், இணைப் பாடத்திட்ட நடவடிக்கைகள் மற்றும் மாலை விளையாட்டுகளில் மாணவர்கள் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்பது, ஒரு பள்ளி விதியாக பின்பற்றப்படுகிறது.

சர்ச்சை/வதந்தி தொகு

ஆகஸ்ட் 2014 இல், புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் பள்ளி குளியலறையில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக வதந்தி பரவியதால் இந்த கல்வி நிறுவனம் ஆய்வுக்கு உட்பட்டது. இந்த செய்தி வாட்சப் மற்றும் முகநூல் வழியாக பரப்பப்பட்டது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாவட்ட சமூக நல அலுவலர் சர்குணா, சாந்தி, முதன்மை கல்வி அதிகாரி, ஆலந்தூர் தாசில்தார் மற்றும் குரோம்பேட்டை காவல்துறையினர், குறுஞ்செய்தி மூலம் தங்களுக்கு கிடைத்த வதந்தியை சரிபார்க்கும் நோக்கில் இப்பள்ளிக்கு வந்து விசாரணையில் இறங்கினர்.

பள்ளி வளாகத்தில் நுழைவதைத் தடுக்கும் பாதுகாப்பு முயற்சிகளை பெற்றோர்கள் எதிர்த்தனர். மேலும் பள்ளி அலுவலகத்திலிருந்து இந்த தகவலின் பின்னணியில் உள்ள உண்மையை அறிய அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், பள்ளி வளாகத்தில் ஏராளமான கூலி வேலையாட்களைப் பார்த்து, ஆத்திரமடைந்த பெற்றோர் அவர்களை வெளியேற்றுமாறு பள்ளி நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டனர்.

விசாரணையில், 28 வயதான சம்பத் என்பவர் குற்றவாளி என்று கண்டறியப்பட்டது. அவர் ஒரு நண்பரின் மகளுக்கு இந்நிறுவனத்தில் அனுமதி பெறத் தவறியபோது, இத்தகைய வதந்திக்கு மூலக்காரணமாக இருந்தது கண்டறியப்பட்டது. வாட்சப் மற்றும் முகநூல் செய்தியில் இரத்தப்போக்குடன் கூடிய சிறுமியின் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். சிறுமியின் புகைப்படத்தை, குற்றம் சாட்டப்பட்டவர் தவறாகப் பயன்படுத்தியது ஊகிக்கப்பட்டது. அவர் மீது ஐபிசி பிரிவு 505 (1) (பி) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணை அதிகாரிகள், விடுதியில் உள்ள அனாதை மாணவிகளையும், விடுப்பில் இருந்த மாணவிகளையும் சோதனை செய்தனர்.[2]

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியரான மரியா பிலோமி, "இந்த தகவல் போலியானது. நாங்கள் கடந்த 50 ஆண்டுகளாக கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறோம், எல்லாக் குழந்தைகளையும் எங்கள் மகள்களாகவே கருதுகிறோம். இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பெற்றோரிடம் கேட்டுக்கொள்கிறேன். இங்குள்ள ஒவ்வொரு பெண் மாணவியும் பாதுகாப்பாக இருக்கிறாள். வதந்திகளைப் பரப்பியவர்களை காவல்துறையினர் கைது செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று பெற்றோர்களுக்கு தெளிவுபடுத்தினார்.[3]

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளி வளாகத்திற்கு வெளியே போலீசார் நிறுத்தப்பட்டனர். மேலும், நுழைவாயிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.[4]

நிகழ்வுகள் தொகு

இப்பள்ளியில், பின்வரும் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

பள்ளி 2003 இல் நாற்பதாவது ஆண்டு விழாவையும் (ரூபி ஜூபிலி), 2013 இல் ஐம்பதாவது ஆண்டு விழாவையும் கொண்டாடியது.

மேற்கோள்கள் தொகு

  1. St. Theresa's Girls' Higher Secondary School. பரணிடப்பட்டது 2020-01-18 at the வந்தவழி இயந்திரம் (Official Website).
  2. Yarn on Rape, Murder of Minor Shuts Pallavaram Hr Sec School. New Indian Express. Published on 19 August 2014. Downloaded on 24 March 2016.
  3. Rumours of girl’s rape, murder in school bathroom spark fear. The Times of India. Published on 19 August 2014. Downloaded on 24 March 2016.
  4. Man held for rape, murder hoax at school. The Times of India. Published on 21 August 2014. Downloaded on 24 March 2016.