செய்கு ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி
செய்கு ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி (1785–1866) அவர்கள் 18-19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த, இலங்கையைச் சேர்ந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும் ஆவார். இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் சோனக முஸ்லிம்கள் மத்தியில் முதலாவது ஆத்மஞானியாக இவர்கள் அறியப்படுகின்றார். செய்கு ஹஸன் அவர்கள் இலங்கையின் புகழ்பெற்ற ஓர் சூபி மகானாக விளங்குகின்றார்.[1]மக்களிடையே இவர்கள் ஆலிம் ஸாஹிப் அப்பா என்ற சிறப்புப் பெயரால் பரவலாக அறியப்படுகின்றார்.
சங்கைக்குரிய செய்கு ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி Sheikh Hassan Bin Osman Magdoomy | |
---|---|
செய்கு ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி அவர்களின் அடக்கஸ்தளம் | |
பட்டம் | குத்புஸ்ஸமான் |
பிறப்பு | 1785 தளாப்பி்டிய,காலி, இலங்கை |
இறப்பு | 1866 தர்கா நகர்,இலங்கை |
வேறு பெயர்கள் | ஆலிம் ஸாஹிப் அப்பா |
தேசியம் | இலங்கையர் |
இனம் | இலங்கை சோனகர் |
காலம் | 19-ஆம் நூற்றாண்டு, நவீன காலம் |
பிராந்தியம் | இலங்கை |
பணி | அறிஞர், புத்தக ஆசிரியர், சூபி மகான், வைத்தியர் |
மதப்பிரிவு | அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் (சூஃபி) |
சட்டநெறி | ஷாஃபி மத்ஹப் |
சமய நம்பிக்கை | அஷ்அரி |
முதன்மை ஆர்வம் | அரபு, அர்வி (அரபு-தமிழ்), தமிழ், அகீதா, ஃபிக்ஹ், தஃப்ஸீர், சூஃபியம் |
சூபித்துவம் order]] | ஐதரூஸிய்யா-காதிரிய்யா |
குரு | செய்கு அஸ்ஸெய்யித் ஹஸனுல் அத்தாஸ் பாஅலவி (றழி) |
செல்வாக்கு செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
ஆரம்ப வாழ்க்கை
தொகுசெய்கு ஹஸன் அவர்கள் கி.பி. 1785 (ஹிஜ்ரி 1200)இல் காலி மாவட்டத்தின்,தளாப்பிட்டிய, சோலையில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை அலுத்கமை தர்கா நகரைச் சேரந்த செய்கு உஸ்மானுல் மக்தூமி இப்னு பரீத் குமஸ்தர் ஆவார். இவர்களின் தாயார் காலியைச் சேர்ந்த கதீப் செய்கு முஹம்மத் அவர்களின் ஒரே மகளான பாத்திமா ஸித்தீகா அவர்களாவார். இவர்கள் தந்தை வழியில் செய்யிதினா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் நேரடி வழித்தோண்றலைச் சேர்ந்ததுடன், செய்யிதினா அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது 43வது தலைமுறைச் சார்ந்தவராவார்[2].செய்கு ஹஸன் அவர்கள் பிறந்து ஒன்பதாவது நாளில் அன்னவர்களின் தாயார் வபாத்தானார்கள். தயாரின் மரணத்திற்குப் பின்னர், தனது மாமியாரின் கண்காணிப்பில் வளந்தார்கள்.
கல்வி
தொகுசெய்கு ஹஸன் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை அவர்களது தந்தையிடமும், குர்ஆன் ஓதல் மற்றும் அடிப்படை இஸ்லாமிய அறிவுகளை உள்ளூர் மத்ரஸாவிலும் பெற்றுக்கொண்டார்கள். உயர்கல்விக்காக இந்தியாவின் காயல்பட்டிணத்திற்கு சென்ற செய்கு ஹஸன் அவர்கள், அங்கு புகழ்பெற்ற மார்க்க அறிஞரான செய்கு லெப்பை அப்துல் காதிர் நைனாப் புலவர் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் அறபு இலக்கணம், இலக்கியம்,தப்ஸீர்,பிக்ஹு,தஸவ்வுப்,அல்காயித் இஸ்லாமிய அடிப்படைக்கொள்கை, உஸூலுத்தீன்-மார்க்க சட்ட அடிப்படை போன்ற அனைத்துக் கலைகளை கற்றார்கள்[3].
பிந்திய வாழ்க்கை
தொகுசெய்கு ஹஸன் அவர்கள் தொழில் ரீதியாக வர்த்தகராக இருந்ததுடன், காலி கோட்டை ஜூம்ஆ பள்ளிவாசலின் முதலாவது கதீபாகவும் கடமையாற்றினார்கள்.காலியில் வாழும் காலப்பகுதியில் செய்யித் அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் பாபகி ரஹிமஹுல்லாஹ் சந்தித்து அவர்களை தனது ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டார். மேலும் செய்யித் அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் பாபகி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்,காதிரிய்யா (ஐதரூஸிய்யதுல் காதிரிய்யா) சூபி வழியமைப்பின் கிலாபத்தை செய்கு ஹஸனுக்கு வழங்கினார்.திருமணம் செய்து கொண்ட செய்கு ஹஸன் அவர்களுக்கு ஒரேயொரு மகன் இருந்ததோடு, சிறுவயதிலேயே அவர் மரணமடைந்தார். செய்கு ஹஸன் அவர்கள் தனது சொந்த ஊரான காலியில் 42 வருடகாலம் வாழ்ந்தார்கள்.தனது பிற்காலத்தை ஹம்பந்தோட்டை, திருகோணமலை, கண்டி, கணேதன்ன, மக்கொன மற்றும் இறுதியாக தர்கா நகர் போன்ற இடங்களில் கழித்தார்[4].செய்கு ஹஸனுக்கு மருமகன்கள் இருவர் இருந்தோடு, அவர்கள் இருவரும் மீது அதிக நேசம் வைத்திருந்தார்கள். மேலும், அவர்கள் இருவரும் செய்கு ஹஸன் உடன் அதிககாலம் கழித்தார்கள். அவர்கள் முஹம்மது லெப்பை மற்றும் செய்கு அப்துல் காதர் என்போர் ஆவர்.செய்கு அப்துல் காதர் அவர்கள் காலியார் பக்கீன் லெப்பை என அறியப்படுகின்றார். செய்கு அப்துல் காதர் அவர்கள் எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கற்றார். மேலும், செய்கு ஹஸன் அவர்கள் தனது கிலாபத்தை செய்கு அப்துல் காதர் அவர்களுக்கு வழங்கினார்கள்.
மரணம்
தொகுதனது இறுதிக் காலத்தை தர்கா நகரில் கழித்த செய்கு ஹஸன் அவர்கள், தனது 80வயதில் அதாவது 1866ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி செய்வாய்க்கிழமை (ஹிஜ்ரி 1283 முஹர்ரம் பிறை 7இல்) இரவு காலமானார்.செய்கு ஹஸன் அவர்கள் தர்ஹா நகரில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.[5]
மஷாயிகுமார் கந்தூரி
தொகுமஷாயிகுமார் கந்தூரி என்று பரலாக அறியப்படும் அன்னதான நிகழ்வு 1862ஆம் ஆண்டு செய்கு ஹஸன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. செய்கு ஹஸன் அவர்களின் மறைவின் பின்னர், அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள பள்ளிவாசலில் இன்று வரை வருடாந்தம் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்று வருகின்றது[6].வரலாற்றுச் சிறப்புமிக்க 150வருட மஷாயிகுமார் கந்தூரி நிகழ்வு 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Shuayb Alim, Dr.Tayka (1996). Arabic, Arwi and Persian in Serandib and Tamil Nadu. Madras: Imamul Arus Trust. p. 43.
- ↑ முக்தார், பி. எம். "இறைநேசர் மஹ்தூமி (ரலி)யின் 151வது வருட ஞாபகார்த்த மஜ்லிஸ்". archives.thinakaran.lk. The Associated Newspapers of Ceylon Ltd. பார்க்கப்பட்ட நாள் 3 June 2020.
- ↑ Mohamed, A. L. M. (1998). Sheikh Hassan Bin Osmanul Magdoomy – Holy Saint Enshrined at Dharge Town. Dharga Town: Dharga House. p. 3.
- ↑ முஹம்மத் சில்மி (நூரி), எம்.ஏ, மெளலவி எம்.ஆர். "தர்ஹாநகர் ஆலிம் ஸாஹிப் அப்பா தைக்காவில் 147வது ம'hயிகுமார் கந்தூரி". archives.thinakaran.lk. The Associated Newspapers of Ceylon Ltd. பார்க்கப்பட்ட நாள் 3 June 2020.
- ↑ ஏ.எல்.எம்., முஹம்மது (1988). செய்க் ஹஸன் பின் உஸ்மானுல் மக்துாமி(ரழி). தர்கா நகர். p. 86-87.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help)CS1 maint: location missing publisher (link) - ↑ Mukthar, B.M. "155ஆவது வருட மனாகிப் மஜ்லிஸின் கொடியேற்ற வைபவம்". www.tamilmirror.lk (in Tamil). பார்க்கப்பட்ட நாள் 3 June 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Editor (25 Sep 2012). "150th Mashaik Feast at Dharga Town". Daily Mirror. https://www.pressreader.com/sri-lanka/daily-mirror-sri-lanka/20120925/282071979109570. பார்த்த நாள்: 3 June 2020.