செருமேனியம் இருசெலீனைடு
வேதிச் சேர்மம்
செருமேனியம் இருசெலீனைடு (Germanium diselenide) என்பது GeSe2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். செருமேனியமும் செலீனியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
செருமேனியம் செலீனைடு
செருமேனியம்(IV) செலீனைடு | |
இனங்காட்டிகள் | |
12065-11-1 | |
ChemSpider | 74804 |
EC number | 235-063-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82903 |
| |
பண்புகள் | |
GeSe2 | |
வாய்ப்பாட்டு எடை | 230.57 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறப்படிகங்கள் |
அடர்த்தி | 4.56±0.02 கி·செ.மீ−3[1] |
உருகுநிலை | 707±3 °செ[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | செருமேனியம் ஈராக்சைடு செருமேனியம் இருசல்பைடு செருமேனியம் இருதெலூரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | கார்பன் இருசெலீனைடு சிலிக்கான் இருசெலீனைடு வெள்ளீயம் இருசெலீனைடு ஈயம் இருசெலீனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசெருமேனியம் மற்றும் செலீனியம் ஆகிய தனிமங்கள் விகிதவியல் அளவுகளில் எடுத்துக் கொள்ளப்பட்டு வினைபுரியச் செய்வதன் மூலம் அல்லது செருமேனியம் டெட்ராகுளோரைடை ஐதரசன் செலீனைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் செருமேனியம் இருசெலீனைடு தயாரிக்கப்படுகிறது.:[1]
- Ge + 2Se → GeSe2
- GeCl4 + 2H2Se → GeSe2 + 4HCl
பண்புகள்
தொகுசெருமேனியம் இருசெலீனைடு செலீனியம் மற்றும் ஐதரசீனுடன் வினைபுரிந்து மஞ்சள் நிற செலீனிடோசெருமானேட்டை (N2H5)4Ge2Se6) தருகிறது.[2]
- 2GeSe2 + 2Se + 5N2H4 → (N2H5)4Ge2Se6 + N2
செருமேனியம் இருசெலீனைடு ஈயசெலீனியம் மற்றும் காலியம்(III) செலீனைடு ஆகியவற்றுடன் உயர் வெப்பநிலையில் வினைபுரிந்து PbGa2GeSe6 சேர்மத்தைக் கொடுக்கிறது[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Ivanov-Emin, B. N. Germanium selenides. Zhurnal Obshchei Khimii, 1940. 10: 1813-1818. ISSN: 0044-460X.
- ↑ David B. Mitzi (May 2005). "Synthesis, Structure, and Thermal Properties of Soluble Hydrazinium Germanium(IV) and Tin(IV) Selenide Salts" (in en). Inorganic Chemistry 44 (10): 3755–3761. doi:10.1021/ic048276l. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:15877460. https://pubs.acs.org/doi/10.1021/ic048276l. பார்த்த நாள்: 2021-01-23.
- ↑ Valeriy V. Badikov, Dmitrii V. Badikov, Li Wang, Galina S. Shevyrdyaeva, Vladimir L. Panyutin, Anna A. Fintisova, Svetlana G. Sheina, Valentin Petrov (2019-08-07). "Crystal Growth and Characterization of a New Quaternary Chalcogenide Nonlinear Crystal for the Mid-Infrared: PbGa 2 GeSe 6" (in en). Crystal Growth & Design 19 (8): 4224–4228. doi:10.1021/acs.cgd.9b00118. பன்னாட்டுத் தர தொடர் எண்:1528-7483. https://pubs.acs.org/doi/10.1021/acs.cgd.9b00118. பார்த்த நாள்: 2021-01-23.