செருமேனியம் இருபுரோமைடு
செருமேனியம் இருபுரோமைடு (Germanium dibromide) GeBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். செருமேனியத்தின் புரோமைடு உப்பாக இது கருதப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
24415-00-7 | |
ChemSpider | 4885753 |
EC number | 627-437-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6327224 |
| |
பண்புகள் | |
Br2Ge | |
வாய்ப்பாட்டு எடை | 232.44 g·mol−1 |
தோற்றம் | வெண்மையும் மஞ்சளும் கலந்த திண்மம் [1] |
உருகுநிலை | 120–125 °செல்சியசு[2] 143–144 °C (விரைவாக சூடுபடுத்தினால்)[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H314 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | செருமேனியம் இருபுளோரைடு செருமேனியம் இருகுளோரைடு செருமேனியம் அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | வெள்ளீயம்(II) புரோமைடு ஈய மிருபுரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசெருமேனியத்தின் டெட்ராபுரோமைடை செருமேனியம் அல்லது துத்தநாகம் தனிமத்துடன் சேர்த்து ஒடுக்க வினையின் மூலம் குறைத்து செருமேனியம் இருபுரோமைடு தயாரிக்கப்படுகிறது.[4][1]
பண்புகள்
தொகுசெருமேனியம் இருபுரோமைடு என்பது மஞ்சள்-வெள்ளை நிறத்தில் காணப்படும் ஒரு திண்மப் பொருளாகும். எத்தனால் மற்றும் அசிட்டோனில் கரைகிறது. செருமேனியத்தின் டெட்ராபுரோமைடாகவும் செருமேனியமாகவும் இது விகிதாச்சாரமின்றி சிதைவடைகிறது. நீராற்பகுப்புக்கு உட்படுத்தப்பட்டால் செருமேனியம் ஈராக்சைடாக மாற்றமடைகிறது.
P21/c (எண். 14) என்ற இடக்குழுவும், a = 11.68 Å, b = 9.12 Å, c = 7.02 Å, மற்றும் β = 101.9° என்ற அணிக்கோவை அளவுருக்களும் கொண்டு ஒற்றைச் சரிவச்சுப் படிகத்திட்டத்தில் செருமேனியம் இருபுரோமைடு படிகமாகிறது.[4][5] ஈதர் கரைப்பானில் உள்ள வளையபெண்டா டையீனைல் சோடியம் அல்லது வளையபெண்டா டையீனைல் தாலியத்துடன் வினைபுரிந்து செருமேனோசீனை உருவாக்குகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 724.
- ↑ Sigma-Aldrich Co., Germanium(II) bromide, 97%.
- ↑ "Germanium(II) bromide". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ 4.0 4.1 Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 959, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
- ↑ Roland C. Rouse, Donald R. Peacor, Bruce R. Maxim (1977-01-01), "The crystal structure of germanium dibromide*", Zeitschrift für Kristallographie - Crystalline Materials, vol. 145, no. 3–4, pp. 161–171, Bibcode:1977ZK....145..161R, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1524/zkri.1977.145.3-4.161, பன்னாட்டுத் தர தொடர் எண் 2194-4946
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ John V. Scibelli, M. David. Curtis (February 1973). "Bis(.pi.-cyclopentadienyl)germanium(II)" (in en). Journal of the American Chemical Society 95 (3): 924–925. doi:10.1021/ja00784a051. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja00784a051. பார்த்த நாள்: 2021-06-10.