செருமேனியம் நான்குபுளோரைடு
செருமேனியம் நான்குபுளோரைடு (Germanium tetrafluoride) என்பது GeF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட செருமேனியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
செருமேனியம் டெட்ராபுளொரைடு
டெட்ராபுளொரோசெருமேன் டெட்ராபுளோரிடோசெருமேனியம் | |
வேறு பெயர்கள்
செருமேனியம்(IV) புளோரைடு
செருமேனியம் புளோரைடு | |
இனங்காட்டிகள் | |
7783-58-6 | |
ChemSpider | 11282354 |
EC number | 232-011-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82215 |
| |
பண்புகள் | |
GeF4 | |
வாய்ப்பாட்டு எடை | 148.634 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற வாயு |
அடர்த்தி | 6.074 கி/லி (வாயு), 2.46 கி/மி.லி (திரவம்)[1] |
உருகுநிலை | −15 °C (5 °F; 258 K) at 4 bar |
கொதிநிலை | −36.5 °C (−33.7 °F; 236.7 K) sublimates |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-8.008 கியூ/கி |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரசன் புளோரைடு உருவாகிறது, அரிக்கும் |
R-சொற்றொடர்கள் | R26 R35 |
S-சொற்றொடர்கள் | S9 S26 S28 S36 S45 |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | செருமேனியம் நான்குகுளோரைடு செருமேனியம் நான்குபுரோமைடு செருமேனியம் நான்கையோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | கார்பன் நான்குபுளோரைடு சிலிக்கன் நான்குபுளோரைடு வெள்ளீயம் நான்குபுளோரைடு ஈயம் நான்குபுளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு முறைகள்
தொகுநிறமற்ற வாயுவான இதை செருமேனியம் ஈராக்சைடுடன் (GeO2) ஐதரோ புளோரிக் அமிலம் (HF) சேர்த்து வினைபுரியச் செய்து அல்லது செருமேனியத்துடன் புளோரின் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கலாம்.
Ge + 2 F2 → GeF4
Ba[GeF6] என்ற அணைவு உப்பு வெப்பச்சிதைவுக்கு உட்படும்போதும் செருமேனியம் நான்குபுளோரைடு உருவாகிறது.[2]
Ba(GeF6) → GeF4 + BaF2
பண்புகள்
தொகுசெருமேனியம் நான்குபுளோரைடு எளிதில் தீப்பற்றாமல் பூண்டு மணத்துடன் நன்றாக புகையக்கூடிய ஒரு வாயுவாகும். தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரோ புளோரிக் அமிலம் மற்றும் செருமேனியம் ஈராக்சைடு ஆகியனவற்றை உருவாக்குகிறது.1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மூலக்கூற்றுச் சிதைவுறுதல் நிகழ்கிறது.[3]
பயன்கள்
தொகுஇருசிலேனுடன் செருமேனியம் நான்குபுளோரைடைச் சேர்த்து சிலிக்கந்செருமேனியம் (SiGe) சேர்மத்தை தொகுப்பு முறையில் தயாரிக்கலாம் [1]
செருமேனியம் நான்குபுளோரைடுடன் தூளாக்கப்பட்ட செருமேனியத்தைச் சேர்த்து 150-300 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதால் [4] செருமேனியம் இருபுளோரைடைத் தயாரிக்கமுடியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Germanium(IV) fluoride பரணிடப்பட்டது 2020-05-28 at the வந்தவழி இயந்திரம். sigmaaldrich.com
- ↑ Georg Brauer: Handbuch der Präparativen Anorganischen Chemie
- ↑ Germaniumtetrafluorid பரணிடப்பட்டது 2017-12-31 at the வந்தவழி இயந்திரம். IFA Database
- ↑ Greenwood, N. N.; Earnshaw, A. (1998). Chemistry of the Elements (second edition). Butterworth Heinemann. pp. 376–377. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-3365-4.