செருவாரி இலட்சுமணன்

இந்திய தடகள போட்டியாளர்

செருவாரி கோட்டியேத்து சி. கே இலட்சுமணன் (Cheruvari Kottieth C. K. Lakshmanan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீரரும் செயற்பாட்டாளரும் ஆவார். 1898 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1924 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக்கில் பிரித்தானிய இந்தியாவை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். அப்போட்டியில் தடை தாண்டும் போட்டியில் கலந்து கொண்ட இவர் பதக்கம் எதையும் வெல்லவில்லை. [1]

1924 ஒலிம்பிக்கில் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய எட்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்திய ஒலிம்பிக் குழுவில் இவர் ஒரு பகுதியாக இருந்தார். ஒலிம்பிக் நிகழ்வில் பங்கேற்ற முதல் மலையாளி என்ற சிறப்பு இவருக்கு கிடைத்தது. அதே 1924 ஆம் ஆண்டில் தில்லியில் நடந்த முதல் தேசிய தடகளப் போட்டியில் 120-கசம் நீளம் கொண்ட தடை ஓட்டத்தில் இவர் தங்கம் வென்றார் [2] மேலும் 1925-26 மற்றும் 1930-31 ஆண்டுகளுக்கு இடையில் முதல் தர அளவில் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார்.[3] [4]

லட்சுமணன் பின்னர் இந்திய இராணுவத்தில் படைத்துறை பணித்தலைவராகவும் , இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பொது இயக்குநராகவும் பணியாற்றினார். 1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதியன்று இலட்சுமணன் புது தில்லியில் இறந்தார். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Cheruvari Lakshmanan". Olympedia. பார்க்கப்பட்ட நாள் 21 September 2021.
  2. "Olympians from Kerala". kerala2015.com. Archived from the original on 27 August 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2015.
  3. "CK Lakshmanan profile". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 February 2018.
  4. "Olympians Who Played First-Class Cricket". Olympedia. பார்க்கப்பட்ட நாள் 28 July 2020.
  5. "Obituary - C. K. Lakshmanan". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19701004&printsec=frontpage&hl=en. 

புற இணைப்புகள்

தொகு
  • Cheruvari Lakshmanan at Olympedia
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருவாரி_இலட்சுமணன்&oldid=3757406" இலிருந்து மீள்விக்கப்பட்டது