செ. ப. கருணாகர மேனன்
திவான் பகதூர் செருபலா பத்தாயபுரம் கருணாகர மேனன் (Diwan Bahadur Cherubala Pathayapura Karunakara Menon) (1891 – 1976) ஒரு இந்திய அரசு ஊழியரும் நிர்வாகியும் ஆவார். இவர் 1944 முதல் 1947 வரை கொச்சி இராச்சியத்தின் திவானாக பணியாற்றினார். இவர் இராச்சியத்தின் கடைசி திவானாக இருந்தார். மேலும் கொச்சி அரசு இந்திய ஒன்றியத்தில் சேரும் வரை திவானாகப் பணியாற்றினார். இவரது புகழ்பெற்ற வாழ்க்கையின் போது இவருக்கு ராவ் சாஹிப், ராவ் பகதூர் மற்றும் திவான் பகதூர் ஆகிய பட்டங்களை பிரித்தானிய அரசாங்கம் வழங்கியது.
திவான் பகதூர் செருபலா பத்தாயபுரம் கருணாகர மேனன் | |
---|---|
புதுக்கோட்டையின் திவான் புதுக்கோட்டை | |
பதவியில் 1947 – 3 மார்ச் 1948 | |
ஆட்சியாளர் | ராஜகோபால தொண்டைமான் |
பின்னவர் | மன்னர் அரசு கலைக்கப்பட்டது |
கொச்சியின் திவான் | |
பதவியில் 1944–1947 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1891 சிற்றூர், கொச்சி இராச்சியம் |
இறப்பு | 1976 சிற்றூர், கேரளா |
ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்
தொகுகருணாகர மேனன், 1891ஆம் ஆண்டில் அப்போதைய கொச்சி இராச்சியத்தின் சிற்றூர் என்ற இடத்தில் ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள் இருந்தனர். இவரது குடும்பம், அந்த நாட்களில் மிகவும் பொதுவான விவசாய பாரம்பரியத்தை பின்பற்றியது. மேனன் தனது பள்ளிப்படிப்பை சிற்றூரில் பயின்றார். பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
தொழில்
தொகுகல்வியை முடிந்ததும், மேனன் சென்னை வருவாய் வாரியத்தில் ஒரு எழுத்தராக சேர்ந்தார். சர் இராஜாஜியின் தலைமையில் இந்திய அரசு சட்டம் 1935இன் படி சென்னை மாகாணத்தில் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியைப் பிடித்தவுடன், கருணாகர மேனன் பொது சேவை ஆணையத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மேனன், விரைவில் தெற்கு கனராவின் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது மேனன் இந்திய அரசின் பிராந்திய உணவு ஆணையராக நியமிக்கப்பட்டார். பொது விநியோக அமைப்புகளை அறிமுகப்படுத்துவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். ராஜேந்திர பிரசாத் உணவு அமைச்சராக இருந்தபோது இவர் உணவு இயக்குநராக பொறுப்பேற்க தில்லிக்கு அழைக்கப்பட்டார்.
கொச்சி இராச்சியத்தில் திவானாக பொறுப்பேற்று, இந்தியா சுதந்திரம் பெற்ற 15 ஆகஸ்ட், 1947 வரை பணியாற்றினார். இந்தியக் குடியரசில் கொச்சி அரசு நுழைவதற்கு இவர் தலைமை தாங்கினார்.
பிற்கால வாழ்வு
தொகுஇவரது பிற்கால வாழ்க்கையில், இந்திய அரசாங்கத்தின் ஆலோசகராக பணியாற்றினார். கடைசியில் கேரளாவுக்குத் திரும்பி வணிக நலன்களைப் பெற்றார். செயலிழந்த ஷொரனூர் மெட்டல் இண்டஸ்ட்ரீஸை இவர் புதுப்பித்தா. சிற்ரூர் சர்க்கரை கூட்டுறவு ஆலையை அமைத்தார். மேலும், தனியார் கொச்சின் வணிக வங்கியின் தலைவராக இருந்தார். சிற்றூர் மக்கள்தொகையின் நீண்டகால தேவையை பூர்த்திசெய்ய சிற்றூர் கல்லூரி அமைப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
குடும்பம்
தொகுதிருச்சூரில் நன்கு அறியப்பட்ட குருப்பம் குடும்பத்தைச் சேர்ந்த டி. சி. ஜானகி அம்மாவை மணந்தார். கேரளாவைச் சேர்ந்த சமஸ்கிருத மொழியில் ஆரம்பகால முதுகலை பட்டதாரிகளில் ஒருவரான இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் கௌரவங்களுடன் தேர்ச்சி பெற்றார். இவர்களின் மூத்த மகன் கிருஷ்ணன், ஆந்திராவின் கணக்காளர் நாயகமாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் 2002 இல் இறந்தார். இவர்களின் மகள் பார்வதி, வெளிநாட்டிலும் பின்னர் நிறுவன சட்ட ஆணையம் மற்றும் வாரியத்திலும் பணியாற்றி பின்னர் செயலாளராகவும், பின்னர் கொச்சின் சுத்திகரிப்பு நிலையங்களின் இயக்குநராகவும் இருந்த மத்திய அரசின் அரசு ஊழியரை மணந்தார். இளைய மகன் நாராயணன் பெருநிறுவன உலகிற்குச் சென்று, இப்போது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்வேறு பல தேசிய நிறுவனங்களின் இயக்குநர், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராக பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்றார்.
கருணாகர மேனன் 1976 இல் தனது 85 வயதில் காலமானார். இவரது மனைவி ஜானகி அம்மா 1991இல் இறந்தார் .
மேற்கோள்கள்
தொகு- "Archived copy". Archived from the original on 10 June 2015. பார்க்கப்பட்ட நாள் 11 September 2015.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)