சேதம் (Sedam) அல்லது சேரம் என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது சேதம் வட்டத்தின் தலைமையகமாகும்.

நிலவியல்

தொகு

இந்த நகரம் 5.5 சதுர கிலோமீட்டர் (2.1 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது [1] குல்பர்க்கா மாவட்டத்தில் மூன்று வட்டங்களுடன் சேதம் வட்டம் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. மேற்கில் சித்தாபூர் வட்டம், வடக்கே சின்சோலி வட்டம் மற்றும் தெற்கே யாதகிரி மாவட்டம். இது தெலங்காணாவின் ரங்காரெட்டி மாவட்டத்தின் தந்தூர் வட்டாம் மற்றும் கிழக்கில் தெலுங்கானாவில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தின் கோடங்கல் வட்டத்தையும் கொண்டுள்ளது. சேதம் வட்டம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

போக்குவரத்து

தொகு

சேதம் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இது ஐதராபாத்திலிருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.   தெலங்காணா மாநிலத்தின் தலைநகரான இது மாவட்ட தலைமையகமான குல்பர்காவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது யாதகிரியுடன் 55 கி.மீ தொலைவில் அமைந்துள்ளாது. சேதம் குல்பர்கா சாலையில் குல்பர்கா விமான நிலையம் அமைந்துள்ளது.

இரயில்

தொகு

சேதம் ஐதராபாத்-மும்பை பாதை மற்றும் தில்லி-பெங்களூர் பாதையில் அமைந்துள்ளது. பின்வரும் இரயில்கள் சேதத்தில் நிறுத்தப்படுகின்றன: உசைன் சாகர் அதிவிரைவு வண்டி, மும்பை அதிவிரைவு வண்டி, [ராயல்சீமா அதிவிரைவு வண்டி ( திருப்பதி - ஐதராபாத் ), ஹரி பிரியா அதிவிரைவு வண்டி, தில்லி-பெங்களூர் இராஜதானி அதிவிரைவு வண்டி ஆகியவை. இராஜதானி நிறுத்தப்படும் முதல் வட்டம், கோனார்க் அதிவிரைவு வண்டி (மும்பை-புவனேசுவரம்), ராஜ்கோட்-செகந்திராபாத் அதிவிரைவு வண்டி, பவநகர்-காக்கிநாடா அதிவிரைவு வண்டி, ஹூப்ளி-செகந்திராபாத் அதிவிரைவு வண்டி, நாந்தேடு-பெங்களூர் இணைப்பு அதிவிரைவு வண்டி, பீதர்-யஷ்வந்த்பூர் அதிவிரைவு வண்டி ஆகியவை. கூடுதலாக மற்ற சாதாரண பயணிகள் ரயில்களும் உள்ளன.

விளக்கப்படங்கள்

தொகு

சேதம் ஒரு நகர நகராட்சி அமைப்புக் கொண்ட நகரமாகும். இது 23 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.  சேதம் நகராட்சியில்

2011 இந்தியா மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 39,341 மக்கள் தொகையில் 19,816 ஆண்கள், 19,525 பெண்கள் உள்ளனர். [ மேற்கோள் தேவை ]

வரலாறு

தொகு

பண்டைய காலங்களில் சேதம் இடிம்பா என்று அழைக்கப்பட்டது. சேதத்தை இராஷ்டிரகூடர்கள் மற்றும் கல்யாணி சாளுக்கியர்கள் ஆட்சி செய்தனர். சேதம் நகரத்தில் உள்ள சில பழங்கால கோயில்கள் மாதவ திரிலிங்கேசுவரர் ஈஸ்வரர் கோயில், கோட்டாலா பசவேசுவரர் கோயில், மன்விகேசுவரர் கோயில், பஞ்சலிங்கேசுவரர் கோயில், பனந்தி கம்பா, சுவாலமுகி சிலைகள் மற்றும் கணப நவகோடி நாராயணன் கோயில், பாண்டுரங்ன் கோயில், கரதகிரி அனுமார் கோயில், இலட்சுமி நாராயணன் கோயில், கிங்குலாம்பாள் கோயில், சாதிசாப் தர்கா, மஸ்ஜித்-இ-மகால், மக்கா மசூதி ஆகயவை. கணேச நகரில் கணேசர் கோயில் என்ற பழங்கால கோட்டையும் சேதத்தில் உள்ளது. சுமார் 12-14 கி.மீ தூரத்தில் சேதம் அருகே, ஒரு பிரபலமான மசூதி கொண்ட ரஞ்சோல் என்று ஒரு இடம் உள்ளது. இராஷ்டிரகூட வம்சத்தின் காலத்தின் சில சமண குகை இடிபாடுகளும் சேதத்தில் உள்ளன. சுமார் 20-25 கி.மீ தூரத்தில் சேதக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற சந்தனேசுவர் கோயிலுடன் பெனகனள்ளி என்று அழைக்கப்படும் இடமும் உள்ளது.

[ மேற்கோள் தேவை ]

பொருளாதாரம்

தொகு

கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தப்படும் சாகாபாத் கற்களால் சேதம் பிரபலமானது. இந்த கற்களை விற்க பல குவாரிகள் [2] மற்றும் சுரங்கங்கள் சேதத்தில் உள்ளன (வெட்டப்படாத மற்றும் மெருகூட்டப்பட்டவை). சேதம் வட்டத்தில் நான்கு சீமைக்காரை [3] தொழிற்சாலைகள் உள்ளன: சேதத்தில் உள்ள பிர்லா சக்தி சிமெண்டின் வாசவதத்தா சிமென்ட் பிரிவு, அல்ட்ராடெக் சிமென்ட், மல்கெடாவில் உள்ள ராஜசிறீ சிமெண்டின் ஒரு பிரிவு, மல்கெடா, தென்னிந்திய சிமென்ட் நிறுவனம், கோட்லா பெனகனஅள்ளி கிராமத்தில் சிறீசிமென்ட் போன்றவை. உணவு தானியத் தொழிலும் இங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இங்கு உற்பத்தியாகும் துவரம் பருப்பு தமிழகம் போன்ற தொலைதூர இடங்களுக்கு அனுப்பப்படுகிறது.[4]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. The population and area of major towns in Karnataka has been mentioned in the webpage Population of Corporation/CMC/TMC/TP பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம் belonging to the Municipal Administration Department of the Government of Karnataka
  2. "Quarries". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
  3. "Cement companies in sedam". www.karnataka.com. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
  4. "Reliance Cement to open two cement plants in Karnataka". பார்க்கப்பட்ட நாள் 29 Nov 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேதம்&oldid=3806388" இலிருந்து மீள்விக்கப்பட்டது