குட்டுவன் கோதை
குட்டுவன் கோதை பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு அரசன். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது.
புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்[1]. இது பொருந்தாது. குட்டுவன் சேரல் புலவர் பரணருக்குத் தொண்டு செய்ய வழங்கப்பட்டவன். அரசன் அல்லன்.
புலவர் இவனைக் 'கடுமான் கோதை' எனக் குறிப்பிட்டு இவன் சிறந்த குதிரைவீரன் என்பதையும், பரிசிலர் இவன் கோட்டைக்குள் எளிதாகப் புகலாம், புலிக் குகைக்குள் இடையன் புகமுடியாதது போல மன்னர்கள் நுழையமுடியாது எனக் கூறி, இவனது ஆற்றலையும், கொடைத்திறத்தையும் புலவர் புலப்படுத்துகிறார்.
- காண்க
குறிப்புகள்
தொகு- ↑ டான் பொஸ்கோ
உசாத்துணைகள்
தொகு- செல்லம், வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002 (மறுபதிப்பு).
- புலியூர்க் கேசிகன், புறநானூறு தெளிவுரை, பாரிநிலையம், சென்னை, 2004 (மறு பதிப்பு)
- டான் பொஸ்கோ, பண்டைய கேரளாவின் வரலாறு 03 ஏப்ரல் 2009 இல் அணுகப்பட்டது. பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)