சேர்மன் அருணாசல சுவாமி கோயில்

சேர்மன் அருணாச்சல சுவாமிகள் கோயில் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், ஏரல் பேரூராட்சியில் அமைந்த ஒரு வழிபாட்டு மற்றும் சமாதிக் கோயில் ஆகும். இங்கு சேர்மன் அருணாசல சுவாமி என்பவரின் சமாதி, சிவலிங்கத்துடன் அமைந்துள்ளது.

வரலாறு தொகு

சேர்மன் அருணாசலம் திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமி நாடாருக்கும் சிவனனைந்த அம்மையாருக்கு 1880, அக்டோபர் 2ல் பிறந்தார். சிறுவயதிலேயே யோகக்கலை பயின்றார். 1906, செப்டம்பர் 5 முதல் 1908, ஜூலை 27 வரை ஏரல் பேரூராட்சித் தலைவராக (சேர்மன்) இருந்தார். இதனால் "சேர்மன் அருணாசலம்' என்று அழைக்கப்பட்டார்.

சேர்மன் அருணாச்சலம் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் இவர் தனது சகோதரர் கருத்தப் பாண்டியனிடம் தன் மரணத்தைச் சொன்னார். அதன்படி, 1908, ஜூலை 28 அன்று ஆடி அமாவாசை நாளில் பகல் 12 மணிக்கு சமாதியானர். ஏரலுக்குத் தென்மேற்கில் தாமிரபரணி ஆற்றின் வடகரை ஓரமாக இருந்த ஆலமரத்தின் அருகில் தன்னை சமாதியில் வைத்து மலர்களும் மண்ணும் போட்டு மூடும்படி தம்பியிடம் சொன்னார். அவர் கூறியபடியே அவரது தம்பியும் செய்தார். அவரது சமாதியிடம் இன்று கோயிலாக உள்ளது[1].

வழிபாடு தொகு

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்கி வருகிறார் என்கிற நம்பிக்கையில் இக்கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி குணமடைந்து செல்கிறார்கள்[1]. இந்தக் கோயிலில் பிரசாதமாக கோயில் திருமண்ணும், தண்ணீரும் தருகிறார்கள்.

சிறப்பு நாட்கள் தொகு

  1. ஆடி அமாவாசை
  2. தை அமாவாசை[2]
  3. மகாளய அமாவாசை
  4. சிவராத்திரி

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு