சேலம் துடுப்பாட்ட அறக்கட்டளை மைதானம்

இந்திய துடுப்பாட்ட மைதானம்

சேலம் துடுப்பாட்ட அறக்கட்டளை மைதானம் (எஸ்சிஎஃப்) [1][2] என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட மைதானமாகும். இது சேலம் மாவட்ட துடுப்பாட்ட சங்கம், தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கம் (டி.என்.சி.ஏ) ஆகியவற்றின் உதவியுடன் சேலம் துடுப்பாட்ட அறக்கட்டளையால் 2020இல் நிறுவப்பட்டது. விளையாட்டுப் பகுதி (90 மீட்டர் (300 அடி)) மாநிலத்தின் மிகப்பெரிய துடுப்பாட்ட மைதானம் இது.[3].

சேலம் துடுப்பாட்ட அறக்கட்டளை மைதானம்
SCF Stadium
SCF Stadium.jpg
முகவரிசேலம்
இந்தியா
அமைவிடம்சேலம் , தமிழ்நாடு , இந்தியா
உரிமையாளர்சேலம் துடுப்பாட்ட அறக்கட்டளை
இயக்குநர்சேலம் துடுப்பாட்ட அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கம்
இருக்கை எண்ணிக்கை5000 - 25,000
கள அமைப்புவட்டம்
தரைப் பரப்புபுல் வெளி
Construction
Broke ground2015
திறக்கப்பட்டதுபெப்ரவரி 10, 2020 (2020-02-10)
கட்டுமான செலவு₹3 கோடி (அமெரிக்க டாலர் US$420,000)
Website
salemdca.com

இந்த அரங்கத்தில் ஐந்து பிட்சுகள், 12 பிராக்டிஸ்-டர்ஃப் விக்கெட்டுகள், வீரர்கள் தங்குமிடம் மற்றும் பத்திரிகையாளர் அறை ஆகியவை உள்ளன.[4] இது நிலத்தடி நீரை அவ்வப்போது உறுஞ்சும் வடிகால் அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது.[5] அமரும் திறன் 5000 ஆகும். இது பெரிய நிகழ்வுகளின் போது 25,000 வரை அதிகரிக்கப்படலாம்.[6] பிப்ரவரி 2020 நிலவரப்படி, பார்வையாளர்களுக்கான இருக்கைகளை நிர்மாணித்தல் மற்றும் வாகனங்களை நிறுத்தும் வசதிகளை சேலம் துடுப்பாட்ட அறக்கட்டளையாலும், தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தாலும் திட்டமிடப்பட்டன. ரஞ்சிக் கோப்பை, தமிழ்நாடு பிரீமியர் லீக் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இந்த அரங்கம் நடத்தும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.[7][8]

அமைவிடம்தொகு

இந்த அரங்கம் வாழப்படியில் சேர்வராயன் மலைகளின் பின்புறம் அமைந்துள்ளது. இது சென்னை-சேலம் நெடுஞ்சாலையில் சேலம் நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 25 கி.மீ.தொலைவில் உள்ளது. இது 16 ஏக்கர் (6.5 ஹெக்டேர்) பரப்பளவில் 90 மீட்டர் (300 அடி) விளையாட்டுப் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது மாநிலத்தில் மிகப்பெரிய மைதானமாகும்.

துவக்க விழாதொகு

இரண்டு ஆண்டு கட்டுமானத்திற்குப் பிறகு 2020 பிப்ரவரி 10 ஆம் தேதி, முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி, இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் ராகுல் திராவிட், முன்னாள் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் என்.சீனிவாசன், தமிழக துடுப்பாட்ட சங்கத்தின் (டி.என்.சி.ஏ) தலைவர் ரூபா குருநாத் மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில் அரங்கம் திறக்கப்பட்டது. இது 3 கோடி (அமெரிக்க டாலர் $ 420,000) செலவில் கட்டப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

  1. "New cricket stadium inaugurated in TN - Times of India". The Times of India. 2020-02-20 அன்று பார்க்கப்பட்டது.
  2. சேலம் அருகே சர்வதேச தரத்திலான [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] மைதானம் | Cricket Stadium | Salem (in ஆங்கிலம்), 2020-02-22 அன்று பார்க்கப்பட்டது URL–wikilink conflict (உதவி)
  3. https://www.youtube.com/watch?v=vucuckUJHqs
  4. Prasad, G. "Dravid believes next generation of cricketers will emerge from smaller cities and towns". Sportstar (in ஆங்கிலம்). 2020-02-20 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Future of Tamil Nadu cricket brightens with India's next international stadium". Asianet News Network Pvt Ltd (in ஆங்கிலம்). 2020-02-23 அன்று பார்க்கப்பட்டது.
  6. Jul 16, TNN | Updated; 2017; Ist, 13:30. "Salem to soon have a cricket stadium of international stature | Salem News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). 2020-02-20 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Tamil Nadu CM Edappadi Palaniswami assures IPL matches at Salem soon". The New Indian Express. 2020-02-20 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Coimbatore, Salem on TNPL map this season". The New Indian Express. 2020-02-20 அன்று பார்க்கப்பட்டது.