சைதா முனா தஸ்னீம்

சைதா முனா தஸ்னீம் (Saida Muna Tasneem) ஒரு பங்களாதேஷ் தூதர் ஆவார். இவர் ஐக்கிய இராச்சியத்துக்கான பங்களாதேஷின் உயர் ஆணையராகவும் , அயர்லாந்து மற்றும் லைபீரியாவுக்கான தூதுவராகவும், அந்தப் பதவிகளை வகிக்கும் முதல் பெண்மணியாகவும் உள்ளார். தஸ்னீம் முன்பு தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கான உயர் ஆணையராகவும் ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்திற்கான பங்களாதேஷின் பிரதிநிதியாகவும் இருந்தார்.

சைதா முனா தஸ்னீம்
20ஆம் பிரித்தானிய இராச்சியத்திற்கான வங்காளதேசத்தின் உயர் ஆணையர்
பதவியில் உள்ளார்
பதவியில்
நவம்பர் 30, 2018
குடியரசுத் தலைவர்அப்துல் ஹமீது
பிரதமர்சேக் அசீனா
முன்னையவர்முகமது நஸ்முல் குவானைன்
தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தூதுவர்
பதவியில்
நவம்பர் 14, 2014 – அக்டோபர் 23, 2018
குடியரசுத் தலைவர்அப்துல் ஹமீது
பிரதமர்சேக் அசீனா
பின்னவர்முகமது நஸ்முல் குவானைன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புடாக்கா, கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய வங்காளதேசம்)
தேசியம்வங்காளதேசம்
துணைவர்தௌகிதுல் சௌத்ரி
முன்னாள் கல்லூரிபங்களாதேஷ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
இலண்டன் பல்கலைக்கழகம்
வேலைவெளிநாட்டுத் தூதர்

வாழ்க்கை வரலாறு

தொகு

சைதா முனா தஸ்னீம் கிழக்கு பாகிஸ்தானின் டாக்காவில் பிறந்தார்.[1] இவரது தந்தை பெய்ரூட்டின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை முடிப்பதற்காக இவரது குடும்பம் 1975 ஆண்டில் லெபனானில் உள்ள பெய்ரூட்டிற்குச் சென்றனர். பின்னர் டாக்காவுக்கு 1979 இல் திரும்பினர், அங்கு தஸ்னீம் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்தார். இவர் பங்களாதேஷ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயின்று 1988 ஆம் ஆண்டில் வேதியியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2] இவரது தந்தை, ஒரு பொதுத்துறை ஊழியர், இவர் பிசிஎஸ் தேர்வுகளை சந்திக்க ஊக்குவித்தார். அதில் இவர் சிறந்து விளங்கினார். பின்னர் அவர் இலண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியில் பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்தில் முதுகலை அறிவியல் பட்டத்தை முடித்தார்.

தொழில் வாழ்க்கை

தொகு

தஸ்னீம் 1993 இல் பங்களாதேஷ் வெளியுறவுச் சேவையில் பணியாற்றத் தொடங்கினார்.வங்காளதேச வெளியுறவு அமைச்சகம் தஸ்னீமை ஜூன் 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் திட்டத்தில் பணியமர்த்தியது.[3]

தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கான தூதர்

தொகு

நவம்பர் 14, 2014 அன்று தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கான பங்களாதேஷின் தூதராக தஸ்னீம் நியமிக்கப்பட்டார் [4] செப்டம்பர் 4, 2015 அன்று மன்னர் ராமா 9 ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் அப்போதைய முடிசூடா இளவரசர் மகா வஜிரலங்கோனை அவர் சந்தித்தார்.

தூதராக, இரு நாடுகளுக்கிடையே மத சுற்றுலாவை வலுப்படுத்துவது தஸ்னீமின் முன்னுரிமைகளில் ஒன்றாகும்.[5] அக்டோபர் 23, 2018 அன்று தாய்லாந்தின் உயர் ஆணையராக தஸ்னீமுக்கு பதிலாக முகமது நஸ்முல் குவானைன் பொறுப்பேற்றுக் கொண்டார்.[6]

ஐக்கிய இராச்சியத்திற்கான உயர் ஆணையர் மற்றும் அயர்லாந்து மற்றும் லைபீரியாவுக்கான தூதர்

தொகு

நவம்பர் 30, 2018 அன்று, தஸ்னீம் ஐக்கிய இராச்சியத்தின் 20 வது உயர் ஆணையராகவும், அயர்லாந்து மற்றும் லைபீரியாவுக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டார். இவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்.[7][8]

மே 1, 2019 அன்று, பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தஸ்னீம் கலந்து கொண்டார், அங்கு இவர் அரசியாரின் நினைவுபடுத்தும் கடிதம் மற்றும் ராணி இரண்டாம் எலிசபெத் ஆகியோருக்கு அவரது நம்பகத் தன்மைக்கான கடிதத்தை வழங்கினார். சந்திப்பின் போது, தஸ்னீம் பிரித்தானியி இராச்சியத்தின் இராணியை நல்ல ஆரோக்கியம் மற்றும் வளமைக்காக வாழ்த்தினார். மேலும் வங்காளதேசத்தில் இரண்டு காடுகள் (அவற்றில் ஒன்று லாவாச்சோரா காடு ) [9] ராணியின் பொதுநலவாய விதானத்தின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள்களை முன் வைத்தார். இராணி வங்காளதேசத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பெண்களுக்கான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றைப் பாராட்டினார்.[10]

நவம்பர் 21, 2019 அன்று, தஸ்னீம் ஐரிஷ் தலைவர் மைக்கேல் டி ஹிக்கின்சை அயர்லாந்தின் டப்லினில் உள்ள ஆரஸ் அன் உவாச்தரைனில் சந்தித்தார். அயர்லாந்திற்குள் பங்களாதேஷ் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவளித்ததற்காக தஸ்னீம் ஹிக்கின்ஸுக்கு நன்றி தெரிவித்தார், அதே நேரத்தில் அண்டை நாடான மியான்மரில் இருந்து 1.1 மில்லியன் ரோஹிங்கியா அகதிகளுக்கு பிரதமர் ஷேக் ஹசீனா அடைக்கலம் கொடுத்ததை ஹிக்கின்ஸ் பாராட்டினார்.[11] டாக்காவில் ஒரு ஐரிஷ் தூதரகத்தைத் திறக்கவும் மற்றும் உறவுகளை மேம்படுத்தவும் அடிக்கடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த ஹிக்கின்ஸை அவர் வெளிப்படையாக அழைத்தார்.

ஐக்கிய நாடுகள்

தொகு

2014 ஆம் ஆண்டில், ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்திற்கான பங்களாதேஷின் நிரந்தரப் பிரதிநிதியாக தஸ்னீம் நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆணையத்தின் 72 வது அமர்வில், "ஆசியா மற்றும் பசிபிக்கில் பிராந்திய ஒத்துழைப்பு, பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல் வளங்களை நிலையான வளர்ச்சிக்கு பாதுகாத்தல் மற்றும் நீடித்த பயன்பாட்டை ஊக்குவித்தல்" என்ற தலைப்பில் ஒரு தீர்மானத்தை சமர்ப்பிக்க உதவினார். ஷேக் ஹசீனாவின் நீலப் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் இத்தீர்மானத்தை இணைந்து ஆதரித்தன.[12] தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.[13]

சர்வதேச கடல்சார் அமைப்பில் பங்களாதேஷின் பிரதிநிதியாகவும் தஸ்னீம் உள்ளார்.[14]

விருதுகள்

தொகு

பிப்ரவரி 23, 2017 அன்று, டாக்காவில் நடந்த விழாவில், தஸ்னீமுக்கு துணை சபாநாயகர் ஃபேஸில் ரப்பி மியாவிடம் இருந்து ஆதிஷ் தீபங்கர் அமைதிக்கான தங்க விருது வழங்கப்பட்டது.[15] குறிப்பாக தாய்லாந்துக்கான உயர் ஆணையராக இருந்த சமயத்தில், மதங்களுக்கிடையிலான உரையாடல் மற்றும் அமைதியை ஊக்குவிப்பதற்காக அவர் ஆற்றிய பணியை அங்கீகரித்து விருது பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Wechsler, Maximillian (31 October 2016). "H.E. Saida Muna Tasneem, Ambassador of the People's Republic of Bangladesh to the Kingdom of Thailand". The BigChilli (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 December 2019.
  2. "As new High Commissioner, Saida Muna Tasneem joins in Bangladesh High Commission in London". Today's World News 24. 2 December 2018. பார்க்கப்பட்ட நாள் 18 November 2019.
  3. "Diplomat recalled over strip club row". BBC News - South Asia. 8 June 2004. http://news.bbc.co.uk/2/hi/south_asia/3786703.stm. பார்த்த நாள்: 22 December 2019. 
  4. "Brief Biography of Ms. Saida Muna Tasneem" (PDF). The International Telecommunications Union. 2016. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
  5. Rahman, Zahidur (26 August 2015). বৌদ্ধ ভিক্ষুদের মাধ্যমে দেশে পর্যটনের বিকাশ ঘটাতে চাইঃ রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম - নির্বাণা. Nirvanapeace (in Bengali). Archived from the original on 22 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 November 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. (in en). 23 October 2018. https://today.thefinancialexpress.com.bd/metro-news/saida-tasneem-new-bd-envoy-to-uk-nazmul-quaunine-to-thailand-1540232309?date=23-10-2018. பார்த்த நாள்: 11 November 2019. 
  7. দায়িত্ব নিয়েছেন সাঈদা মুনা তাসনিম. Prothom Alo (in Bengali). 1 December 2018. பார்க்கப்பட்ட நாள் 18 November 2019.
  8. (in bn). 5 December 2018. https://www.jugantor.com/exile/117340/লন্ডনে-প্রথম-নারী-হাইকমিশনার-সাঈদা-মুনা-তাসনিমের-যোগদান. பார்த்த நாள்: 18 November 2019. 
  9. "Commonwealth SG hails PM’s initiatives in achieving SDGs". Daily Sun. 25 January 2019. https://www.daily-sun.com/amp/post/366555. பார்த்த நாள்: 22 December 2019. 
  10. "Saida Muna Tasneem presents credentials to Queen Elizabeth II". Dhaka Tribune. 5 May 2019. https://www.dhakatribune.com/bangladesh/foreign-affairs/2019/05/05/saida-muna-tasneem-presents-credentials-to-queen-elizabeth-ii. பார்த்த நாள்: 22 December 2019. 
  11. "Saida Muna Tasneem presents credentials to Irish Presiden". Brit Bangla 24. 21 November 2019. Archived from the original on 12 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 10 December 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. (in en). 21 May 2016. https://www.thedailystar.net/backpage/escap-adopts-bd-resolution-oceans-economy-1227424. பார்த்த நாள்: 22 December 2019. 
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in en). 21 May 2016 இம் மூலத்தில் இருந்து 22 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191222173039/https://www.banglanews24.com/english/national/article/52371/UNESCAP-adopts-Bangladesh-Resolution-on-conservation. பார்த்த நாள்: 22 December 2019. 
  14. "IMO lauds Hasina's initiatives to improve ship recycling standard in Bangladesh". The Business Standard. 28 November 2019. https://tbsnews.net/bangladesh/imo-lauds-hasinas-initiatives-improve-ship-recycling-standard-bangladesh. பார்த்த நாள்: 22 December 2019. 
  15. "Ambassador Tasneem receives Atish Dipankar Peace Award". Dhaka Tribune. 24 February 2017. https://www.dhakatribune.com/bangladesh/2017/02/24/ambassador-tasneem-receives-atish-dipankar-peace-award. பார்த்த நாள்: 11 November 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைதா_முனா_தஸ்னீம்&oldid=3930309" இலிருந்து மீள்விக்கப்பட்டது