சாய்னா நேவால்

இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்
(சைனா நெவால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாய்னா நேவால் (Saina Nehwal, பிறப்பு: 17 மார்ச் 1990) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,[3][4] உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.[5] 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.[6] பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே.

சாய்னா நேவால்
Saina Nehwal
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்சாய்னா நேவால்l
நாடு இந்தியா
பிறப்பு17 மார்ச்சு 1990 (1990-03-17) (அகவை 34)
ஐசார், அரியானா[1]
வசிக்கும் இடம்ஐதராபாது, தெலுங்கானா
உயரம்1.65 மீ
எடை60 கிகி (130 இறா)
கரம்வலக்கை
பயிற்சியாளர்அத்திக் சௌகாரி,
புல்லேலா கோபிசந்த்
விமல் குமார்
பெண்கள் ஒற்றையர்
விளையாட்டு பட்ட(ம்/ங்கள்)16
பெரும தரவரிசையிடம்1 [2] (2 ஏப்ரல் 2015)
தற்போதைய தரவரிசை1 [2] (2 ஏப்ரல் 2015)
பதக்கத் தகவல்கள்
பெண்கள் இறகுப்பந்தாட்டம்
நாடு  இந்தியா
ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2012 லண்டன் {{{2}}}
ஆசியப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010 புதுதில்லி {{{2}}}
ஊபர் கிண்ணம்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 புதுதில்லி {{{2}}}
ஆசியப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 இஞ்சியன் {{{2}}}
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 புதுதில்லி ஒற்றையர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2010 புதுதில்லி கலப்பு அணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2006 மெல்பேர்ன் கலப்பு அணி

சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.

அரியானாவில் இசாரில் பிறந்த சாய்னா, ஐதராபாத்திலேயே மிகப்பெரும்பாலும் வாழ்ந்திருக்கின்றார். அவரது தந்தை முனைவர் அர்வீர் சிங் எண்ணெய்வித்துக்கள் ஆய்வு இயக்ககத்தில் அறிவியலாளராகப் பணிபுரிகிறார். அவரது தந்தையும் அன்னை உசா நெவால் இருவரும் முன்னாள் இறகுப்பந்தாட்ட வீரர்கள்.[7]. அவரது ஆர்வத்திற்கு வித்திட்டு பயிற்சிக்காக பாடுபட்டவர் அவரின் தந்தை. சிறுவயது பயிற்சிக்காக தனது சேமிப்பையும் உழைப்பையும் அவருக்காக செலவிட்டார். 2004ஆம் ஆண்டு பிபிசிஎல் (BPCL) நிறுவனம் அவரை பணிக்கு அமர்த்தியது.

சொந்த வாழ்க்கை

தொகு

டிசம்பர் 142018 இல் இவர் பாருபள்ளி காசியப் எனும் சக வீரரை திருமணம் செய்து கொண்டார்.[8]

வெற்றிப்பாதை

தொகு
போட்டி ஆண்டு முடிவு
செக்கோசுலாவிகியா இளநிலை ஓப்பன் 2003 வாகையாளர்
2004 காமன்வெல்த் இளைஞர் ஆட்டங்கள் 2004 3  வெள்ளி
ஆசிய சாடிலைட் இறகுப்பந்தாட்டப் போட்டி 2005 வாகையாளர்
உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள் 2006 இரண்டாம் நிலை
2006 காமன்வெல்த் விளையாட்டுகள் 2006 3  வெண்கலம்
பிலிப்பைன் ஓப்பன் 2006 வாகையாளர்
ஆசிய சாடிலைட் இறகுப்பந்தாட்டப் போட்டி 2006 வாகையாளர்
இந்திய தேசிய இறகுப்பந்தாட்டப் போட்டிகள் 2007 வாகையாளர்
தேசிய விளையாட்டுகள் இந்தியா 2007 3  தங்கம்
சீன தாய்பெய் ஓப்பன் 2008 வாகையாளர்
இந்திய தேசிய இறகுப்பந்தாட்டப் போட்டிகள் 2008 வாகையாளர்
2008 காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுகள் 2008 3  தங்கம்
உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள் 2008 வாகையாளர்
இந்தோனேசிய ஓப்பன் 2009 வாகையாளர்
ஹாங்காங் ஓப்பன் 2010 வாகையாளர்[9]

ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சாய்னா

தொகு

1. 2012ஆம் ஆண்டு, இலண்டன் ஒலிம்பிக் - இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர். ஆகஸ்ட் 4, 2012 அன்று நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நிகழ்வில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.

ஒலிம்பிக் போட்டிகளில் இறகுப்பந்தாட்டத்தில் அரையிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.[10] அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யிஹன் வங்கை (உலகின் தர வரிசையில் முதலிடம்)' எதிர்த்துப் போராடினார். 13-21, 13-21 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டார்.

2. 2008ஆம் ஆண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் - இறகுப்பந்தாட்டத்தில் காலிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியப் பெண்.

சாதனைகள்

தொகு
  • இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர்.
  • உலக இளையர் இறகுப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண்.
  • சூப்பர் தொடர் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இந்தியர்.

விருதுகள்

தொகு

முதலிடம்

தொகு

பெண்கள் ஒற்றையர் பிரிவு இறகுப்பந்தாட்டத் தரவரிசையில் உலக அளவில் சாய்னா நேவால் முதலிடத்தை 2015 ஆம் ஆண்டு பெற்றார்.[11][12]

மேற்கோள்கள்

தொகு
  1. T. S. Sudhir: Saina Nehwal - An Inspirational Biography, Nimby Books (Westland Publications), 2012, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8190657037
  2. 2.0 2.1 "BWF World Rankings". Archived from the original on 6 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 2 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Sukumar, Dev (28 March 2015). "Nehwal Assured of Top Spot; Makes India Open Final". Badminton World Federation இம் மூலத்தில் இருந்து 30 மார்ச் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150330194905/http://www.bwfbadminton.org/news_item.aspx?id=94107. பார்த்த நாள்: 31 March 2015. 
  4. "World No.1 Saina Nehwal Wins Maiden India Open Super Series". NDTV Sports - Badminton News. பிடிஐ. 29 மார்ச் 2015 இம் மூலத்தில் இருந்து 31 மார்ச் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150331214406/http://sports.ndtv.com/badminton/news/239861-saina-nehwal-wins-maiden-crown-as-world-number-one. பார்த்த நாள்: 31 March 2015. 
  5. "Saina first Indian shuttler to win Olympic medal". Archived from the original on 6 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  6. "'Miracle win': Saina Nehwal wins bronze medal after opponent pulls out". 4 August 2012.
  7. "The Hindu feature article dated 20 Jul 2005". Archived from the original on 30 மே 2006. பார்க்கப்பட்ட நாள் 13 ஜூலை 2009. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  8. "Match of the year: Saina ties the knot with Kashyap". Rediff. பார்க்கப்பட்ட நாள் 2018-12-14.
  9. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  10. http://www.thehindu.com/sport/article3717963.ece?homepage=true
  11. "தரவரிசையில் முதலிடம்". தினகரன். Archived from the original on 2020-11-25. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "Saina Nehwal becomes first Indian woman to attain World No.1 ranking". ஐபிஎன் லைவ். Archived from the original on 2015-03-30. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்னா_நேவால்&oldid=3727247" இலிருந்து மீள்விக்கப்பட்டது