சைனோடோன்டிஸ் இட்டூரி
சைனோடோன்ட்டிஸ் இட்டூரி (Synodontis iturii) தலைகீழான கெளுத்தி மீன்களில் ஓர் இனமாகும். காங்கோ சனநாயகக் குடியரசில் உள்ள இட்டூரி ஆற்றில் மட்டுமே இது காணப்படுகிறது.[2] 1911 இல் இம்மீன் குறித்த விவரத்தினை முதன்முதலில் பிரான்சு இசுடைன்டாச்னர் விவரித்தார்.[3] இட்டூரி ஆற்றில் மட்டுமே காணப்படுவதால் இம்மீன் சிற்றினத்தின் பெயரானது இட்டூரி என வழங்கப்படுகிறது.[4]
சைனோடோன்டிஸ் இட்டூரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை
|
வரிசை: | கெளிறு
|
குடும்பம்: | மொச்சோக்கிடே
|
பேரினம்: | சைனோடாண்டிசு
|
இனம்: | S. இட்டூரி
|
இருசொற் பெயரீடு | |
Synodontis இட்டூரி இசுடைன்டாச்னர், 1911 |
விளக்கம்
தொகுசினோடோன்டிஸ் பேரினத்தின் அனைத்து சிற்றினங்களைப் போல, சி. இட்டூரியின் தலையில் ஒரு தனித்துவமான குறுகிய, எலும்பு, வெளிப்புறமாகத் துருத்திக்கொண்டுள்ளது.[5] இம்மீனில் மூன்று இணை பார்பல்கள் உள்ளன . மேக்சில்லரி பார்பல்கள் மேல் தாடையிலும் மேலும் இரண்டு இணை மண்டிபுலர் பார்பல்கள் கீழ் தாடையிலும் உள்ளன.[6] கொழுப்பு துடுப்பு பெரியது மற்றும் வால் (காடல்) துடுப்பு, பிளவுபட்டது.[3]
முதுகுபுற துடுப்புகளின் முன் விளிம்புகள் மற்றும் பெக்டோரல் துடுப்புகள் முதுகெலும்புகளால் கடினப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முள்ளெலும்புகள் உடலின் வலது கோணத்தில் உயர்த்தப்பட்டுத் தற்காப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுகிறது.[7][8] இந்நோக்கத்திற்காக முதுகெலும்புடன் இணைக்கப்பட்ட பல சிறிய எலும்புகள் துணை வருகிறது. ஒரு முறை உயர்த்தப்படும் இந்த முட்களை, நுனியில் அழுத்தம் கொடுத்து மடிக்க முடியாது.[8]
இந்த மீனின் மேல் தாடையின் முன்பகுதியில் ப்ரீமாக்ஸில்லரி டூத்பேட் அமைந்துள்ளது. இதில் குறுகிய, உளி வடிவ பற்கள் பல வரிசைகளில் உள்ளன. கீழ் தாடையில் அசையக்கூடிய பற்களானது நெகிழ்வான, தண்டு போன்ற அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஆங்கில எழுத்தான “எஸ்” வடிவிலான "கொக்கி" என அறியப்படுகிறது.[3][5]
இந்த மீனின் அதிகபட்ச மொத்த நீளம் 20.5 சென்டிமீட்டர்கள் (8.1 அங்) எனவும்,[2] பொதுவாக, சினோடோன்டிஸ் இனத்தில் சம வயதுடைய ஆண் பெண்களை ஒப்பிடும்போது பெண் மீன்கள் ஆண்களை விடச் சற்று பெரியவை.[9]
வாழ்விடம் மற்றும் நடத்தை
தொகுஇவை, காங்கோ ஜனநாயகக் குடியரசான மாவாம்பியில் உள்ள இட்டூரி ஆற்றிலிருந்து மட்டுமே காணப்படுகின்றன.[1] இம்மீன்கள் மனித நுகர்வுக்காக அறுவடை செய்யப்படுகிறது.[1] இப்பகுதியில் அடிக்கடி நடைபெறும் போர், சுரங்க செயல்களால் நிகழும் காடழிப்பு, தங்கச் சுரங்கத்திற்காகத் திருப்பி விடப்பட்ட நீரோட்டம் முதலியன இந்த உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.[1]
இம்மீன்கள் பூச்சியின் இளம் உயிரிகள், பாசிகள், காஸ்ட்ரோபாட்கள், பைவால்வ்கள், கடற்பாசிகள், ஓட்டுமீன்கள் மற்றும் பிற மீன்களின் முட்டைகளை உணவாக உட்கொள்கின்றன.[10] சினோடோன்டிஸின் பெரும்பாலான இனங்களின் இனப்பெருக்க முறைகள் குறித்து அறியப்படவில்லை. ஆனால் கருவுற்ற மீன்கள் இடும் கருமுட்டைகளின் எண்ணிக்கை குறித்து சிலதகவல்கள் உள்ளன.[11] சினை விடுதல் பருவ வெள்ளப்பெருக்கு சூலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையிலான ஏற்படுகிறது. இக்காலங்களில் ஆண் பெண் இணைகள் இணையாக ஒன்றாக நீந்தும் பழக்கமுடையன. மீனின் முதல் ஆண்டில் வளர்ச்சி விகிதம் அதிகமாகவும், பின்னர் வயது அதிகரிக்கும் போது குறைந்து காணப்படும்.[9]
மேகோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Moelants, T. (2010). "Synodontis iturii". IUCN Red List of Threatened Species 2010: e.T182077A7787056. doi:10.2305/IUCN.UK.2010-3.RLTS.T182077A7787056.en. https://www.iucnredlist.org/species/182077/7787056. பார்த்த நாள்: 15 January 2018.
- ↑ 2.0 2.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2016). "Synodontis iturii" in FishBase. June 2016 version.
- ↑ 3.0 3.1 3.2 "Synodontis iturii Steindachner, 1911". Planet Catfish. 24 Nov 2008. பார்க்கப்பட்ட நாள் 6 November 2016.
- ↑ Scharpf, Christopher; Kenneth Lazara (12 Sep 2016). "Order SILURIFORMES: Families MALAPTERURIDAE, MOCHOKIDAE, SCHILBEIDAE, AUCHENOGLANIDIDAE, CLAROTEIDAE and LACANTUNIIDAE". The ETYFish Project. பார்க்கப்பட்ட நாள் 6 November 2016.
{{cite web}}
: Unknown parameter|last-author-amp=
ignored (help) - ↑ 5.0 5.1 Cuvier, Georges (1934). The Animal Kingdom Arranged in Conformity with its Organization, Volume 10. Translated by Griffith, Edward. London: Whittaker and Co. p. 406.
- ↑ Boulenger, George Albert (1909). Catalogue of the fresh-water fishes of Africa in the British museum (Natural history). London: British Museum. p. 391.
- ↑ Nelson, Joseph; T. Grande; M. Wilson (2016). Fishes of the World (Fifth ed.). John Wiley and Sons. p. 227.
{{cite book}}
: Unknown parameter|last-author-amp=
ignored (help) - ↑ 8.0 8.1 Scherge, M.; S. Gorb; S. Gorb. Biological Micro- and Nanotribology. Springer Science & Business Media. pp. 97–98.
{{cite book}}
: Unknown parameter|last-author-amp=
ignored (help) - ↑ 9.0 9.1 H. M. Bishai; Y. B. Abu Gideiri (1965). "Studies on the biology of genus Synodontis at Khartoum". Hydrobiologia 26 (1–2): 85–97. doi:10.1007/BF00142257.
- ↑ Wright, J.J.; L.M. Page (2006). "Taxonomic Revision of Lake Tanganyikan Synodontis (Siluriformes: Mochokidae)". Florida Mus. Nat. Hist. Bull. 46 (4): 99–154.
- ↑ John P. Friel; Thomas R. Vigliotta (March 2, 2009). "Mochokidae Jordan 1923: African squeaker and suckermouth catfishes". Tree of Life Web Project]. பார்க்கப்பட்ட நாள் 19 October 2016.
{{cite web}}
: Unknown parameter|lastauthoramp=
ignored (help)
வெளி இணைப்புகள்
தொகு- விக்கியினங்களில் Synodontis iturii பற்றிய தரவுகள்