சைபீரிய செந்தொண்டை

சைபீரிய செந்தொண்டை
பறவை
பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
காலியோப்
இனம்:
கா. காலியோப்
இருசொற் பெயரீடு
காலியோப் காலியோப்
பாலாசு, 1776

     கோடை      குளிர்காலம்[2]
வேறு பெயர்கள்

லூசினியா காலியோப்

சைபீரிய செந்தொண்டை (காலியோப் காலியோப்) என்பது 1776-ல் பீட்டர் சைமன் பல்லாசால் முதன்முதலில் விவரிக்கப்பட்ட ஒரு சிறிய அமெரிக்கப் பாடும் பறவை சிற்றினம் ஆகும். இது முன்னர் அமெரிக்கப் பாடும் பறவை குடும்பமான துர்டிடேயின் கீழ் வகைப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது மீயூசிகாபிடே குடும்பத்தின் பழைய உலக ஈ-பிடிப்பான் பறவையாகக் கருதப்படுகிறது. சைபீரியன் ரூபித் மார்பு மற்றும் ஒத்த சிறிய ஐரோப்பியச் சிற்றினங்கள் பெரும்பாலும் அரட்டைகள் என்று அழைக்கப்படுகின்றன.

பரவல்

தொகு

இது சைபீரியாவில் அடிமரம் கொண்ட கலப்பு ஊசியிலையுள்ள காடுகளில் இனப்பெருக்கம் செய்யும் புலம்பெயரக்கூடிய பறவையாகும். இது பூச்சியுண்ணி வகையினைச் சார்ந்தது. இது தரைக்கு அருகில் கூடு கட்டுகிறது. தாய்லாந்து, இந்தியா, இந்தோனேசியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு குளிர்காலத்தில் இடம்பெயருகிறது (குளிர்கால வரம்பு வரைபடத்தைப் பார்க்கவும்). இது மேற்கு ஐரோப்பாவில் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இது ஐக்கிய இராச்சையம் வரை மேற்கில் மிகச் சில சந்தர்ப்பங்களில் காணப்பட்டது. இது அலூசியன் தீவுகளுக்கு மிகவும் அரிதான குறிப்பாக அட்டு தீவிற்கு வலசை வரும் பறவையாகும்.[3]

இந்த சிற்றினம் ஐரோப்பிய ராபினை விடச் சற்று பெரியது. சிவப்பு பக்கத் திட்டுகளுடன் கூடிய தனித்துவமான கருப்பு வாலுடன் மேற்புறம் பழுப்பு நிறத்தில் உள்ளது. இது வலுவான வெள்ளை கொண்டையிறகினைக் கொண்டது. ஆணின் சிவப்பு தொண்டை விளிம்பில் குறுகிய கருப்பு மற்றும் பரந்த வெள்ளை நிறமுள்ளது. பெண் பறவை பிரகாசமான நிறமுள்ள தொண்டையுடன் கூடியது. ஆணின் ஓசையானது தோட்ட சிலம்பன் எழுப்பும் ஓசை போன்று கடினமானது.

சைபீரிய செந்தொண்டை முன்பு லூசினியா பேரினத்தில் வைக்கப்பட்டது. 2010-ல் வெளியிடப்பட்ட ஒரு இன உறவுமுறை மூலக்கூறு ஆய்வில் லூசினியா ஒற்றைத்தொகுதி மரபு உயிரினத் தோற்ற உயிரி அல்ல என்று கண்டறியப்பட்டது. எனவே இப்பேரினமானது பிரிக்கப்பட்டு, சைபீரியன் வெந்தொண்டை உட்படப் பல சிற்றினங்கள் மாதிரி இனங்களாகக் கேலியோப் பேரினத்திற்கு மாற்றப்பட்டன.[4][5] காலியோப் என்ற சொல்லின் பொருள் "அழகான குரல்" என்பதாகும். இது பண்டைய கிரேக்க மொழியிலிருந்து வந்தது

 
பெண்
 
ஆண்

தமிழகத்தில்

தொகு

அண்மையில் சைபீரிய செந்தொண்டை தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் குளிர்கால வலசையாக வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Calliope calliope". IUCN Red List of Threatened Species 2016: e.T22709701A87886433. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709701A87886433.en. https://www.iucnredlist.org/species/22709701/87886433. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Urs N. Glutz von Blotzheim; K. M. Bauer (1988). Handbuch der Vögel Mitteleuropas. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-923527-00-4.
  3. "The British List". British Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 24 September 2010.
  4. Sangster, G.; Alström, P.; Forsmark, E.; Olsson, U. (2010). "Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatchers reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae)". Molecular Phylogenetics and Evolution 57 (1): 380–392. doi:10.1016/j.ympev.2010.07.008. பப்மெட்:20656044. 
  5. Gill, Frank; Donsker, David, eds. (2016). "Chats, Old World flycatchers". World Bird List Version 6.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 May 2016.
  6. https://www.thehindu.com/news/cities/Coimbatore/siberian-rubythroat-recorded-in-the-nilgiris/article66148255.ece

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைபீரிய_செந்தொண்டை&oldid=3606383" இலிருந்து மீள்விக்கப்பட்டது