சோகோ கழகம்

சென்னையை மையமாகக் கொண்ட மென்பொருள் மேம்பாட்டு நிறுவனம்

சோகோ கழகம் ஒரு இந்திய மென்பொருள் மேம்பாட்டு நிறுவனம். சோகோ கழகம் இணைய அடிப்படையிலான வணிக கருவிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது. இதில் அலுவலக கருவிகள் தொகுப்பு, இணைய மேலாண்மை தளத்தின் இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப மேலாண்மை மென்பொருளின் தொகுப்பு ஆகியவை அடங்கும். இந்நிறுவனம் 1996 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் ப்ளேசன்டனில் ஸ்ரீதர் வேம்பு மற்றும் டோனி தாமஸ் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப்போது ஏழு நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன. அதன் உலகளாவிய தலைமையகம் சென்னையில் உள்ளது.

zoho Corporation Pvt. Ltd
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1996
நிறுவனர்(கள்)ஸ்ரீதர் வேம்பு
டோனி தாமஸ்
தலைமையகம்சென்னை, தமிழ் நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகெங்கும்
பணியாளர்9,000+[1]
இணையத்தளம்zohocorp.com

வரலாறு

தொகு

1996 முதல் 2009 வரை, இந்நிறுவனம் அட்வென்ட்நெட், இன்க் என்று அறிப்பட்டது.

அட்வென்ட்நெட், ஜூன் 2001 இல் ஜப்பானுக்கு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது. சோகோ சிஆர்எம் 2005 இல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து திட்டங்கள், உருவாக்குநர் மற்றும் தாள் போன்ற இணைய சேவைகள் 2006 இல் வெளியிடப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் சோகோ டாக்ஸ் மற்றும் சோகோ சந்திப்பு போன்ற இணைய சேவை தொடங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் நிறுவனம் விலைப்பட்டியல் மற்றும் அஞ்சல் பயன்பாடுகளைச் சேர்த்தது. மேலும் அந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்குள் 10 லட்சம் (1 மில்லியன்) பயனர்களை எட்டியதாகக் கூறுகிறது.[2]

2009 ஆம் ஆண்டில், இந்நிறுவன் அதன் மென்பொருட்களின் பெயரான சோகோவின் பெயரிலேயே சோகோ கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3] இந்நிறுவனம் வெளி நபர்களின் நிதி இல்லாமல் தொடங்கப்பட்டு வளர்ந்தது. இந்நிறுவனம் தனியாருக்கு சொந்தமானது.[4]

2005 முதல் ஒவ்வொரு ஆண்டும், சோகோ கூடுதல் பயன்பாடுகளை வெளியிட்டுள்ளது. மேலும் 2017 ஆம் ஆண்டில் நாற்பதுக்கும் அதிகமான சோகோ பயன்பாடுகளின் விரிவான தொகுப்பான சோகோ ஒன்று மென்பொருள் தொகுப்பை வெளியிட்டது.[5]

இடங்கள்

தொகு

சோகோவின் அமெரிக்க தலைமையகம் தற்போது கலிபோர்னியாவில் உள்ளது.[5] இதன் தலைமையகத்தை ஆஸ்டினிற்கு 2021க்கு மாற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.[6] ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகம் சென்னை எஸ்டான்சியா ஐடி பூங்காவில் உள்ளது. சோகோவுக்கு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியில் ஒரு அலுவலகம் உள்ளது. அங்கிருந்து சோகோ டெஸ்க் என்னும் இணைய மென்பொருளைத் தயாரித்து வெளியிட்டனர். இந்நிறுவனம் சீனாவில் இயங்குகிறது மற்றும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானிலும் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. அதன் ஆதரவு நடவடிக்கைகளில் பெரும்பகுதி சென்னையில் உள்ள அதன் அலுவலகத்திலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. சோகோவிற்கு ஆந்திராவின் ரெனிகுண்டாவிலும் ஒரு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் 2018 முதல் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படுவதற்கான காரணமாக, வெளிநாட்டு முதலீடு இல்லாமல் இந்நிறுவனம் இயங்கிவருவதே காரணம் என்றார் இதன் நிறுவனர்.[7]

சோகோ கழகம், தனது நிறுவனத்திற்கு தேவையான பணியாட்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சோகோ பல்கலைக்கழகம் ஒன்றை நடத்தி வருகிறது. சோகா பல்கலைக்கழகம் இரண்டு இடங்களில் செயல்படுகிறது. தென்காசி மற்றும் சென்னை ஆகிய இரு இடங்களில் செயல்படுகிறது.[8]

கல்லூரியில் படிக்கமுடியாமல் பள்ளிப்படிப்பை முடித்த பல மாணவர்களை சோகோ கழகம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சிகளை அளித்து அதன் நிறுவனத்திலேயே வேலை வாய்ப்பையும் அளிக்கிறது.[9]

2019இல் இந்நிறுவனம், தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு தங்களது இணைய மென்பொருள் சேவையை சலுகை விலையில் கொடுக்க இருப்பதாக தெரிவித்தது.[10]

மேலும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Palliyalil, Rasheed (13 December 2018). "Zoho Analytics offers data auto-blending and AI-powered assistance for making smarter business decisions". Thomson Reuters Zawya. https://www.zawya.com/mena/en/companies/story/Zoho_Analytics_offers_data_autoblending_and_AIpowered_assistance_for_making_smarter_business_decisions-ZAWYA20181213122136/. பார்த்த நாள்: 28 December 2018. 
  2. "How Sridhar Vembu's Zoho Corporation changed avatars since its inception in 1996 as AdventNet". The Economic Times. 2011-11-18. https://economictimes.indiatimes.com/india-emerging/how-sridhar-vembus-zoho-corporation-changed-avatars-since-its-inception-in-1996-as-adventnet/articleshow/10686644.cms?from=mdr. 
  3. Arakali, Harichandan (6 June 2016). "The Bootstrapped Buddhist: How Sridhar Vembu built Zoho". Forbes India இம் மூலத்தில் இருந்து 21 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6lPvwMG6I?url=http://www.forbesindia.com/article/boardroom/the-bootstrapped-buddhist-how-sridhar-vembu-built-zoho/43383/1. பார்த்த நாள்: 21 October 2016. 
  4. Kumar, K. Bharat (2016-05-08). "The maverick who shuns investors". The Hindu. https://www.thehindu.com/business/Industry/the-maverick-who-shuns-investors/article8573158.ece. பார்த்த நாள்: 2019-07-22. 
  5. 5.0 5.1 "About Zoho - Our Story, List of Products". Zoho Corporation. பார்க்கப்பட்ட நாள் 28 December 2018.
  6. Cantu, Tony (April 9, 2019). "California Software Firm Zoho To Move Headquarters To Austin". Patch Media. பார்க்கப்பட்ட நாள் April 10, 2019.
  7. VK, Prasanna (2017-05-02). "மைக்ரோசாப்ட், கூகிள், ஆரக்கிள் நிறுவனங்களைத் திரும்பிப்பார்க்க வைத்த 'ஸ்ரீதர் வெம்பு'..!". tamil.goodreturns.in. பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.VK, Prasanna (2017-05-02). "மைக்ரோசாப்ட், கூகிள், ஆரக்கிள் நிறுவனங்களைத் திரும்பிப்பார்க்க வைத்த 'ஸ்ரீதர் வெம்பு'..!". tamil.goodreturns.in. பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.
  8. "Home - Zoho University". www.zohouniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.
  9. Aiyar, Dr Gopalakrishnan. "An IT Firm – 'Zoho', Hires 'High-School Pass Outs' And Turns Them Into 'Software Programmers'" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.
  10. India, Press Trust of (2019-06-26). "Zoho to offer software at discounted rate for MSMEs in Tamil Nadu". YourStory.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோகோ_கழகம்&oldid=3906010" இலிருந்து மீள்விக்கப்பட்டது