சோடியம் ஆர்சனைட்டு

சோடியம் ஆர்சனைட்டு (Sodium arsenite) என்பது NaAsO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது சோடியம் மெட்டா ஆர்சனைட்டு என்றும் அழைக்கிறார்கள். ஆர்சனசு அமிலத்தினுடைய சோடியம் உப்பு சோடியம் ஆர்சனைட்டு எனப்படுகிறது. சோடியம் ஆர்த்தோ ஆர்சனைட்டு Na3AsO3 என்ற மூலக்கூற்று வய்ப்பாட்டால் குறிக்கப்படுகிறது [2]. இச்சேர்மங்கள் நிறமற்ற திண்மங்களாக உள்ளன. கேட்டனா-ஆர்சனைட்டு சங்கிலிகள்

சோடியம் ஆர்சனைட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் ஆர்சனைட்டு
வேறு பெயர்கள்
சோடியம் ஆர்சனேட்டு (III)
இனங்காட்டிகள்
7784-46-5 Y
ChEBI CHEBI:29678 N
EC number 232-070-5
InChI
  • InChI=1S/AsHO2.Na/c2-1-3;/h(H,2,3);/q;+1/p-1
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C11906 N
பப்கெம் 443495
SMILES
  • [O-][As]=O.[Na+]
பண்புகள்
NaAsO2
வாய்ப்பாட்டு எடை 129.91 கி/மோல்
தோற்றம் வெண்மை அல்லது சாம்பல் தூள்
நீருறிஞ்சும்
அடர்த்தி 1.87 கி/செ.மீ 3
உருகுநிலை 550 °C (1,022 °F; 823 K) சிதைவடையும்
156 கி/100 மி.லி
கரைதிறன் ஆல்க்காலில் சிறிதளவு கரையும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R23,R25,R45
Lethal dose or concentration (LD, LC):
41 மி.கி/கி.கி (எலி,வாய்வழி)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
[1910.1018] TWA 0.010 மி.கி/மீ3[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca C 0.002 மி.கி/மீ3 [15-நிமிடம்][1]
உடனடி அபாயம்
Ca [5 மி.கி/மீ3 (As ஆக)][1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு மற்றும் கட்டமைப்பு தொகு

ஆர்சனிக் டிரையாக்சைடுடன் சோடியம் கார்பனேட்டு அல்லது சோடியம் ஐதராக்சைடு சேர்த்து வேதிவினைக்கு உட்படுத்தினால் சோடியம் மெட்டா - ஆர்சனைட்டு மற்றும் சோடியம் ஆர்தோ ஆர்சனைட்டுகளின் கலவை உருவாகிறது [3]. பொதுவாக சோடியம் ஆர்சனேட்டு என்பது ஒரு குறிப்பிட்ட வடிவமற்ற படிக உருவமற்ற தூள் ஆகும். நிறமற்ற தூளாக அல்லது கண்ணாடி போன்ற பளபளப்பான ஒரு பொதியாக இது பெறப்படுகிறது. இந்த கலவை சோடியம் நேர்மின் அயனியுடன் (Na +) சேர்ந்த [AsO2]n− nn
n பலபடியை உட்கூறாகக் கொண்டுள்ளது. -O-As(O−)-. - என்ற முதன்மை இணைப்பு பலபடியின் முதுகெலும்பாக உள்ளது[4]

தீமைகள் தொகு

நுகர்தல் அல்லது தோல் மூலமாக சோடியம் ஆர்சனைட்டு அதன் புற்றுநோய் மற்றும் கரு ஊனப் பண்புகளுடன் மனித உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. இச்சேர்மத்தை தொடநேர்ந்தால் தோல் எரிச்சல், தீக்காயம், அரிப்பு, தடித்த தோல், வெடிப்பு, நிறமிழப்பு, பசியின்மை, நாக்கில் ஒருவித உலோக அல்லது பூண்டு சுவை, வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மன அழுத்தம், இரத்த அழுத்தம் மற்றும் தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம். அதிகப்படியான சோடியம் ஆர்சனைட்டு நரம்பு மண்டல சேதத்திற்கு வழிவகுக்கலாம். இதனால் உடல் பலவீனம், ஒருங்கிணைப்பின்மை, இறுதியில் முடக்குவாதம் மற்றும் மரணமும் கூட ஏற்படலாம்[5][6]

பயன் தொகு

பெரும்பாலும் சோடியம் ஆர்சனைட்டு ஒரு பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மேலும் பதப்படுத்தியாகவும், கிருமிநாசினியாகவும், சாயமிடுதல் மற்றும் சோப்பு தயாரித்தலிலும் பயன்டுகிறது.[7] வெப்ப அதிர்ச்சி வகை புரதங்கள்[8] மற்றும் சைட்டோபிளாச அழுத்த மணித்துகள்களில்[9] உற்பத்திக்கு சோடியம் ஆர்சனைட்டு பயன்படுகிறது.

பாதுகப்பு தொகு

சுண்டெலிகளுக்கு வாய்வழியாக கொடுக்கப்பட்டால் சோடியம் ஆர்சனைட்டின் உயிர்கொல்லும் நச்சு அளவு (LD50) 40 மில்லி கிராம்/கிலோகிராம் ஆகும் [3] 

References தொகு

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0038". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. ISBN 0-7506-3365-4.
  3. 3.0 3.1 Grund, S. C.; Hanusch, K.; Wolf, H. U. (2005), "Arsenic and Arsenic Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a03_113.pub2{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)CS1 maint: Multiple names: authors list (link)Grund, S. C.; Hanusch, K.; Wolf, H. U. (2005), "Arsenic and Arsenic Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a03_113.pub2{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Eagleton M. (2011). Concise Encyclopedia Chemistry. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3110114518. 
  5. New Jersey Department of Health and Senior Services.
  6. Jing J; Zheng G; Liu M; Shen X; Zhao F; Wang J; Zhang J; Huang G et al. (2012). "Changes in the synaptic structure of hippocampal neurons and impairment of spatial memory in a rat model caused by chronic arsenite exposure". Neurotoxicology 33 (5): 1230–8. doi:10.1016/j.neuro.2012.07.003. பப்மெட்:22824511. 
  7. Considine G.D. (2005). Van Nostrand’s Encyclopedia of Chemistry. 14th Ed. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471615250. 
  8. Bhagat L; Singh VP; Dawra RK; Saluja AK; ‘’et al.’’ (2008). "Sodium arsenite induces heat shock protein 70 expression and protects against secretagogue-induced trypsinogen and NF-kappaB activation". J Cell Physiol 215 (1): 37–46. doi:10.1002/jcp.21286. பப்மெட்:17941083. 
  9. McEwen, Edward; Kedersha, Nancy; Song, Benbo; Scheuner, Donalyn; Gilks, Natalie; Han, Anping; Chen, Jane-Jane; Anderson, Paul et al. (2005-04-29). "Heme-regulated Inhibitor Kinase-mediated Phosphorylation of Eukaryotic Translation Initiation Factor 2 Inhibits Translation, Induces Stress Granule Formation, and Mediates Survival upon Arsenite Exposure" (in en). Journal of Biological Chemistry 280 (17): 16925–16933. doi:10.1074/jbc.M412882200. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9258. பப்மெட்:15684421. http://www.jbc.org/content/280/17/16925. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_ஆர்சனைட்டு&oldid=2738012" இலிருந்து மீள்விக்கப்பட்டது