சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு

சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு (Sodium dihydrogen arsenate) என்பது NaH2AsO4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதனுடன் தொடர்புள்ள இருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு (Na2HAsO4) உள்ளிட்ட பிறவுப்புகளும் சோடியம் ஆர்சனேட்டு என்றே அழைக்கப்படுகின்றன. நிறமற்ற திண்மமான இச்சேர்மம் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட ஒரு நச்சுப்பொருளாகும். ஆர்சனிக் அமிலத்தினுடைய இணை காரமாகவும் இவ்வுப்பு கருதப்படுகிறது.

சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் டை ஐதரசன் ஆர்சனேட்டு
வேறு பெயர்கள்
ஒருகார சோடியம் ஆர்சனேட்டு, சோடியம் ஆர்சனேட்டு
இனங்காட்டிகள்
10103-60-3 Y
பப்கெம் 23677060
பண்புகள்
NaH4AsO5 (monohydrate)
வாய்ப்பாட்டு எடை 181.9 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திண்மம்
அடர்த்தி 2.53 கி/செ.மீ3
சிறிதளவு கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
H3AsO4 is in equilibrium with H2AsO
4
+ H+ (K1 = 10−2.19)

நிறைவுற்ற நீர்த்த கரைசலைச் சூடாக்கி ஒருநீரேற்றாக படிகமாக்கும் முறையே ஆய்வகத்தில் இச்சேர்மத்தைத் தயாரிக்கும் முறையாக உள்ளது. சூடான நிலையில்தான் கரைசலில் இச்சேர்மம் முழுமையாக கரைகிறது. (100 பாகை செல்சியசு வெப்பநிலையில் 100 மில்லி லிட்டரில் 75.3 கிராம்)

ஒருநீரேற்றுப் படிகத்தை (NaH2AsO4H2O) மேலும் சூடாக்கினால் திணமநிலையில் உள்ள இச்சேர்மம் நீரை இழந்து பைரோ ஆர்சனேட்டு உப்பாக (Na2H2As2O7) மாறுகிறது[1].

மேற்கோள்கள்

தொகு
  1. P. W. Schenk "Arsenic, Antimony, Bismuth" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 602.