சோடியம் ஐதரோசல்பைடு

வேதிச் சேர்மம்

சோடியம் ஐதரோசல்பைடு (Sodium hydrosulfide) என்பது NaHS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் ஐதராக்சைடுடன் ஐதரசன் சல்பைடு (H 2 S) சேர்க்கப்படும்போது நிகழும் அரை நடுநிலைப்படுத்தலின் விளைவாக இச்சேர்மம் தோன்றுகிறது. கரிம மற்றும் கனிம கந்தக சேர்மங்களின் தயாரிப்புக்கு சோடியம் ஐதரோசல்பைடு ஒரு பயனுள்ள வினையாக்கியாகும்.. சில நேரங்களில் ஒரு திண்ம வினையாக்கியாகவும் பெரும்பாலும் நீரிய கரைசலாகவும் இவ்வினையாக்கி பயன்படுகிறது. திண்மநிலை சோடியம் ஐதரோசல்பைடு நிறமற்றது, மேலும் வளிமண்டல ஈரப்பதத்தால் ஏற்படும் நீராற்பகுப்பு காரணமாக பொதுவாக H 2 S போல நெடியை தருகிறது. கரிம கரைப்பான்களில் கரையாத சோடியம் சல்பைடுக்கு (Na 2 S) எதிராக இது கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. 1: 1 மின்பகுளியாக இருக்கும்போது மிக அதிகமாக கரைகிறது. கரிம வேதியியல் அமீனுடன் சோடியம் ஐதரோசல்பைடுக்கு பதிலாக ஐதரசன் சல்பைடை சேர்த்து சூடாக்கினால் அமோனியம் உப்பை உருவாக்கலாம். HS− எதிர்மின் அயனியின் கரைசல்கள் ஆக்சிசன் உணரிகளாகும். இவை பல்சல்பைடுகளாக மாற்றுவதில் ஈடுபடுகின்றன. மஞ்சள் நிறம் தோன்றுவதிலிருந்து இதை அடையாளம் காணலாம்.

சோடியம் ஐதரோசல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் ஐதரோசல்பைடு
வேறு பெயர்கள்
சோடியம் பைசல்பைடு
சோடியம் கந்தகநீரேற்று
சோடியம் ஐதரசன் சல்பைடு
இனங்காட்டிகள்
16721-80-5 Y
207683-19-0 (hydrate) N
ChEMBL ChEMBL1644699 N
ChemSpider 26058 Y
EC number 240-778-0
InChI
  • InChI=1S/Na.H2S/h;1H2/q+1;/p-1 Y
    Key: HYHCSLBZRBJJCH-UHFFFAOYSA-M Y
  • InChI=1/Na.H2S/h;1H2/q+1;/p-1
    Key: HYHCSLBZRBJJCH-REWHXWOFAV
IUPHAR/BPS
6278
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 28015
வே.ந.வி.ப எண் WE1900000
  • [Na+].[SH-]
UNII FWU2KQ177W Y
பண்புகள்
NaSH
வாய்ப்பாட்டு எடை 56.063 கி/மோல்
தோற்றம் அரை வெண்மை திண்மம், நீர் உறிஞ்சும் திறன்
அடர்த்தி 1.79 கி/செ.மீ3
உருகுநிலை 350.1 °C (662.2 °F; 623.2 K) (நிரிலி)
55 °செ (இருநீரேற்று)
22 °செ (முந்நீரேற்று)
50 கி/100 மி.லி (22 °செ)
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரைகிறது
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றும் திண்மம், ஐதரசன் சல்பைடு வெளியேறுவதால் துர்நாற்றமடிக்கும்.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் TDC MSDS
R-சொற்றொடர்கள் R17 R23 R24 R25
தீப்பற்றும் வெப்பநிலை 90 °C (194 °F; 363 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் ஐதராக்சைடு
சோடியம் அமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் அமோனியம் ஐதரோசல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கட்டமைப்பும் பண்புகளும்

தொகு

படிகநிலை சோடியம் ஐதரோசல்பைடு இரண்டு கட்ட மாற்றங்களுக்கு உட்படுகிறது. 360 கெல்வின் வெப்பநிலைக்கு மேல் சோடியம் குளோரைடின் கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது, HS - அயனி அதன் விரைவான சுழற்சியின் காரணமாக ஒரு கோள எதிர்மின் அயனியாக செயல்படுகிறது, கட்டமைப்பில் எட்டு சமமான நிலைகளை சமமாக ஆக்கிரமிக்கவும் இது வழிவகுக்கிறது. 360 கெல்வின் வெப்பநிலைக்கு கீழே செஞ்சாய்சதுர கட்டமைப்பு உருவாகிறது. HS− எதிர்மின் அயனி தட்டு வடிவமாக மாறுகிறது. 114 கெல்வின் வெப்பநிலைக்கு கீழ் படிகம் ஒற்றை சாய்வு கட்டமைப்பிற்கு மாறுகிறது. சோதியத்தின் ஒத்த வரிசை சேர்மங்களான பொட்டாசியம், ருபீடியம் சேர்மங்களும் இம்முறையில் செயல்படுகின்றன[1]

சோடியம் ஐதரோசல்பைடு 350 பாகை செல்சியசு என்ற குறைந்த வெப்பநிலையில் உருகுகிறது. மேற்கூறிய நீரிலி வடிவங்களுடன் கூடுதலாக இச்சேர்மத்தின் இரண்டு வெவ்வேறு வகையான நீரேற்றுகளாகப் பெறலாம். NaHS .2H 2 O மற்றும் NaHS.3H 2 O. என்பவை இந்த இரண்டு வகைகளாகும். சோட்டியம் ஐதரோசல்பைடின் மூன்று வகைகளும் நிறமற்றவைகளாகும். , அதேபோல் செயல்படுகின்றன ஆனால் ஒரே மாதிரியாக இல்லை.

தயாரிப்பு

தொகு

வழக்கமான ஆய்வகத் தயாரிப்பு முறை ஐதரசன் சல்பைடுடன் சோடியம் மெத்தாக்சைடு (NaOMe) சேர்த்து சூடாக்குவது ஆகும்:[2]

NaOMe + H2S → NaHS + MeOH.

தொழில்துறை ரீதியாக, சோடியம் ஐதராக்சைடு ஒரு காரமாகப் பயன்படுத்தப்படுகிறது. சோடியம் ஐதரோசல்பைடின் தரத்தை HS எதிர்மின் அயனியின் அயோடினாக ஒடுக்கும் பன்பை பயன்படுத்தி அயோடோமெட்ரிக் தரம்பார்த்தல் மூலம் மதிப்பிடலாம், நீர் மற்றும் ஆக்சிசன் இல்லாத சூழலில் ஐதரசன் சல்பைடு வாயுவுடன் சுத்தமான திண்ம சோடியம் உலோகத்தை சேர்த்து வினை புரியச் செய்தால் நீரற்ற சோடியம் ஐதரோசல்பைடு உருவாகிறது[3]

பயன்பாடுகள்

தொகு

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டன் சோடியம் ஐதரோசல்பைடு உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் முக்கிய பயன்பாடுகள் துணி மற்றும் காகித உற்பத்தியில் கிராப்ட்டு செயல்முறையில் பயன்படுத்தப்படும் கந்தகத்திற்கான சரிகட்டும் இரசாயனமாகவும், செப்பு சுரங்கத்தில் ஒரு மிதக்கும் முகவராகவும், ஆக்சைடு கனிம இனங்களை செயல்படுத்தவும், தோல் தொழிலில் தலைமுடியை நீக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. .

மேற்கோள்கள்

தொகு
  1. Haarmann, F.; Jacobs, H.; Roessler, E.; Senker, J. (2002). "Dynamics of anions and cations in hydrogensulfides of alkali metals (NaHS, KHS, RbHS): A proton nuclear magnetic resonance study". J. Chem. Phys. 117 (3): 1269–1276. doi:10.1063/1.1483860. 
  2. Eibeck, R. I. (1963). "Sodium Hydrogen Sulfide". Inorg. Synth.. Inorganic Syntheses 7: 128–31. doi:10.1002/9780470132388.ch35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-13238-8 
  3. J. W. Pavlik, B. C. Noll, A. G. Oliver, C. E. Schulz, W. R. Scheidt, “Hydrosulfide (HS) Coordination in Iron Porphyrinates”, Inorganic Chemistry, 2010, vol. 49(3), 1017-1026.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_ஐதரோசல்பைடு&oldid=3388113" இலிருந்து மீள்விக்கப்பட்டது