சோடியம் பெர்மாங்கனேட்டு

சோடியம் பெர்மாங்கனேட்டு (Sodium permanganate) NaMnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன், நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது. ஆனால், இதன் தயாரிப்பு முறையானது அதிக செலவினத்தை ஏற்படுத்துவதால், பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் ஒப்பிடும் போது குறைவான அளவிலேயே விரும்பத்தக்கதாகும். இது முக்கியமாக ஒற்றை ஐதரேட்டாக கிடைக்கிறது.

சோடியம் பெர்மாங்கனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் மாங்கனேட்டு(VII)
வேறு பெயர்கள்
சோடியம் பெர்மாங்கனேட்டு, சோடியத்தின் பெர்மாங்கனேட்டு
இனங்காட்டிகள்
10101-50-5 N
ChemSpider 23303 Y
InChI
  • InChI=1S/Mn.Na.4O/q;+1;;;;-1 Y
    Key: WPWYHBSOACXYBB-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Mn.Na.4O/q;+1;;;;-1/rMnO4.Na/c2-1(3,4)5;/q-1;+1
    Key: WPWYHBSOACXYBB-NJUWVQTAAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23673458
வே.ந.வி.ப எண் SD6650000
  • [Na+].[O-][Mn](=O)(=O)=O
UNII IZ5356R281 N
பண்புகள்
NaMnO4
வாய்ப்பாட்டு எடை 141.9254 கி/மோல்
159.94 கி/மோல்(ஒற்றை ஐதரேட்டு)
தோற்றம் சிவப்புத் திண்மம்
அடர்த்தி 1.972 கி/செமீ3 (ஒற்றை ஐதரேட்டு)
உருகுநிலை 36 °C (97 °F; 309 K) (170 °C for trihydrate)
90 கி/100 மிலி
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிசனேற்றி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இந்த உப்பானது நீரை வளிமண்டலத்திலிருந்து உட்கவரும் தன்மையையும், குறைவான உருகுநிலையையும் கொண்டுள்ளது. KMnO4ஐ விட 15 மடங்கு அதிக கரையும் தன்மை பெற்றுள்ளதால், சோடியம் பெர்மாங்கனேட்டு உயர் செறிவுள்ள MnO4 அயனிகளின் செறிவு வேண்டப்படும் நேர்வுகளில் சில குறிப்பிட்ட பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

தயாரிப்பு மற்றும் பண்புகள்

தொகு

சோடியம் பெர்மாங்கனேட்டை KMnO4 தயாரிக்கப்படும் வழிமுறையைப் பயன்படுத்தி தயாரிக்க முடிவதில்லை. ஏனெனில், தேவைப்படும் இடைநிலைப் பொருளான மாங்கனேட்டு உப்பானது, Na2MnO4, உருவாவதில்லை. ஆகவே, இந்த உப்பைத் தயாரிப்பதற்கு KMnO4 இலிருந்து மாற்றம் செய்யப்படும் முறையையும் உள்ளடக்கி மிகக்குறைவான நேரடியான தயாரிப்பு முறைகளே உள்ளன.[1]

சோடியம் பெரமாங்கனேட்டு பொட்டாசியம் பெர்மாங்கனேட்டினை ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளது. இது நீரில் உடனடியாகக் கரைந்து அடர் செவ்வூதா  நிறத்தைக் கொண்ட கரைசலைத் தருகிறது. இந்தக்கரைசலை ஆவியாக்கும் போது முப்பட்டக வடிவுள்ள, செவ்வூதா-கரு நிற, மின்னக்கூடிய, படிக வடிவ NaMnO4·H2O ஒற்றை ஐதரேட்டைத் தருகிறது. பொட்டாசியம் உப்பு ஐதரேட்டை உருவாக்குவதில்லை. இதன் நீர் உறிஞ்சும் இயல்பின் காரணமாக, இந்த உப்பு பொட்டாசியம் உப்பினைக் காட்டிலும், பகுப்பாய்வு வேதியியலில் பயன்படுகிறது.

இது சோடியம் ஐப்போகுளோரைட்டுடனான மாங்கனீசு டை ஆக்சைடின் வினையின் மூலமாகத் தயாரிக்கப்படுகிறது:

2 MnO2 + 3 NaOCl + 2 NaOH → 2 NaMnO4 + 3 NaCl + H2O

பயன்பாடுகள்

தொகு

இதன் அதிக கரைதிறனின் காரணமாக, இந்த உப்பின் நீர்க்கரைசல்கள் அரிப்பொரிப்பில் நிலைநிறுத்தியாகப் பயன்படும் அரிப்புத்தன்மை கொண்ட சாயமூன்றியாக மின்சுற்றுப் பலகையில் பயன்படுகிறது.[1] இந்த உப்பானது, நீர் சுத்திகரிப்பில் அதன் சுவை, மணம் மற்றும் நன்னீர் சிப்பிகள் கட்டுப்பாடு ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு மிகச் சிறப்பானதொரு புகழைப் பெற்று வருகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு